தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி விலையை பார்த்தீங்களா.. உச்சத்தில் இருந்து 30% வீழ்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளியின் விலையானது கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து 30% வீழ்ச்சியை கண்டுள்ளது. எனினும் மீடியம் டெர்ம் மற்றும் லாங்க் டெர்மில் வெள்ளி விலையானது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

 

எனினும் PAAS, HL, FSM ஆகிய மூன்று சுரங்கங்கள் நீண்ட கால நோக்கில் நல்ல ஆற்றலைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன. இது அடுத்த இரண்டு ஆண்டிலும் நல்ல வளர்ச்சியினை காணலாம் என்றும் எதிர்பார்க்கின்றன.

இதற்கிடையில் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை குறைவாக வைத்திருந்தாலும், ஊக்கத் தொகை பற்றிய செய்திகள் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுத்தது.

வெள்ளியின் விலை அதிகரிக்கலாம்

வெள்ளியின் விலை அதிகரிக்கலாம்

வெள்ளி விலையானது தற்போதைய நிலவரப்படி, மீடியம் டெர்ம் மற்றும் லாங்க் டெர்மில் வெள்ளி விலையானது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இது நல்ல வால்யூம் அதிகமாக காணப்படுகிறது. அதே ஆசிலேட்டர்களும் வெள்ளி விலைக்கு ஆதரவாகவே உள்ளன. அதாவது வெள்ளி விலை அதிகரிக்கலாம் என்ற நிலையிலேயே காணப்படுகின்றன. எல்லாவற்றையும் விட உச்சத்தில் இருந்து 30% வீழ்ச்சியில் காணப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

இன்றைய இண்ட்ராடே லெவல்

இன்றைய இண்ட்ராடே லெவல்

தற்போதைய லெவலில் வெள்ளியின் விலையினை நீண்டகால நோக்கில் வைத்துக் கொள்ளலாம். இது சைடுவேயாக வர்த்தகமானலும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். எனினும் குறுகிய கால நோக்கில் வெள்ளியினை வாங்க நினைப்பவர்கள் 64,070 ருபாய்க்கு மேல் வாங்கலாம் என்கிறது ஒரு அறிக்கை.

இண்ட்ராடே லெவல் - 63,722.9 ரூபாய்க்கு மேலே சென்றால் மட்டும் வாங்க நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இண்ட்ராடே சப்போர்ட் லெவல் - 61,843, 61,203, 62,240, 62,288

இண்ட்ராடே ரெசிஸ்டன்ஸ் லெவல் - 63,386, 64,026, 62,990, 63,043

தங்கத்தின் நிழலில் இருந்து வெளி வந்த வெள்ளி
 

தங்கத்தின் நிழலில் இருந்து வெளி வந்த வெள்ளி

ஒரு கட்டத்தில் தங்கம் விலையினை போலவே வெள்ளி விலையு,ம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது தங்கத்தின் நிழலில் இருந்து வெளி வந்துள்ளது வெள்ளி. இரண்டும் விலை மதிப்பற்ற உலோகங்கள் என்றாலும், இரண்டு உலோகங்களின் விலை விகிதமும் வேறு வேறு விகிதத்தில் வர்த்தகமாக தொடங்கியுள்ளன. ஏனெனில் தங்கம் ஒரு பாதுகாப்பு புகலிடமாக விளங்குகிறது. இதன் முதலீட்டு தேவை விலை அதிகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும். இது சர்வதேச பொருளாதாரத்தினை கொண்டு வர்த்தகமாகும். ஆனால் வெள்ளியோ தொழிற்துறை உலோகம்.

வெள்ளி தொழிற்துறை உலோகம்

வெள்ளி தொழிற்துறை உலோகம்

ஆக கொரோனா பெருந்தொற்றால் சரிந்து வரும் பொருளாதாரத்தினை கருத்தில் கொண்டு, தங்கம் பாதுகாப்பு புகலிடமாக மாறியது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக, அமெரிக்காவின் நிதி பற்றாக்குறை, கொரோனா தடுப்பூசி என பல காரணங்கள் தங்கத்திற்கு ஆதரவாகவே அமைந்தன. ஆனால் வெள்ளியோ அப்படி இல்லை, வளர்ந்து வரும் தொழிற்துறையில் அதன் தேவை அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக வெள்ளியின் விலை நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

தங்கம் அப்படியில்லை

தங்கம் அப்படியில்லை

ஆனால் நவம்பர் 3ல் வரவிருக்கும் அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு முன்னர் மூன்றாம் கட்ட, ஊக்கத்தொகை அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஊகத்தின் அடிப்படையிலேயே தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் சற்று சரிவினை கண்டு வந்தன. ஆனால் தற்போது வெள்ளி தனது பாதைக்கு திரும்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுசரியான நேரம் அல்ல என்கிறார்கள் நிபுணர்கள்.

பயன்பாடு அதிகரிப்பு

பயன்பாடு அதிகரிப்பு

தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2,090 டாலர்களாக உயர்ந்த நிலையில், வெள்ளியின் விலையும் அவுன்ஸூக்கும் 55% அதிகரித்தது. வெள்ளியின் விலையானது அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் கொரோனா பரவல் இருந்தாலும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இது பொருளாதாரத்தில் மீட்சி காண வழிவகுத்தது. ஆக இது சமீப மாதங்களாக விலை குறைய வாய்ப்பாக அமைந்தது. ஆனால் தற்போது தொழிற்சாலைகள் இயங்க தொடங்கியுள்ளதால் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

நடப்பாண்டில் குறைந்தபட்ச விலை

நடப்பாண்டில் குறைந்தபட்ச விலை

நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெள்ளியின் அவ்வப்போது ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் சென்னையில் வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 49,350 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இது மார்ச் மாதத்தில் குறைந்தபட்சமாக கிலோவுக்கு 39,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இது தான் இதுவரை இந்தாண்டின் குறைந்தபட்ச விலையாகும்.

மற்ற மாதங்களில் என்ன நிலவரம்

மற்ற மாதங்களில் என்ன நிலவரம்

இதன் பிறகு ஏப்ரல் மாதத்தில் வெள்ளி விலையானது 1.05% ஏற்றம் கண்டுள்ளது. இதே மே மாதத்தில் 0.73% ஏற்றத்திலும், ஜூன் மாதத்தில் 3.33% சரிவிலும் விற்பனை செய்யப்பட்டது. இதுவே ஜூலை மாதத்தில் 3.08% சரிவிலும் விற்பனை செய்யப்பட்டும் வந்தது. ஆனால் இந்த வருட தொடக்கம் முதல் கொண்டே குறைந்த மொத்த விலையினை விட, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 9.81% உச்சத்தினை எட்டியது. ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக கிலோவுக்கு 76,510 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. எனினும் செப்டம்பர் மாதத்தில் வெள்ளியின் விலை -2.18% குறைந்துள்ளது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் வெள்ளியின் விலையானது இன்று காலையில் சற்று சரிவில் தொடங்கியிருந்தது. ஆனால் தற்போது 0.13% அதிகரித்து, 24.740 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 185 ரூபாய் குறைந்து, 62,430 ரூபாயாக காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் விலை சற்று அதிகரித்திருந்தாலும், இந்திய சந்தையில் விலை குறையும் விதமாகவே காணப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஆபரண வெள்ளியின் விலையானது இன்று இன்னும் மாற்றம் காணவில்லை. ஒரு கிராமுக்கு 62.60 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 62,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. எனினும் வரவிருக்கும் பண்டிகை காலத்தில் வெள்ளியின் தேவையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வெள்ளியின் விலைக்கு ஆதரவாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

silver prices dropped by about 30% since august high

Silver prices dropped by about 30% since august high, but its may raise in future
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X