சீனாவில் எங்கள் நடவடிக்கை தொடரும்.. TVS-சின் சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் அதிரடி முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீப வாரங்களாகவே சீன இந்தியாவுக்கு இடையிலான பதற்றம் கூடிக் கொண்டே போகிறது. இதற்கிடையில் இந்த பதற்றத்தினை அதிகரிக்கும் வகையில் இந்தியா சீனா எல்லையில் பிரச்சனை. பல வீரர்கள் பலி. இப்படி நாடே இன்று பரப்பரப்பாக பேசி வரும் விஷயங்களில் முதன்மை இது தான்.

 

இதற்கிடையில் சீனாவுக்கு எதிராக பல கோஷங்கள் வேண்டாம் என எழுந்து வருகிறது. சீனா பொருட்கள் வேண்டாம். உணவகங்களில் சீன பொருட்களை தவிர்க்க வேண்டும்.

இன்னும் சிலர் இறக்குமதியை தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி வருகின்றனர். ஆனால் நிபுணர்கள் தரப்பில் சீன பொருட்களைப் புறக்கணிப்பது, சீனாவுக்கு எந்த தாக்கத்தினையும் ஏற்படுத்தாது என்றும் கூறி வருகின்றனர்.

லாபகரமாக உள்ளது

லாபகரமாக உள்ளது

இதற்கிடையில் இந்தியாவினை சேர்ந்த டிவிஎஸ் குழுமத்தினை சேர்ந்த, சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனம் 8.5 பில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனம் சீனாவில் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனம் சீனாவில் அந்த நிறுவனத்தின் செயல்பாடு தொடர்ந்து லாபகராமாக இருப்பதாகவும், அது சீன நடவடிக்கைகளில் எந்த தாக்கத்தினையும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்.

நம்பகரமான சப்ளையர்

நம்பகரமான சப்ளையர்

மேலும் நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக சீனாவில் இருக்கிறோம். சீனாவின் சந்தையை நாங்கள் புரிந்துக் கொண்டோம். சீனா வாடிக்கையாளர்கள் இப்போது சுந்தரம் நம்பகமான சப்ளையராக அங்கீகரிக்கின்றனர், கடந்த இரண்டு ஆண்டுகளில் 8 சதவீதம் CAGR பார்த்திருக்கிறேன் என்று ஜேஎம்டி அருந்ததி கிருஷ்ணா கூறியுள்ளார்.

முழு அளவிலான உற்பத்தி தொடக்கம்
 

முழு அளவிலான உற்பத்தி தொடக்கம்

மேலும் இந்த நிறுவனம் லாபகரமாக இயங்குவதாகவும் தெரிவித்துள்ளது. அதோடு தற்போதைய நிலை நடவடிக்கைகளைக்கு நிறுவனம் போதுமான முதலீடுகளை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பற்றிய பேசியவர், 2020ல் ஜனவரி மற்றும் பிப்ரவரி, மார்ச் வரையில் தொடர்ந்ததாக தெரிவித்துள்ளார். ஏப்ரல் முதல் நிறுவனம் முழு அளவிலான உற்பத்தியினை தொடங்கியுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் தொடரும்

சீனாவில் தொடரும்

மேலும் தங்கள் நிறுவனம் தொடர்ந்து சீனாவில் செயல்படுமா? இல்லை சீனாவில் இருந்து மாறுவது பற்றி பரிசீலிக்குமா? என்று கேட்டதற்கு தனது நிறுவனம் தொடர்ந்து சீனாவில் செயல்பாடுகளை தொடரும் என்றும், உள்ளூர் சந்தை தேவைகளை பூர்த்தி செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

செயல்பாடு தொடரும்

செயல்பாடு தொடரும்

இப்போதைக்கு எங்கள் சீன நடவடிக்கைகளில் நாங்கள் எந்த தாக்கத்தினையும் காணவில்லை. இது போன்ற எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் முன் கூட்டியே எதிர்பார்க்கவில்லை. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு பெரும் பொருளாதாரங்களிலும் செயல்பாடு தொடரும் என்றும் அவர் கூறினார்.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய வர திட்டம்

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய வர திட்டம்

கொரோனா தாக்கத்தின் மத்தியில் அமெரிக்கா சீனாவினை தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், மற்ற நாட்டின் நிறுவனங்கள் இந்தியா வரலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவும் அதற்கான நடவடிக்கைகளில் இருந்து வருகிறது. அதிலும் பல அமெரிக்கா நிறுவனங்கள் இந்தியா வர பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விரிவாக்கம் செய்ய திட்டம்

விரிவாக்கம் செய்ய திட்டம்

இதற்கிடையில் சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனம், சீனாவில் ஃபாஸ்டென்சர்கள், மெஷின் காஸ்டிங்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய சீன தயாரிப்பு, அதன் தயாரிப்பு வரம்பில் மேலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 1, 2003 அன்று இந்த நிறுவனம் உள்நாட்டு வாகன உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சந்தைக்கும் ஹையனுடனும் ஒப்பந்தம் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sundaram fasteners said we will continue with china operations

Sundram Fasteners part of the TVS Group, said that it's Chinese venture continued to be profitable and the company did not foresee any impact on its China operations.
Story first published: Sunday, June 21, 2020, 18:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X