உக்ரைன் மீதான போர் செய்த காரணத்திற்காக ரஷ்யா 8 திசைகளிலும் தனித்துவிடப்பட்டு வருகிறது. குறிப்பாக நீண்ட காலமாக ரஷ்யாவில் வர்த்தகம் செய்து வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் அடுத்தடுத்து வெளியேறும் காரணத்தால் ரஷ்யாவின் வர்த்தகச் சந்தை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.
ஒரு பங்குக்கு ரூ.30 டிவிடெண்ட் அறிவித்த பார்மா பங்கு.. உங்க போர்ட்போலியோவிலும் இருக்கா?

ரஷ்யா
ரஷ்யாவில் நீண்ட காலமாக வர்த்தகம் செய்து வந்த மெக்டொனால்ட்ஸ், எக்ஸான் மொபில் மற்றும் பிரிட்டிஷ் அமெரிக்கன் டோபேக்கோ போன்ற பல நிறுவனங்கள் அடுத்தடுத்து வெளியேறி வரும் நிலையில் தற்போது 15 ஆண்டுகளாக ரஷ்யாவில் இயங்கி வந்த ஸ்டார்பக்ஸ் தற்போது மொத்தமாக வெளியேற முடிவு செய்துள்ளது.

ஸ்டார்பக்ஸ்
காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் இனி ரஷ்யாவில் எங்களுடைய பிராண்ட் கடைகள் இருக்காது, மொத்தமாக வர்த்தகத்தை மூடிவிட்டு இந்நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளோம் என அறிவித்துள்ளது.

இழப்பு
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் விதவிதமான காஃபிக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருக்கும் நிலையில் இந்நிறுவனத்தின் வெளியேற்றம் இரு நிர்வாகத்திற்கும் இழப்பு, ரஷ்யாவுக்கும் இழப்பு தான். ஆனால் ரஷ்ய அரசு அந்நாட்டில் இருந்து வெளியேறும் முன்னணி பிராண்டுகளுக்கு மாற்று விற்பனையாளர்கள் அல்லது உரிமையாளர்களைத் தேடி வருகிறது.

130 ஸ்டார்பக்ஸ் கடைகள்
ஸ்டார்பக்ஸ் ரஷ்யாவில் சுமார் 130 இடங்களில் தனது கிளைகளைக் கொண்டுள்ளது, ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் மொத்த ஆண்டு வருவாயில் 1%க்கும் குறைவான வருமானத்தை மட்டுமே ரஷ்யாவில் இருந்து பெற்று வருகிறது. மேலும் ரஷ்யாவில் இருக்கும் 130 கடைகளும் உரிமம் பெற்று இயங்கும் கடைகள், சொந்த கடைகள் அல்ல.

2,000 ரஷ்ய தொழிலாளர்கள்
ஸ்டார்பக்ஸ் தனது 130 ரஷ்ய கடைகளில் பணியாற்றும் கிட்டத்தட்ட 2,000 ரஷ்ய தொழிலாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஊதியம் வழங்குவதாகவும், காபி வர்த்தகத்திற்கு வெளியே புதிய வேலைவாய்ப்புகளுக்கு மாற உதவுவதாகவும் கூறியுள்ளது ஸ்டார்பக்ஸ்.

மார்ச் 8
மார்ச் 8 முதல் ஸ்டார்பக்ஸ் ரஷ்யாவில் அனைத்து வணிக நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்தத் தற்காலிக நிறுத்தத்தில் காரணமாக Starbucks அமெரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளில் இருந்து அனுப்பப்படும் தயாரிப்புகளையும் நிறுத்தியது.