உலகளவில் இன்று பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது முதலீடுகள் தான். இந்த முதலீட்டு ஆட்டத்தை மிகப்பெரிய அளவில் செய்து வரும் ஜப்பான் நாட்டின் சாப்ட்பேங்க் குருப்-இன் விஷன் பண்ட் சமீப காலமாக பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.
இதன் எதிரொலியாக மார்ச் உடன் முடிந்த நிதியாண்டில் சாப்ட்பேங்க் குருப்-இன் விஷன் பண்ட் முதலீடு செய்யப்பட்ட வர்த்தகங்களில் சுமார் 1.9 டிரில்லியன் யென் அதாவது 17.7 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை இழந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் சாப்ட்பேங்க் குருப்-இன் விஷன் பண்ட் முதலீடு செய்திருந்த வீவொர்க் மற்றும் உபர் நிறுவனங்களின் மதிப்பீடுகளைத் தாறுமாறாகக் குறைந்த காரணத்தால் 17.7 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது சாப்ட்பேங்க்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

ஜாக் மா
இந்த மோசமாக காலகட்டத்தில் சாப்ட்பேங்க் விஷன் பண்ட் நிதியின் நிர்வாக குழுவில் முக்கிய உறுப்பினராக 13 வருடமாக இருந்த சீனாவின் அலிபாபா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜாக் மா வெளியேறியுள்ளார்.
ஜாக் மாக வெளியேற்றத்திற்குப் பிறகு சாப்ட்பேங்க் 3 முக்கிய தலைவர்களைத் தனது நிர்வாக குழுவில் இணைத்துள்ளது.

மொத்த நஷ்டம்
2019-2020ஆம் நிதியாண்டில் சாப்ட்பேங்க் குருப்-இன் விஷன் பண்ட்-இன் செயலாக்க நஷ்டத்தின் அளவு 1.36 டிரில்லியன் டாலராகவும், மொத்த நஷ்டத்தின் அளவு 961.6 பில்லியன் டாலராகவும் உள்ளது என இந்நிறுவனம் வெளியிட்ட நிதி அறிக்கையில் தெரிவித்து இருந்தது.
இது கடந்த 39 வருட வர்த்தக வரலாற்றில் மிகவும் மோசமான நஷ்டத்தை சாப்ட்பேங்க் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

100 பில்லியன் டாலர்
சாப்ட்பேங்க் நிறுவனத்தின் தலைவரும் நிறுவனருமான மசயோஷி சன் அவர்களின் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் தான், சாப்ட்பேங்க் நிறுவனத்தின் முக்கிய லாப காரணியாகக் கடந்த வருடம் இருந்தது.
ஆனால் சில முன்னணி நிறுவனங்களில் நடந்த கோளாறுகள் மற்றும் வர்த்தக தோல்விகள் தற்போது 17.7 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.

உபர் மற்றும் வீவொர்க்
கடந்த ஆண்டு மே மாதம் சாப்ட்பேங்க் குருப்-இன் விஷன் பண்ட் அதிகளவில் முதலீடு செய்திருந்த உபர் நிறுவனம் அமெரிக்க பங்குச்சந்தையில் களமிறங்கியது. ஆனால் மக்கள் மற்றும் பொது முதலீட்டாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காத காரணத்தால் இந்நிறுவனத்தின் மதிப்பு அதிகளவில் சரிந்தது.
இதேபோல் வீவொர்க் அதிக தொகைக்கு மதிப்பிடப்பட்டது வெளிச்சத்திற்கு வந்த நிலையில் இந்நிறுவனத்தின் மதிப்பும் கடுமையாக பாதித்தது.
மேலும் சாப்ட்பேங்க்-இன் தனிப்பட்ட முதலீடான செயற்கைக்கோள் ஆப்ரேட்டர் நிறுவனம Oneweb, வர்த்தகம் பிரச்சனை காரணமாக மார்ச் மாதம் திவாலானது.

Oyo
உபர், வீவொர்க் போலவே Oyo நிறுவனத்திலும் அதிகளவிலான முதலீட்டை சாப்ட்பேங்க் செய்திருந்தது. கொரோனா தாக்கத்தின் காரணமாக இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் Oyo அதிகளவிலான வர்த்தக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதோடு, அடுத்த சில காலாண்டுகளுக்கு OYO வர்த்தகம் வளர்ச்சி அடைய வாய்ப்பு இல்லாத காரணத்தால் இந்நிறுவனத்தின் மதிப்பு அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.