ஸ்பைஸ்ஜெட் எடுத்த அதிரடி முடிவு.. 30% சம்பளம் குறைப்பு.. எல்லாத்துக்கும் காரணம் இந்த கொரோனா தான்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: உலகம் முழுக்க தனது ஆதிக்கத்தினை பரப்பி வரும் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் ஒட்டுமொத்த உலகமும், ஸ்தம்பித்து போயுள்ளது என்று தான் கூற வேண்டும்.

 

இதற்கு இந்தியா மட்டும் விதி விலக்கா என்ன? இந்தியாவிலும் தற்போது ஆதிக்கத்தினை சற்று வலுவாகவே காலூன்றி வருகிறது கொரோனா.

ஆனால் இவற்றையெல்லாம் எப்படியேனும் தடுத்தேயாக வேண்டும் என போராடி வருகின்றன நமது அரசுகள்.

21 நாள் லாக்டவுன்

21 நாள் லாக்டவுன்

இதனையடுத்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் லாக்டவுனால் இந்தியா முழுவதும், அத்தியாவசியம் தவிர அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. இது விமான துறையையும் விட்டு வைக்கவில்லை. இதனால் விமானத் துறை முற்றிலும் தனது வருவாயினை இழந்துள்ளன. இதனால் விமான நிறுவனங்கள் விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தாலும், செலவினங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த பல விதங்களில் செலவினங்களை கட்டுப்படுத்துகின்றன.

சம்பள குறைப்பு

சம்பள குறைப்பு

இதன் காரணமாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது அனைத்து ஊழியர்களின் 10 -30% ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகபட்சமாக ஊழியர்களுக்கு 30% வரை ஊதியத்தினை குறைக்க, இழப்பீட்டை குறைக்க தேர்வு செய்துள்ளதாக விமான நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய மெயில் தெரிவித்துள்ளது.

விமான சேவைகள் ரத்து
 

விமான சேவைகள் ரத்து

நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவைகளை ரத்து செய்தது. இது தவிர நாடு முழுவது, ஏப்ரல் 14 வரை நாடு தழுவிய பூட்டுதலை அறிவித்தது. இப்படி ஒரு நிலையிலேயே விமான நிறுவனங்கள் தொடர்ந்து இப்படி ஒரு அறிவிப்பினை அறிவித்து வருகின்றன.

பல நிறுவனங்கள் சம்பளம் குறைப்பு

பல நிறுவனங்கள் சம்பளம் குறைப்பு

முன்னதாக இண்டிகோ மற்றும் கோஏர் போன்ற பட்ஜெட் விமான நிறுவனங்கள் கூட முன்னதாக இதே போன்ற அதிரடி நடவடிக்கையினை எடுத்துள்ளன. இது குறித்து கோஏர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய நிலையில் சம்பள குறைப்பை செய்வதை விட வேறு வழியில்லை என்றும் கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Spicejet announced 30 percent pay cut for its employees

Budget carrier SpiceJet decided to cut 10-30% salary of all its employees in March,. The airline said in an e-mail communication to the staff.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X