கொரோனா பீதியில் சிங்கப்பூர்.. தெறித்து ஓடிய சுற்றுலா பயணிகள்.. காற்று வாங்கும் விமான தளங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
coronavirus:A timeline of the COVID-19 outbreak

சிங்கப்பூர்: சீனாவின் கொரோனா வைரஸின் கொடூர தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக இதுவரை கொரோனாவினால் 1523 பேர் பலியாகியுள்ளனர்.

 

இந்த கொடிய கொடூர வைரஸினால் இதுவரை 66,000 பேர் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த கொடிய வைரஸின் காரணமாக சீன பொருளாதாரம் மட்டும் அல்லாது, சர்வதேச பொருளாதாரமும் வீழ்ச்சி காணும் என்றும் பல ஆய்வறிக்கைகள் கூறி வருகின்றன.

சுற்றுலா வருவாயிலும் அடி

சுற்றுலா வருவாயிலும் அடி

சீனாவிலிருந்து இந்த வைரஸானது பாகுபாடின்றி மற்ற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் இந்த வைரஸின் தாக்கம் தற்போது சிங்கப்பூரிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. கொரோனா பீதியினால் சிங்கப்பூரின் சில விமான தளங்கள் காற்றோடிக் கொண்டிருக்கின்றனவாம். சிங்கப்பூரின் முக்கிய வருவாயில் ஒன்றாக திகழும் சுற்றுலா துறை பெருத்த அடி வாங்கலாம் என்றும் சிங்கப்பூர் சுற்றுலா துறை தெரிவித்துள்ளதாம்.

வருகை குறையலாம்

வருகை குறையலாம்

கொரோனாவின் பீதியில் 2020ம் ஆண்டில் சுற்றுலா பயணிகளின் வருகை 25 -30% குறையலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சிங்கபூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 20% பேர் சீனர்களாம். இதனால் சிங்கப்பூரின் பொருளாதாரத்திலும் இந்த எதிரொலி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா முக்கிய சந்தை
 

சீனா முக்கிய சந்தை

ஏனெனில் 2019ம் ஆண்டில் முதல் மூன்று காலாண்டுகளில் சீனாவும் சிங்கப்பூரின் சிறந்த வருவாய் சந்தையாக இருந்துள்ளது. குறிப்பாக பார்வையிடல், கேமிங் மற்றும் பொழுதுபோக்கு பிரிவுகளைத் தவிர்த்து, சுற்றுலா துறையில் மட்டும் S$S$.2 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளதாகவும், இது முந்தைய 2018ம் ஆண்டினை விட 2% அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறைந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை

குறைந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை

கொரோனா தாக்கத்தினால் உலகளாவிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையே குறைந்துள்ளது. ஆக இது ஒட்டுமொத்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுலா துறையின் ஒட்டுமொத்த வருவாயும் குறைய வாய்ப்புள்ளது. சிங்கப்பூரில் ஒரு நாளைக்கு சராசரியாக 18,000 பேர் முதல் 20,000 பேர் வரை பார்வையாளர்களை இழந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எவ்வளவு காலம் நீடிக்கும் இந்த நிலை

எவ்வளவு காலம் நீடிக்கும் இந்த நிலை

கொரொனாவின் பீதியினால் இருபுறமும் உள்ள கட்டுபாடுகளினால் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என்றும், அவர்களின் பெரும்பாலானவர்கள் சீனர்கள் என்றும் கூறப்படுகிறது. சீனாவில் நிலவி வரும் இந்த அசாதாரண நிலை இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை. இதனால் சிங்கப்பூரின் பொருளாதாரங்களின் நிலைமை எவ்வளவு காலம் நீடிக்கும் என்றும் தெரியவில்லை.

2003 நிலையை அடையக் கூடும்

2003 நிலையை அடையக் கூடும்

இந்த நிலைமை சீரடையும் நிலையை பொறுத்து தான் பயணிகளின் எண்ணிக்கை மாறக்கூடும். ஆக இந்த ஆண்டு நாங்கள் 2003ல் சார்ஸ் வைரஸினால் ஏற்பட்ட மோசமான நிலையினை நாங்கள் அடையக் கூடும் என்று நம்புகிறோம் என சிங்கப்பூரின் சுற்றுலா துறை தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா துறையில் நிச்சயம் பாதிப்பு இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

வணிக பயணிகளின் எண்ணிக்கையும் வீழ்ச்சி

வணிக பயணிகளின் எண்ணிக்கையும் வீழ்ச்சி

சிங்கப்பூர் சென்டோசாவின் வணிக மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஏற்கனவே 20 - 50% வரை குறைந்துள்ளது. பார்வையாளர்களின் வருகை குறையும் என எதிர்பார்க்கப்படுவதால், ஹோட்டல்கள் வேலையில்லாத நேரத்தை பயன்படுத்தி தொழிலாளர்களைத் திரும்ப பெறவும், புதுபித்தல் மற்றும் பழுதுபார்த்தல்களை மேற்கொள்ளவும் சிங்கப்பூர் ஹோட்டல் சங்கத்தின் தலைவர் க்வீ வீ லின் தெரிவித்துள்ளார்.

அதிகப்படியான முதலீடு அவசியம்

அதிகப்படியான முதலீடு அவசியம்

மேலும் இதனால் ஹோட்டல்களிலும் சரி, மற்ற இடங்களிலும் பணி நீக்கம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எங்கள் வணிகங்களை ஆதரிப்பதற்கும், சுற்றுலாவில் நம்பிக்கையை வளர்ப்பதற்கும், முன்னெப்போதையும் விட சுற்றுலா துறையில் முதலீடு செய்வது முக்கியமானது. இதனால் சிங்கப்பூரின் வளர்ச்சியை இது மீட்டெடுக்க உதவும் என்றும் டான் கூறியுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மேலும் இந்த கொரோனாவின் பீதியில் சிங்கப்பூர் விமான நிலையங்கள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாம். குறிப்பாக கைகழுவும் இடங்கள் அதிகரித்துள்ளதாகவும், இங்கு பயன்படுத்தப்படும் கைகழுவும் சுத்திகரிப்பு பாட்டில்களின் எண்ணிக்கை 160 பாட்டில்களில் இருந்து 1,200 பாட்டில்களுக்கும் மேலாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் இதன் மூலம் கொரொனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் சிங்கப்பூர் சுகாதாரத்துறை எதிர்பார்க்கிறது.

சுத்தமான தண்ணீர்

சுத்தமான தண்ணீர்

மேலும் செக் இன் வரிசைகள், புறப்படுதல் மற்றும் வருகை பகுதிகள், உணவு மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ள இடங்களில் இந்த கை சுத்திகரிப்பான்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு கழிப்பறைகள் கிண்ணங்கள் மற்றும் ஒய்வறைகளின் தளங்களை கிருமி நீக்கம் செய்ய CAG செலுத்தப்பட்ட ஓசோன் உட்செலுத்தப்பட்ட நீர் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இத்தனை பேர் பாதிப்பு

இத்தனை பேர் பாதிப்பு

கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி சிங்கப்பூரில், 58 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எப்படியோங்க சீனாவை அடுத்து தற்போது இந்த கொரோனாவின் கொடூர தாண்டவம் சீனாவை அடுத்து, சிங்கப்பூரிலும் ஆரம்பித்துவிட்டது என கூறலாம். எனினும் சிங்கப்பூரில் இதுவரை யாரும் இதனால் மரணம் வரை செல்லவில்லை என்பது மிக மகிழ்ச்சியான விஷயமே. இதை கட்டுப்படுத்தி விட்டால் இது இன்னும் சந்தோஷத்தை அளிக்கும் தானே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Singapore tourism may hit in 2020 due to coronavirus, with visitors arrivals expected to fall 25 - 30%

China was also Singapore’s top revenue market in the first 3 quarters, but Singapore now losing an average of 18,000 to 20,000 international visitors per day. Most of the lost visitor arrivals are Chinese due to travel restriction. So Singapore may hit tourism revenue in this year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X