மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கடந்த சில மாதங்களில் தொடர் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், கடந்த 9 நாட்களாக வர்த்தகம் தொடர்ச்சியாக வளர்ச்சிப் பாதையில் உள்ளது. இந்த 9 நாள் காலகட்டத்தில் மட்டும் சென்செக்ஸ் குறியீடு சுமார் 2,600 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் கடந்த 2.5 வருடத்தில் இந்த 9 நாட்கள் தான் அதிக நாட்கள் தொடர்ச்சியாக வளர்ச்சிப் பாதையில் இருந்த காலமாகவும் உள்ளது. இதற்கு முன்பு 2018ல் ஏப்ரல் 05 முதல் ஏப்ரல் 17 வரையிலான காலகட்டத்தில் தொடர்ச்சியாக 9 வர்த்தக நாட்கள் சென்செக்ஸ் வளர்ச்சிப் பாதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சிறப்பான வளர்ச்சிக்கு என்ன காரணம் தெரியுமா வாங்கப் பார்ப்போம்..!
பட்டையைக் கிளப்பும் சீனா.. அதிர்ச்சியில் வல்லரசு நாடுகள்..!

செவ்வாய்க்கிழமை வர்த்தகம்
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற வர்த்தகச் சூழ்நிலையாலும், அன்னிய முதலீட்டின் அளவில் சரிவு ஏற்பட்டுள்ள காரணத்தாலும் இந்தியப் பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாகத் தொடர் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் வெறும் 31.71 புள்ளிகள் மட்டுமே உயர்ந்த நிலையில் சென்செக்ஸ் 9 நாள் தொடர்ந்து வளர்ச்சியை அடைந்து முதலீட்டாளர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.

என்ன காரணம்?
இந்த 9 நாள் தொடர் வளர்ச்சி 5 முக்கியக் காரணங்கள் உள்ளது.
1. 2020ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டு முடிவுகளைப் பல்வேறு காப்பரேட் நிறுவனங்கள் வெளியிடும் நிலையில், முதலீட்டாளர்கள் லாபத்திற்காக அதிகளவில் முதலீடு செய்தனர்.
2. ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை அறிவிப்புகள்
3. இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மக்களின் நம்பிக்கை.
4. மத்திய அரசின் பல்வேறு பொருளாதார மற்றும் நிதி ஊக்குவிப்பு நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் முக்கியக் காரணமாக உள்ளது
5. விழாக்கால வர்த்தக வளர்ச்சிக்காக நிறுவனங்கள் செய்யப்படும் முதலீடு, உற்பத்தி வளர்ச்சி ஆகியவை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

சரிவு
ஆனால் தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார மற்றும் நிதி ஊக்குவிப்பு நடவடிக்கைகளும், அறிவிப்புகள் போதுமானதாக இல்லை எனக் கருத்து நிலவி வரும் நிலையில். அடுத்த சில நாட்களில் அல்லது புதன்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் தனது தொடர் வளர்ச்சி பாதையில் இருந்து விலக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

வெளிநாட்டு முதலீடுகள்
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்திய பங்குச்சந்தையில் இருந்து செப்டம்பர் மாதம் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் 7,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரும்பப் பெற்றனர்.
இந்நிலையில் இந்த மாதம் இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளியேறும் முதலீடுகள் அளவு சற்று அதிகமாக இருக்கும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதேபோல் அக்டோபர் மாதத்தில் இந்தியச் சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் இதுவரை 5,757 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்துள்ளனர்.