இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து 5 அமர்வுகளாகவே பலத்த வீழ்ச்சி கண்டு வருகின்றது. இது வரும் வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரிக்கு மத்தியில் பலமான முதலீடுகள் வெளியேற்றம் கண்டு வருகின்றன.
இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக, அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது.
இதன் காரணமாக அன்னிய முதலீடுகள் தொடர்ச்சியாக வெளியேற்றம் கண்டு வருகின்றது.
சென்செக்ஸ் குறியீடு 1,980 புள்ளிகள் சரிவு.. என்ன காரணம்..?!

ரூ.18 லட்சம் கோடி இழப்பு
இதற்கிடையில் தொடர்ந்து கடந்த 5 அமர்வுகளில் 18 லட்சம் கோடி ரூபாய் பங்கு சந்தையில் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரண்டாம் தர பங்குகள் பலத்த சரிவினைக் கண்டுள்ளன. இதற்கிடையில் ஆறு பங்குகளில் 5 பங்குகள் சரிவினைக் கண்டுள்ளன. அதேபோல ஒவ்வொரு 4 பங்குகளிலும், 1 பங்குகள் லோவர் சர்க்யூட் ஆகி உள்ளது.

என்ன காரணம்?
இதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றமான சூழல், வட்டி விகித நடவடிக்கையில் எதிர்பார்ப்புக்கு முன்னதாக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் கூட்டம் நாளையும், நாளை மறு நாள் வங்கி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த வங்கிக் கூட்டத்தில் முக்கிய நடவடிக்கை எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

முதலீடுகள் வெளியேற்றம்
இதற்கிடையில் தான் பாதுகாப்பு கருதி சர்வதேச அளவிலான முதலீட்டாளர்கள் தங்களது கணக்கில் இருந்து, முதலீடுகளை வெளியேற்றி வருகின்றனர். பங்கு சந்தையில் மட்டும் அல்ல, கிரிப்டோகரன்சிகளில் இருந்தும் முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதுவரையில் அன்னிய முதலீட்டாளர்கள் நடப்பு மாதத்தில் இதுவரையில் 8800 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டினை வெளியேற்றியுள்ளனர். தொடர்ச்சியாக 4வது மாதமாக அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன.

சரியான இடம்
ஆனால் மிக மோசமான வீழ்ச்சியிலே உள்ள சந்தையானது நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் நல்ல சரிவில் உள்ள இந்த நிலையில், முதலீடுகளை ஈர்க்க சிறந்த இடமாகவும் பார்க்கப்படுகிறது. இது வாங்க சரியான நேரமாகவும் பார்க்கப்படுகிறது. பங்கு சந்தையின் தந்தை வாரன் பஃபெட்டின் கருத்து படி, சந்தையில் இருந்து முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டினை வெளியேற்றும்போது, முதலீடு செய்து வைக்கலாம். இது குறைந்த விலையில் பங்குகளை வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் அறிவிப்பு வருமா?
குறிப்பாக பிப்ரவரி 1 அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், அதில் நிறுவனங்களுக்கு சாதகமான ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வரலாமோ என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பங்கு விலைகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரியால்டி & டெக் பங்குகள் சரிவு
இதற்கிடையில் இன்றைய சந்தையில் ரியால்டி மற்றும் மெட்டல் பங்குகள் மோசமான சரிவினைக் கண்டுள்ளன. குறிப்பாக டெக்னாலஜி பங்குகளும் மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளன. குறிப்பாக சமீபத்தியில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட உணவு டெலிவரி நிறுவனமான சோமோட்டோ 5வது அமர்வாக சரிவினைக் கண்டு வருகின்றது.

ஸ்டார்ட் அப்
மேலும் பேடிஎம், பாலிசிபஜார், நய்கா உள்ளிட்ட ஸ்டார்ட்அப் பங்குகளும் கூட மோசமான சரிவினைக் கண்டுள்ளன. குறைந்த விலை நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவும் பார்க்கப்படுகிறது. எனினும் தொடரும் சரிவால் மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.