ஸ்னாப்டீலின் அதிரடி திட்டம்.. விழாக்கால விற்பனைக்காக 5000 புதிய விற்பனையாளர்கள் இணைப்பு.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவினை சேர்ந்த ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனம் தான் ஸ்னாப்டீல்.

 

ஆன்லைனில் நீங்கள் பொருட்களை வாங்குபவராக இருந்தால் நிச்சயம் இந்த நிறுவனத்தினையும் அறிந்திருக்க முடியும்.

அமேசான், பிளிப்கார்ட் மட்டும் அல்ல, இந்தியாவின் ஸ்னாப்டீல் நிறுவனமும் தீபாவளி விற்பனை சலுகையை அறிவிக்கலாம் என்ரு எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் சூப்பர் திட்டம்.. நடுத்தர வர்த்தகத்தினருக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா.. எப்படி இணைவது.. !

லாக்டவுனால் பயன்

லாக்டவுனால் பயன்

ஸ்னாப்டீல் நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே விற்பனையாளர்களையும், உற்பத்தியாளர்களையும் இணைக்க தொடங்கினாலும், செப்டம்பர் காலாண்டில் தான் அதிகளவு இணைத்துள்ளது. லாக்டவுன் காரணமாக வாடிக்கையாளார்களின் நடத்தையில் பல மாற்றங்கள் ஏற்றபட்டுள்ளன. இதனால் ஆன்லைன் விற்பனையாளர்கள் பயன் அடைந்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

புதிய விற்பனையாளர்களை சேர்ப்பது, விரைவாக பொருட்களை சேர்ப்பதற்கு உதவும். இந்த நிறுவனத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். 70 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளார்கள் உள்ளனர். அவர்கள் பட்டியலிடப்பட்டுள்ள 213 மில்லியனுக்கும் அதிகமான பொருட்களை வாங்கலாம்.

என்னென்ன பொருட்கள்?
 

என்னென்ன பொருட்கள்?

தற்போது இணைக்கப்பட்டுள்ள இந்த விற்பனையாளர்களில் பெரும்பகுதியினர் சமையலறை கேட்ஜெட்களான ஜூஷர்கள், புட் புராசசர்ஸ், ஸ்டீல் & காப்பர் பாத்திரங்கள், பீப்பாய் பொருட்கள், விரிப்புகள், துணிகள், கைக்கடிகாரங்கள், வாலட்கள், பேஷன் மற்றும் அலங்கார பொருட்கள், குழந்தைகளுக்கான உடைகள், புடவைகள், பணியன் டீ-சர்ட்கள், டிராக் பேன்ட்கள் உள்ளிட்ட பல விற்பனையாளரும் அடங்கியுள்ளனர்.

புதிய லாகிஸ்டிக்ஸ்

புதிய லாகிஸ்டிக்ஸ்

அடுத்து வரும் பண்டிகை கால விற்பனைக்காக ஸ்னாப்டீல் அண்மையில் 25 லாகிஸ்டிக்ஸ் செண்டர்களை தொடங்கியது. இது மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய பெரு நகரங்களிலும், சூரத், ஜெய்ப்பூர், பானிபட், குருகிராம், பகதூர்கர், யமுனா நகர், ராஜ்கோட், பிவாண்டி, ஆக்ரா, நொய்டா, மதுரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ளது.

சலுகை எவ்வளவு?

சலுகை எவ்வளவு?

எனினும் இந்த விழாக்கால சலுகையில் என்னென்ன பொருட்களுக்கு சலுகை., எவ்வளவு சலுகை, தள்ளுபடி, என்று இந்த விழாக்கால விற்பனை ஆரம்பிக்கவுள்ளது என்பதனை இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் அக்டோபர் 16 அன்று இந்த விழாக்கால விற்பனையானது ஆரம்பிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பல சலுகைகளும் அன்று அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Snapdeal added over 5,000 manufacturers and sellers on its platform

Snapdeal added over 5,000 manufacturer-sellers on its platform for this year, most of them in the September quarter
Story first published: Monday, October 12, 2020, 15:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X