சரமாரி வீழ்ச்சியில் வெள்ளி விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி வெள்ளி விலையானது ஏற்றம் காணத் தொடங்கியது. அப்போது சுமார் 14 டாலரில் இருந்து ஏற்றம் காண ஆரம்பித்த வெள்ளியானது, ஆகஸ்ட் மாதத்தில் வரலாறு காணாத உச்சமான 29.915 டாலர்களை தொட்டது.

 

ஆனால் செப்டம்பர் மாதத்திலேயே முதலீட்டாளர்களுக்கும், வெள்ளி வாங்குபவர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் விதமாக 22 டாலருக்கும் கீழாக குறைந்தது.

எனினும் அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து தொழிற்சாலைகளில், வெள்ளியின் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து சிறிது சிறிதாக ஏற்றம் கண்டு வருகின்றது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

இந்த நிலையில் கடந்த மூன்று சந்தை தினங்களாகவே ஏற்றம் கண்டு வந்த வெள்ளியின் விலையானது, இன்று சர்வதேச சந்தையில் சற்று வீழ்ச்சி காண ஆரம்பித்துள்ளது. தற்போது 1.22% வீழ்ச்சி கண்டு 24.930 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. நிபுணர்கள் தங்கத்தினையும் சரி, வெள்ளியையும் சரி நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை நிலவரம்

இந்திய சந்தையில் வெள்ளி விலை நிலவரம்

ஆக இவ்வாறு விலை குறைவது முதலீட்டாளர்களுக்கு நல்ல சான்ஸ் தானே. ஏனெனில் விலை குறையும்போதெல்லாம் வாங்கி வைக்கலாமே. சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தற்போது கிலோவுக்கு 713 ரூபாய் குறைந்து, 62,913 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

சென்னையில் ஆபரண வெள்ளி விலை
 

சென்னையில் ஆபரண வெள்ளி விலை

நடப்பு வாரத் தொடக்கத்தில் இருந்தே வெள்ளியின் விலையானது, ஒரு நாள் அதிகரித்தும், ஒரு நாள் குறைந்தும் காணப்படுகின்றது. அதோடு இன்று தங்கம் விலை அதிகரித்திருந்த போதும் கூட, வெள்ளியின் விலை கிராமுக்கு சற்று குறைந்து 63 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோ வெள்ளியின் விலையானது 63,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?

கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?

ஓரு நாள் விட்டு ஒரு நாள் குறைந்தாலும், வெள்ளி விலை குறையும் போது 500 ரூபாய், 700 ரூபாய் இப்படி தான் குறைந்து வருகின்றது. ஆனால் ஏற்றம் கண்டால் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 1000 ரூபாய் மேல் ஏற்றம் கண்டு வருகின்றது. ஆக இதுவும் ஒரு நல்ல அறிகுறி தான். வெள்ளிக்கான தேவையை இதிலிருந்தே நாம் அறிந்து கொள்ள முடியும்.

தேவை அதிகரிக்கும்

தேவை அதிகரிக்கும்

வரவிருக்கும் விழாக்கால பண்டிகை சீசனில் வெள்ளியின் தேவையானது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வெள்ளியின் விலை அதிகரிப்பு காரணமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதால் வெள்ளி விலையானது சற்று குறைந்து, மீண்டும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஊக்கத் தொகை எதிர்பார்ப்பு

ஊக்கத் தொகை எதிர்பார்ப்பு

அமெரிக்கா மட்டும் அல்ல, சர்வதேச முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்த பார்வையும், அமெரிக்கா எவ்வாறு ஊக்கத் தொகையை அறிவிக்க உள்ளது என்பது தான். ஏனெனில் இது சர்வதேச பங்கு சந்தையில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் முதலீட்டாளார்கள் எதிர்பார்ப்பதை போல ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டால், டாலரின் மதிப்பு அதிகரிக்கும். அதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறையும்.

அதிபர் தேர்தலுக்கு முன்பு கிடைக்குமா?

அதிபர் தேர்தலுக்கு முன்பு கிடைக்குமா?

ஆனால் அவ்வாறு அதிபர் தேர்தலுக்கு முன்பு வருமா? என்ற கேள்விக்குறிதான் நிலவி வருகின்றது. ஆக இதனால் டாலரின் மதிப்பு சற்று அழுத்தத்திலேயேதான் காணப்படுகின்றது. இதன் காரணமாக நிபுணர்கள் கூறுவது போல நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்க வாய்ப்புண்டு. எனினும் வெள்ளி ஒரு தொழிற்துறை உலோகம். தங்கம் வேறு, வெள்ளி வேறு. ஏனெனில் இதற்கான தேவை தொழிற்துறையில் உண்டு. ஆக வெள்ளியின் விலை அதிகப்பரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

வெள்ளியின் சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்கள்

வெள்ளியின் சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்கள்

டெக்னிக்கல் இண்டிகேட்டர்கள் படி வெள்ளியின் விலையானது ஏற்றம் காணும் நிலையிலேயே காணப்படுகிறது. வால்யூமும் நன்றாக காணப்படுகிறது. ஆசிலேட்டர்களும் ஏற்றத்திற்கான சிக்னலையே கொடுத்துக் கொண்டுள்ளன.

  • பைவேட் பாயிண்ட் - 63,604
  • சப்போர்ட் லெவல் - 63,239 63,135, 62,976, 62,540
  • ரெசிஸ்டன்ஸ் லெவல் - 64,019, 64,124, 64,283, 64,721
தங்கத்தின் சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்கள்

தங்கத்தின் சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்கள்

டெக்னிக்கல் படி தங்கத்தின் விலையானது ஏற்றம் காணும் நிலையிலேயே காணப்படுகிறது. அதன் வால்யூமும் நன்றாக காணப்படுகிறது. ஆசிலேட்டர்களும் ஏற்றத்திற்கான சிக்னலையே கொடுத்துக் கொண்டுள்ளன.

  • பைவேட் பாயிண்ட் - 51.232
  • சப்போர்ட் லெவல் - 51,080, 51,021, 50,931, 50,682
  • ரெசிஸ்டன்ஸ் லெவல் - 51,585, 51,645, 51,736, 51,985

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Silver prices falls after 3 day rising

Silver prices falls after 3 day rising, but silver is in strong uptrend with good momentum and good volume
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X