இலங்கை மக்கள் நிலை கேள்விக்குறி.. போராட்டம் பலன் அளிக்குமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை-யில் தற்போது பால், அரசி, பழம், காய்கறி என அனைத்தும் பொருட்களும் சராசரியாக 19 சதவீத பணவீக்கத்தில் உள்ளது. இந்த நிலையில் மக்கள் போராட்டம் நிலையை இன்னும் மோசமடைய செய்கிறது.

 

ஒருபக்கம் ராஜபக்சே அரசின் முறையற்ற நிர்வாகம், கொள்கை, முடிவுகளால் இலங்கை மோசமாக நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது என்பதற்காக மக்களின் கோபம் சரி என்று மக்கள் மத்தியில் கருத்து நிலவினாலும், புதிய நிதியுதவி கிடைப்பதில் மக்கள் போராட்டத்தின் காரணமாகத் தாமதம் அடைந்து வருகிறது.

இலங்கை முதல் விக்கெட் தான்.. லிஸ்ட்டில் பல நாடுகள் உள்ளது.. எச்சரிக்கும் ஐநா, உலக வங்கி..!

 பணவீக்கம், அன்னிய செலாவணி

பணவீக்கம், அன்னிய செலாவணி

இலங்கை நாட்டின் பணவீக்கம் 19 சதவீதமாக இருக்கும் நிலையில், மக்களின் அத்தியாவசியமான பொருட்களை வாங்க 1.827 பில்லியன் டாலர் வரையிலான அன்னிய செலாவணி கையிருப்பில் 50 மில்லியன் டாலர் மட்டுமே பயன்படுத்த முடியும்.

பொருளாதார நிலை

பொருளாதார நிலை

இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நிலை மேம்பட ஐஎம்எப் நிதியுதவி வந்தால் மட்டுமே குறைந்தபட்சம் மக்களின் அடிப்படை சுமையைக் குறைக்க முடியும். இதற்கிடையில் பங்களாதேஷ் இலங்கைக்கு 200 மில்லியன் டாலர் நாணய பரிமாற்ற வசதியை அனுமதித்தது, அதன் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும்.

கடுமையான விலைவாசி
 

கடுமையான விலைவாசி

2022 ஆம் ஆண்டுத் துவக்கம் முதலே கடுமையான விலைவாசி, பணவீக்கம், அதீத கடன் எனக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத இலங்கை மக்கள் சிறிது சிறிதாகத் துவங்கிய போராட்டம், நாடு முழுவதும் வெடித்து மிகப்பெரிய மக்கள் போராட்டமாக மாறியது.

இலங்கை அரசு

இலங்கை அரசு

இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து இலங்கை அரசு கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் அமைச்சரவை கலைக்கப்பட்டு அதிபர் அதிகாரத்திற்கு வந்தார். புதிய அமைச்சர்கள் புதிய கடன் திட்டம் என அரசு நகர்ந்தாலும் விலைவாசி குறையாத காரணத்தாலும், மக்களுக்குப் போதுமான வருமானம் இல்லாத காரணத்தாலும் போராட்டத்தின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து.

பெரும்பான்மை இழந்து ஆட்சி

பெரும்பான்மை இழந்து ஆட்சி

இலங்கை ஆளுநர் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழும் நிலைக்கு வந்தது. ஆனால் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படவில்லை

மக்கள் போராட்டம்

மக்கள் போராட்டம்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்து அதிபர், பிரதமர் இருவரையும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துப் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமானது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சே ராஜினாமா

பிரதமர் மஹிந்த ராஜபக்சே ராஜினாமா

ராணுவத்தைக் கொண்டு மக்களை அடக்க முடியாத நிலையில் போராட்டத்திற்கு இடையில் திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஏற்கனவே மஹிந்த ராஜபக்சே-வின் மகன் நமல் ராஜபக்சே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

கலவரம்

கலவரம்

இத்தனை நாட்கள் அமைதியாக நடந்த போராட்டத்தில் நேற்று பிரதமர் பதவியை ராஜினமா-வை தொடர்ந்து ராஜபக்சே ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். ராஜபக்சே ஆதரவாளர்கள் மற்றும் மக்களுக்கும் மத்தியில் நடந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்த நிலையில் மக்கள் அமைச்சர்கள் வீடு, கார், சொத்துக்களைத் தீயிட்டனர்.

 தப்பித்த ராஜபக்சே குடும்பம்

தப்பித்த ராஜபக்சே குடும்பம்

இதற்கிடையில் திருகோணமலையில் இலங்கை கடற்படை முகாமில் பதுங்கி இருந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தமது குடும்பத்தினருடன் கடற்படை கப்பல் மூலமாக நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டதாகச் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்சே

கோத்தபாய ராஜபக்சே

வன்முறைகள், பழிவாங்கும் செயல்களைக் கைவிட இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே வேண்டுகோள். நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே ட்விட்டர் மூலம் வேண்டுகோள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sri lanka suffers with high inflation, low forex; IMF loan might be delay amid protest

Sri lanka suffers with high inflation, low forex; IMF loan might be delay amid protest இலங்கை மக்கள் நிலை கேள்விக்குறி.. போராட்டம் பலன் அளிக்குமா..?!
Story first published: Tuesday, May 10, 2022, 19:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X