இன்றைய காலகட்டத்தில் தங்கத்திற்கு இணையாக விரும்பி அணியப்படும் ஆபரணங்களில் வெள்ளியும் ஒன்று.
பண்டைய காலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு கால் கொலுசாகவும், இடைக்கு அரை நாண் ஆகவும் அணிவித்து வந்தனர்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது ஓரு பேஷனாகவும் மாறி வருகின்றது. ஆண்கள் பிரேஸ் லெட், கழுத்தில் செயின், மோதிரம், இதே பெண்களும் வகை வகையான பல வெள்ளி ஆபரணங்களை அணிந்து வருகின்றனர்.
வெறும் ரூ.4000ல் ஸ்மார்ட்போன்.. சியோமிக்கு செக் வைக்கத் துடிக்கும் முகேஷ் அம்பானி..!

பாரம்பரியத்தோடு ஒன்றிப் போன வெள்ளி
இது பொருளாதார ரீதியில் பின்னடைவில் உள்ளவர்களும் எளிதில் வாங்க முடியும். அதோடு வெள்ளி என்பது பாரம்பரியத்தோடு ஒன்றி போன ஒரு ஆபரணமும் கூட. இதில் தங்கத்தினை விட வெள்ளிக்கு மவுசு அதிகம். ஏனெனில் வெள்ளிக்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. இதனால் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே காலில் கொலுசும், இடுப்பில் அரை நாணாகவும் அணிவித்து வந்துள்ளனர். காரணமில்லாமல் நம் முன்னோர்கள் எதனையும் கூறவில்லை.

வெள்ளியின் பலன்கள்
அதோடு வெள்ளி கொலுசு உடல் பித்த சூட்டைத் தணிக்க வல்லது. இவற்றோடு பெண்கள் அணியும் காதணிகள், செயின்கள், வளையல்கள் போன்ற பெண்கள் அணியும் வெள்ளி ஆபரணங்கள், அவர்கள் கோடை காலங்களில் வெயிலில் செல்லும்போது உடல் சூட்டைத் தணிக்கும். மேலும் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் உடல் சக்தி அதிகரிக்கும். நாள் முழுவதும் வெளி வேலைகளில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் வெள்ளி ஆபரணங்கள் அணிவது அவசியம். இதனால் தான் ஆண்கள் பிரேஸ்லெட், செயின், மோதிரம் உள்ளிட்ட வெள்ளி ஆபரணங்கள் அணிகின்றனர்.

நடப்பு மாதத்தில் வெள்ளி விலை நிலவரம்
செப்டம்பர் மாத தொடக்கத்தில், சென்னையில் வெள்ளியின் விலையானது 68,710 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இதே செப்டம்பர் 15 அன்று அதிகபட்சமாக 69,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மட்டும் கிலோவுக்கு 6,400 ரூபாய் விலை குறைந்து, 60.600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆக மொத்தத்தில் நடப்பு மாத தொடக்கத்துடன் ஒப்பிடும்போது, இன்றுடன் வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 8,110 ரூபாய் குறைந்துள்ளது.

நடப்பு ஆண்டில் இதுவரையில் குறைந்தபட்ச விலை
நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெள்ளியின் அவ்வப்போது ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் சென்னையில் வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 49,350 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இது மார்ச் மாதத்தில் குறைந்தபட்சமாக கிலோவுக்கு 39,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இது தான் இதுவரை இந்தாண்டின் குறைந்தபட்ச விலையாகும்.

மற்ற மாதங்களில் என்ன நிலவரம்
இதன் பிறகு ஏப்ரல் மாதத்தில் வெள்ளி விலையானது 1.05% ஏற்றம் கண்டுள்ளது. இதே மே மாதத்தில் 0.73% ஏற்றத்திலும், ஜூன் மாதத்தில் 3.33% சரிவிலும் விற்பனை செய்யப்பட்டது. இதுவே ஜூலை மாதத்தில் 3.08% சரிவிலும் விற்பனை செய்யப்பட்டும் வந்தது. ஆனால் இந்த வருட தொடக்கம் முதல் கொண்டே குறைந்த மொத்த விலையினை விட, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 9.81% உச்சத்தினை எட்டியது. ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக கிலோவுக்கு 76,510 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்
அதெல்லாம் சரி இன்றைய தங்க ஆபரணத்தின் விலை என்ன? சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையானது கிராமுக்கு 54 ரூபாய் குறைந்து, 4,880 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 39,040 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 59 ரூபாய் குறைந்து, 5,323 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 472 ரூபாய் குறைந்து 42,584 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.