டெல்லி: கடந்த ஒரே வாரத்தில் 7 சிறந்த நிறுவனங்களின் சந்தை மூலதனம் 1.94 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதில் மிகப்பெரிய முன்னணி நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான், வழக்கம்போல முதலிடத்தில் உள்ளது.
இதனையடுத்து இரண்டாவது இடத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஐடி நிறுவனமான டிசிஎஸ் தான். இதே தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியும், இதே முன்னணி பொதுத்துறை வங்கியுமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் (SBI) அதிக சந்தை மதிப்பினை இழந்துள்ளன.

டாப் 10 நிறுவனங்கள்
இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இதே அடுத்தடுத்த இடங்களில் டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி ,கோடக் மகேந்திரா வங்கி, எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட வங்கிகளும் நிறுவனங்களின் சந்தை மூலதனம் அதிகரித்துள்ளது.

ரிலையன்ஸ் சந்தை மதிப்பு
வழக்கம் போல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் அதிகமாக உள்ளது. கடந்த வாரத்தில் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 60,034.51 கோடி ரூபாய் அதிகரித்து, 13,81,078.86 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அடுத்ததாக டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 41,040.98 கோடி ரூபாய் அதிகரித்து, 11,12,304.75 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கோடக் மகேந்திரா வங்கி
கோடக் மகேந்திரா வங்கியின் சந்தை மதிப்பு 28,011.19 கோடி ரூபாய் அதிகரித்து, 3,81,092.82 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 27,114.19 கோடி ரூபாய் அதிகரித்து, 5,17,325.3 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதுவே ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு 8,424.22 கோடி ரூபாய் அதிகரித்து, 4,21,503.09 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஹெச்டிஎஃப்சியின் சந்தை மூலதனம்
ஹெச்டிஎஃப்சி-யின் சந்தை மூலதனம் 1,038 கோடி ரூபாய் அதிகரித்து, 4,58,556.73 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும் பஜாஜ் பைனான்ஸின் சந்தை மதிப்பானது 12,419.32 கோடி ரூபாய் குறைந்து, 3,28,072.65 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பு 2590.08 கோடி ரூபாய் குறைந்து, 2,94,736.49 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

சென்செக்ஸ் நிலவரம்
இதே ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் 10,054.48 கோடி ரூபாய் அதிகரித்து, 3,74,253.88 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதே எஸ்பிஐ-யின் சந்தை மதிப்பானது 5,711.75 கோடி ரூபாய் குறைந்து, 3,42,526.59 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 1305.33 புள்ளிகள் அல்லது 1.90% ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.