அமெரிக்கா- ஈரான் பிரச்சனையால் கச்சா எண்ணெய் விலை $100 டாலரை தாண்டலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா - ஈரான் இடையில் நடக்கும் பிரச்சனையைப் பார்க்கும் போது சாமானிய மக்களுக்கு மட்டும் அல்லாமல் மற்ற வல்லரசு நாடுகளும் அச்சத்தில் உள்ளது. உலக நாடுகளில் அமைதியை நிலைநாட்ட உதவ வேண்டிய வல்லரசு நாடுகள் தற்போது போர், தாக்குதல், பிரிவினை ஆகியவற்றைக் கையில் எடுத்துள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், அமெரிக்கா ஈரான் நாட்டிற்கு எதிராகவும், ஈரான் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராகவும் செயல்படத் துவங்கியுள்ளது. ஆம் ஈரான் தனது முக்கியமான கடல் போக்குவரத்து பாதையை முடக்கத் திட்டமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் இதைச் செய்தால் என்ன ஆகும் தெரியுமா..?

அதை விடுங்க.. அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் போர் தொடுக்க சான்ஸே இல்லை.. காரணம் என்ன தெரியுமா?

வளைகுடா நாடுகள்
 

வளைகுடா நாடுகள்

ஈரான் - அமெரிக்கா இடையிலான பிரச்சனை வளைகுடா நாடுகள் மத்தியிலான பிரிவினையை மேலும் அதிகரிக்கும் எனத் திட்டவட்டமாகத் தெரிகிறது. வளைகுடா நாடுகள் பெரும்பாலும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தனது வர்த்தகச் சந்தையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்துள்ளது.

இதில் முக்கியமாகச் சவுதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள்.

எண்ணெய் போக்குவரத்து

எண்ணெய் போக்குவரத்து

கச்சா எண்ணெய் வளைகுடா நாடுகளில் உற்பத்தி செய்து உலக நாடுகள் முழுவதும் விநியோகம் செய்யச் சிறந்த வழி கடல் வழிப் பயணம் தான். இப்படியிருக்கையில் வளைகுட நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய வழித்தடமாக விளங்கும் Strait of Hormuz-ஐ முழுமையாக மூட ஈரான் திட்டமிட்டு வருகிறது எனச் செய்திகள் வெளியாகியுள்ளது.

மிகப்பெரிய பாதிப்பு

மிகப்பெரிய பாதிப்பு

ஈரான் Strait of Hormuz வழித்தடத்தை மூடினால் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்காக வளைகுடா நாடுகள் மற்றும் உலக நாடுகளுக்கு இடையில் இருக்கும் வழித்தடம் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 68-69 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது, ஈரான் Strait of Hormuz வழித்தடத்தை மூடினால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் ஒரு வாரத்திற்குள் 100 டாலரை தொடும்.

167 கிலோமீட்டர் தொலைவு
 

167 கிலோமீட்டர் தொலைவு

வெறும் 167 கிலோமீட்டர் தொலைவு கொண்டு இந்த Strait of Hormuz வழித்தடத்தில் தினமும் 21 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உலக நாடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இது உலக நாடுகளின் 21 சதவீத தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் தற்போது வரையில் இவ்வழித்தடத்தை மூடுவதற்காகப் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டும் உறுதியானால் கச்சா எண்ணெய் விலை வரலாற்று உச்சத்தைத் தொடும். அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Strait of Hormuz: Oil prices may cross $100 | Iran - America

Oil prices would skyrocket if Iran moved to completely cut off the Strait of Hormuz, Elevated geopolitical tensions have sparked fears of a widening conflict in the Middle East, with energy market participants increasingly concerned that the fallout could soon disrupt regional crude supplies. It has thrust the world’s most important oil chokepoint back into the global spotlight.
Story first published: Thursday, January 9, 2020, 12:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more