வேறு வழி இல்ல..! சொத்த வித்து கடன் அடைக்கும் Zee Tv உரிமையாளர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா முழுக்க அழுகாச்சி சீரியல் தொடங்கி, செய்திகள் வரை பல டிவி சேனல்கள், நெட்ஃப்ளிக்ஸ் அமேசான் போல ஜி5 என்கிற பெயரில் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் அப்ளிகேஷன் என இந்தியாவின் மீடியா வியாபாரத்தில் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கும் நிறுவனம் இது.

 

இவர்களின் ஹிந்தி சீரியல்கள் எல்லாம், இன்று தமிழில் டப் செய்து நம் ஊரில் ஹிட் அடித்துக் கொண்டு இருக்கிறது என்றால் பாருங்களேன். இப்போது இந்த ஜி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் நிதி கடன்களை அடைக்கத் தான் சொத்துக்களை விற்க இருக்கிறார்களாம்.

பங்கு விலை உயர்வு

பங்கு விலை உயர்வு

இந்த ஜி டிவியின் தலைவர் சுபாஷ் சந்திரா. ஜி நிறுவனத்தின் தலைவரே, ஜி நிறுவன பங்குகளை (சொத்துக்களை) விற்று கடன்களை அடைக்க இருப்பதை உறுதி செய்து இருக்கிறார். இந்த ஒரு செய்தியால் மட்டும், இன்று பங்குச் சந்தையில் ஜி எண்டர்டெயின்மெண்ட் நிறுவன பங்குகளின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து இருக்கிறது.

பங்கு விலை

பங்கு விலை

ஜி எண்டர்டெயின்மெண்ட் நிறுவன பங்குகளின் விலை அதிகபட்சமாக 364 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இது நேற்றைய குளோசிங் விலையை விட 18 சதவிகிதம் அதிகம். தற்போது மதியம் 2.15 மணிக்கு சுமாராக 345 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

எவ்வளவு சொத்து
 

எவ்வளவு சொத்து

எஸ்ஸல் (ESSEL) என்கிற நிறுவனம் தான், ஜி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் புரொமோட்டராக இருக்கிறது. இந்த எஸ்ஸல் நிறுவனம் வைத்திருக்கும் ஜி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் 16.5 % பங்குகளை விற்க இருக்கிறார்களாம். இந்த 16.5 % பங்கு விற்பனைக்குப் பிறகு எஸ்ஸல் நிறுவனத்தின் கையில் வெறும் 5 % ஜி எண்டர்டெயின்மெண்ட் நிறுவன பங்குகள் மட்டுமே இருக்குமாம்.

 எவ்வளவு பணம்

எவ்வளவு பணம்

இந்த டீல் மூலம் கிடைக்கும் பணத்தின் வழியாக, ஜி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் கடன், சுமாராக 2,500 - 2,900 கோடி ரூபாயாக குறையும் என்கிறது மக்வைர் (Macquarie) என்கிற நிதி நிறுவனம். சுருக்கமாக இந்த 16.5 % பங்கு விற்பனையால் சுமார் 58 - 65 % கடனை அடைத்துவிடலாம் என்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து சி எல் எஸ் கே நிறுவனமும் தன் கணிப்பை முன் வைத்து இருக்கிறார்கள்.

சி எல் எஸ் ஏ கணிப்பு

சி எல் எஸ் ஏ கணிப்பு

இதுவே சி எல் எஸ் ஏ நிறுவனத்தின் கணிப்பைப் பார்த்தால், தற்போதைய சந்தை விலைப்படி ஜி எண்டர்டெயின்மெண்ட் பங்குகளின் 16.5 % பங்குகளை விற்றால், மொத்த 7,000 கோடி ரூபாய் கடனில், 4,900 கோடி ரூபாயை அடைத்துவிடலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். மீதமுள்ள 2,100 கோடி ரூபாய் மீடியா அல்லது வேறு சொத்துக்களை விற்று சரி செய்துவிடலாம் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.

சமீபத்தைய டீல்

சமீபத்தைய டீல்

சில மாதங்களுக்கு முன்பு கூட ஜீ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின், கணிசமான பங்குகளை (சுமார் 11 %) 4,224 கோடி ரூபாய் வரை கொடுத்து வாங்க இன்வெஸ்கோ ஓப்பன் ஹெர்மர் ஃபண்ட் (Invesco Oppenheimer Fund) பேச்சு வார்த்தை நடத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நண்பனுக்கு

நண்பனுக்கு

இன்வெஸ்கோ ஓப்பன் ஹெர்மர் ஃபண்ட் (Invesco Oppenheimer Fund) பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே, ஜி எண்டர்டெயின்மெண்டில் முதலீடு செய்து வருகிறது. எனவே பழைய நண்பர்களை கவனிக்காமல் இருப்பார்களா..? மொத்த 16.5 % டீலில் 2.3 % பங்குகளை இந்த நிறுவனத்துக்கே விற்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

எது எப்படியோ கடனை அடைத்து சிறப்பாக வியாபாரம் செய்தால் சரி..!

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Subash chandra selling ZEEL shares to repay debt

The Big indian media company Zee Entertainment Enterprise Limited company is having a big debt. To repay it, the promoter ESSEL company is going to sell 16.5 % shares.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X