மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் சந்தை கணிப்புகளான -8.8 மற்றும் -10.5 சதவீத வீழ்ச்சியை விடவும் -7.5 என்ற குறைவாக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஏப்ரல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் -23.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டும் அல்லாமல் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நாட்டில் வர்த்தகம் பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் 4வது காலாண்டுக்குள் நாட்டின் பொருளாதாரம் மைனஸ் அளவில் இருந்து வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் எனக் கணிக்கப்பட்டாலும், 2020ஆம் நிதியாண்டு முடிவில் 2 இலக்க வீழ்ச்சியை அடியும் எனவும் கூறப்படுகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் விவசாயிகளும், சிறு வர்த்தகங்களும், மிடில் கிளாஸ் மக்களும் தான் நாட்டின் பொருளாதாரத்தைத் தாங்கிப்பிடிக்கிறார்கள் எனச் சந்தை நிலவரங்கள் கூறுகிறது.
ஆப்பிள் சப்ளையர்கள் சீனாவில் இருந்து வெளியேறுவது உறுதி.. பிடன் ஆட்சியிலும் கஷ்டம்..!

முக்கியத் துறைகள்
செப்டம்பர் காலாண்டில் நாட்டின் விவசாயத் துறை 3 சதவீத வளர்ச்சியும், உற்பத்தி துறை 0.6 சதவீத வளர்ச்சியும் அடைந்திருக்கும் இதேவேளையில், சேவைத் துறையில் வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்துத் துறைகள் ஏப்ரல் - ஜூன் காலாண்டை விடவும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

விவசாயம்
பருவ மழை சிறப்பாக இருக்கும் இதேவேளையில் மத்திய அரசு நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் சரிவில் இருந்து மீண்டு வர வேண்டும் எனப் பல திட்டங்கள், சலுகைகளை விவசாயம் துறையைச் சார்ந்து அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயம் துறை சார்ந்த வர்த்தகம் மேம்பட்டுள்ளது மட்டும் அல்லாமல் ஊரகப் பகுதிகளில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளும், கிராம மக்களின் வருமானமும் அதிகரித்துள்ளது.

ஊரக வளர்ச்சி
கொரோனா எதிரொலியாக இந்தியாவில் பல கோடி மக்கள் தற்போது சொந்து ஊருக்கு சென்றுள்ள காரணத்தாலும், விவசாயத் துறையில் அதிக வருமான கிடைக்கும் காரணத்தாலும் மக்கள் மத்தியில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில் பொதுப் போக்குவரத்துக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் மக்களுக்குத் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளச் சொந்த வாகனங்களை வாங்க முன்வந்துள்ளனர்.

வரி வருமானம்
இதேபோல் ஏப்ரல் - ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் செப்டம்பர் காலாண்டில் நாட்டின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி அதிகரித்துள்ள காரணத்தால் நாட்டின் ஜிஎஸ்டி, வரி வருமானம் அதிகரித்துள்ளது.
இதேவேளையில் எரிபொருள் மற்றும் மின்சாரம் பயன்படுத்தும் அளவு அதிகரித்துள்ளது.

விமானப் போக்குவரத்து
இந்தியாவில் இன்னும் வெளிநாட்டு விமானச் சேவை முழுமையாக இயக்கப்படாத நிலையில் நாட்டின் வர்த்தகர்கள் தொழில் காரணமாகவும், மக்கள் சொந்த விஷயத்திற்காகவும் நீண்ட தூரப் பயணத்திற்குச் சாலை மற்றும் ரயில் பயணத்தை மேற்கொள்ளாமல் விமானச் சேவையை அதிகளவில் பயன்படுத்தத் துவங்கியுள்ளது.

வேலைவாய்ப்பு
இந்தியாவில் நகரப்புறங்களைக் காட்டிலும் ஊரக மற்றும் கிராமங்களில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகிறது. இதனால் நாட்டின் மொத்த வேலைவாய்ப்பு சந்தை வளர்ச்சியில் ஒவ்வொரு மாதமும் ஏற்ற இறக்கம் வருகிறது.

மக்கள்
கொரோனா பாதிப்பால் தடுமாறும் இந்தியப் பொருளாதாரத்தை விவசாயிகளும், நடுத்தர மக்களால் மட்டுமே அதிகளவிலான வர்த்தகம் உருவாக்கப்பட்டு வளர்ச்சி அடைந்து வருகிறது.