ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு மக்களின் பங்கீடு முக்கியமோ அதைவிட முக்கியமான மக்களின் வளர்ச்சிக்குத் தேவையான நிதியியல் ஆதாரம் மிகவும் முக்கியம். இந்த நிதியியல் ஆதாரம் சரியாகவும், போதிய அளவில் இல்லாத பட்சத்தில் வளர்ச்சியின் வேகம் குறைவாக இருக்கும்.
இப்பவே இப்படியா.. 6 வார உச்சத்தில் பாமாயில் விலை.. இந்தோனேசியாவின் நடவடிக்கைக்கு பிறகு என்னவாகும்?
இந்த முக்கியமான பிரச்சனையை வெறும் 11,500 ரூபாயில் தீர்க்க முடியும் என்றால் நம்ப முடியுமா..?

ஸ்டார்ட்-அப்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு வங்கியாளர், வங்கிச் சேவை இல்லாத இடத்தில் குறைந்த செலவில் வங்கிச் சேவையை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய தளத்தை உருவாக்கியுள்ளார், இதற்காகத் தனது வாழ்நாள் சேமிப்பை முழுவதையும் இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் முதலீடு செய்துள்ளார்.

11500 ரூபாய்
கிராமங்கள், சிறிய டவுன் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு இன்றும் வங்கி சேவைகள் முழுமையாகச் சென்றடையாத நிலையில் வெறும் 150 அமெரிக்க டாலர்களுக்கு அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி சுமார் 11500 ரூபாய் அளவிலா தொகையைக் கொண்டு ஒரு வங்கிகள் கிளைகளை அமைக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா..

சிங்கப்பூர்
சிங்கப்பூர் குடியுரிமை பெற்று வங்கித் துறையில் அனுபவமுள்ளவருமான ராம் ஷர்மா, இந்தியாவில் உள்ள செஞ்சுரியன் வங்கி மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அல்பிலாட் வங்கியில் பணிபுரிந்தவர், மற்றும் அவரது நண்பர் ரகு நந்தன் ஆகியோர் 2016 இல் ஒரு ஃபின்டெக் ஸ்டார்ட்அப்பை நிறுவினர்.

பேங்க் ஜீனி
ராம் ஷர்மா மற்றும் ரகு நந்தன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் தான் பேங்க் ஜீனி. இந்த நிறுவனத்தின் சேவை மூலம் சிறிய தொகை முதலீட்டில் வங்கிகளின் நாட்டின் அனைத்து சிறிய கிராமங்கள், டவுன் பகுதிகளில் வங்கி கிளையைத் துவங்க முடியும். இதன் மூலம் வங்கி சேவை பெற முடியாத பலர் எளிதாக வங்கி சேவை பெறலாம்.

3 முக்கியப் பொருட்கள்
"ஒரு டேப்லெட் மற்றும் ஒரு சிறிய புளூடூத் பிரிண்டர் மற்றும் கார்டு ரீடர்" மூலம் எளிதாக வங்கியின் கிளையில் கிடைக்க வேண்டிய அனைத்து சேவைகளையும் திறக்க முடியும். இத்தகைய எளிய கட்டமைப்பைக் கொண்ட சேவையைத் தான் Bank-Genie வழங்குகிறது. இந்த 3 பொருட்களுக்கான செலவு 150 டாலர்களுக்கு மேல் ஆகாது என ராம் ஷர்மா தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்கா
பேங்க் ஜீனி-யின் சேவையைப் பயன்படுத்தி மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் மிகப்பெரிய வணிக வங்கிகளில் ஒன்றான சியரா லியோன் வணிக வங்கி, தொலைதூரப் பகுதிகள் அதாவது மலைகளில், காடுகளில் பகுதிகளில் வாழும் மக்களுக்கு வங்கி சேவை அளிக்க வேண்டும் என்பதற்காக 90 நாட்களில் 600 கிளைகளை நிறுவியுள்ளது.

முக்கிய நாடுகள்
ஐந்து ஆண்டுகளுக்குள், பேங்க்-ஜெனி மத்திய ஆசிய நாடுகளான கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தானில் தனது சேவையை அதிகரித்தது. இந்த ஸ்டார்ட்-அப் ஆப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் 30க்கும் மேற்பட்ட வங்கி வாடிக்கையாளர்களைக் கொண்டு உள்ளது. பிலிப்பைன்ஸில் மட்டும் 13 வங்கிகள் உள்ளன.