விலையுயர்ந்த உலோகங்களில் தங்கத்திற்கு அடுத்த படியாக பட்டியலில் இருப்பது வெள்ளி தான். ஏழைகளின் தங்கமாக கருதப்படும் வெள்ளியின் விலையானது, இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது.
பண்டைய காலம் தொட்டு இன்று வரை நகைகளை அணிவது ஒரு பாரம்பரிய பழக்கமாக உள்ளது.
அதிலும் நடுத்தர வர்க்கத்தினரை பொருத்த வரையில் தங்கத்தினை விட, வெள்ளி விலை குறைவாக இருப்பதால் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் இன்றைய காலகட்டத்தில் வெள்ளி ஆபரணங்கள் என்பது பேஷனாகவும் உள்ளது.
ஈக்விட்டி திமெட்டிக் பிஎஸ்யூ எனர்ஜி எம்என்சி, டிவிடெண்ட் மியூச்சுவல் ஃபண்டுகள்! 12.10.2020 நிலவரம்!

வெள்ளியின் பங்கு
அதோடு பிறந்த குழந்தைக்கு அரை நாண் கொடியாகவும், கால் கொலுசாகவும், பெண்கள் முதல் வயதான பாட்டிகள் வரை கால் கொலுசு, கால் மெட்டி இப்படி பல வகையிலும் வெள்ளியினை பயன்படுத்துகின்றனர். இதே ஆண்கள் பிரேஸ்லெட் மற்றும் கை விரல் மோதிரம் என பலவகையிலும் வெள்ளியினை அணிகின்றனர். இப்படி மக்களின் வாழ்க்கையில் ஒன்றாக கலந்துள்ள வெள்ளிக்கு என்றுமே ஒரு தனி இடம் உண்டு.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
வெள்ளியின் விலையானது இன்று கிட்டதட்ட 1% குறைந்துள்ளது. தற்போது விலையானது 0.221 டாலர் குறைந்து, 25.050 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சற்று சரிவில் வர்த்தகமாகி வருகின்றது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளியின் விலையானது, இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் சரிவில் காணப்படுகின்றது. தற்போது வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 403 ரூபாய் குறைந்து, 62,695 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. கடந்த சில சந்தை தினங்களாக ஏற்றம் கண்டு வந்த வெள்ளியின் விலையானது, இன்று சற்று குறைந்துள்ளது.

ஆபரண வெள்ளியின் விலை
சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 62.60 ரூபாயாகவும், கிலோவுக்கு 1,200 ரூபாய் குறைந்து, 62,600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த ஐந்து தினங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த வெள்ளியின் விலையானது, இன்று சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விலை அதிகரிப்பு என்ன காரணம்?
வெள்ளியின் தேவையானது ஆபரணமாக மட்டும் அல்லாது, தொழில் துறையிலும் பயன்படுகிறது. தங்கத்தோடு ஒப்பிடும்போது, இது வேறுபட்ட ஒரு உலோகமாகும். எனினும் தற்போது இரு உலோகங்களும் ஒரே பாதையில் சென்று கொண்டுள்ளது. வெள்ளியின் தேவையானது தொழில் துறையில் அதிகம் உள்ள நிலையில், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அடுத்த ரெசிஸ்டன்ஸ் லெவல்
தற்போது வெள்ளியின் விலையானது 25.165 டாலர்களாக வர்த்தகமாகி வரும் நிலையில், இதே சப்போர்ட் லெவல் 25.50 டாலர்களாகும். இதே 25.85 டாலர்களை தாண்டினால், அடுத்த ரெசிஸ்டன்ஸ் லெவல் 26.20 டாலர், 26.30 டாலர்களாகும். இதனையடுத்து அடுத்தடுத்த ரெசிஸ்டன்ஸ் லெவல் 27 டாலர்களாகும்.

ஆபரணத் தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 4,865 ரூபாயாகவும், சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து, 38,920 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5,309 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து, 42,472 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று வாங்கலாமா?
தங்கம் மற்றும் வெள்ளி விலையினை பொறுத்தவரையில் நீண்ட கால நோக்கில் அதிகரிக்கும் என்றே கூறி வருகின்றனர். அதிலும் வெள்ளியின் தேவையானது தொழில் துறையில் அதிகம் உள்ள நிலையில், அது இன்னும் ஊக்கமாக இருக்கும். இதன் காரணமாக வெள்ளியின் விலையானது இன்னும் அதிகரிக்கவே நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளது.