ஏர்டெல் தலைவர் காட்டில் மழை! சத்தம் காட்டாமல் $3.6 பில்லியன் சம்பாதித்த சுனில்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம், கொரோனா வைரஸ் கையில் சிக்கிய பூமாலையாக இருக்கிறது. வர்த்தகம், வியாபாரம், ஏற்றுமதி, சர்வதேச பிரச்சனைகள் என எல்லாவற்றையும் நிறுத்திவிட்டது இந்த வைரஸ்.

 

இந்த கொரோன வைரஸ் வெறுமனஏ நம்மைப் போன்ற மாத சம்பளதாரர்களை மட்டும் போனஸ், சம்பள உயர்வு, வேலைக்கு உத்திரவாதம் என மிரட்டவில்லை. பல தரப்பினர்களையும் விரட்டிக் கொண்டு இருக்கிறது.

கூலித் தொழிலாளர்கள், தினக் கூலிகள், பிளம்பர், எலெக்ட்ரீஷியன் போன்ற சின்ன சின்ன வேலைகளை சொந்தமாகச் செய்து பிழைப்பவர்கள் என பலரையும் பாதித்து இருக்கிறது.

குவிந்த ஆர்டர்கள்.. டெலிவரி செய்ய முடியாமல் தவிக்கும் அமேசான்..ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டம்!

பில்லியனர்கள்

பில்லியனர்கள்

பணக்காரர்களுக்கு என்ன, எப்போதும் போல பணத்தில் மிதந்து கொண்டு இருப்பார்கள், கொரோனா எல்லாம் அவர்களை பாதித்து இருக்காது என்பது தான் உங்கள் எண்ணமா? உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். முகேஷ் அம்பானி தொடங்கி அனில் அம்பானி வரை, அவர்கள் ரேஞ்சுக்கு தகுந்தாற் போல, பல பில்லியன் டாலர் தொடங்கி லட்சங்கள் வரை பணத்தையும், அவர்களின் சொத்து மதிப்புகளையும் இழந்து இருக்கிறார்கள்.

அடி வாங்காத நபர்கள்

அடி வாங்காத நபர்கள்

இந்த கொரோனா வைரஸில் அடி வாங்காத 3 பில்லியனர்கள் யார் தெரியுமா? குஜராத் தொழிலதிபரான கெளதம் அதானி, டி மார்ட் நிறுவனரான ராதாகிஷன் தமானி மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மித்தல். இந்தியாவின் டாப் 100 பில்லியனர்களில் இந்த 3 பேரின் சொத்து மதிப்பு மட்டும் தான் இந்த கொரோனா காலத்தில் அதிகரித்து இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எவ்வளவு அதிகரிப்பு
 

எவ்வளவு அதிகரிப்பு

கடந்த மார்ச் 2019 ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை நிலவரப்படி, சுனில் மித்தலின் சொத்து மதிப்பு 6.5 பில்லியன் டாலராகத் தான் இருந்தது. ஆனால் கடந்த ஒரு வருட காலத்தில் சுமார் 2.3 பில்லியன் டாலர் அதிகரித்து 8.8 பில்லியன் டாலராக ஏப்ரல் 2020-ல் அதிகரித்ததாகச் சொல்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை.

இன்று என்ன மதிப்பு

இன்று என்ன மதிப்பு

இன்று 13-04-2020 நிலவரப்படி ஏர்டெல் தலைவர், சுனில் மித்தலின் சொத்து மதிப்பு இன்னும் 1.2 பில்லியன் டாலர் அதிகரித்து தற்போது 10.1 பில்லியன் டாலராக அதிகரித்து இருப்பதாகச் சொல்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் வலைதளப் பக்கம். ஆக கடந்த மார்ச் 2019 முதல் இன்றைக்கு வரை கணக்கு போட்டால் சுமார் 3.6 பில்லியன் டாலர் அவரின் சொத்து மதிப்பு அதிகரித்து இருக்கிறது.

காரணம்

காரணம்

இந்திய டெலிகாம் சந்தையில், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் மட்டும் இணைந்து ஆட்சி செய்ய நிறைய வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள். அதோடு, கொரோன காலத்திலும், ஏர்டெல்லின் வியாபாரம் ஒன்றும் பெரிதாக அடி வாங்கவில்லை. இந்த இரண்டு விஷயங்களால், ஏர்டெல்லின் பங்கு விலை அதிகரிக்கிறது. அதனால் சுனில் மித்தலின் சொத்துக்களும் கொஞ்சம் அதிகரிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sunil mittal net worth up $2.6 Bn in last 1 year

The telecom company airtel owner sunil mittal's net worth has increased around $2.6 billion in the last one year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X