தவிக்கும் ஸ்விக்கி ஊழியர்கள்.. போராட்டம் கைகொடுக்குமா.. சம்பள குறைப்பு சிக்கலை தீர்க்க என்ன வழி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் அடையாளம் தான் ஈ-காமர்ஸ் நிறுவனங்கள். அதன் மறு உருவம் தான் உணவு டெலிவரி நிறுவனங்கள். இந்தியாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் நிறுவனங்கள் இருந்தாலும், முன்னணி நிறுவனங்களாக உணவு டெலிவரி வர்த்தகத்தில் இருப்பது சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி தான்.

 

தற்போது நாட்டையே பதம் பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் கொடிய அரக்கனால், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது இந்திய பொருளாதாரம்.

இதற்கிடையில் இந்த தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் மட்டும் விதிவிலக்கா என்ன? இதனால் பணி நீக்கம், சம்பள குறைப்பு என பல பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வருகின்றனர் பல துறையினை சார்ந்த ஊழியர்கள்.

ஸ்விக்கி ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு

ஸ்விக்கி ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு

இதற்கிடையில் தான் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியின் ஊழியர்கள் ஊதியக் குறைப்பு, ஊக்கத்தொகைக் குறைப்பு ஆகியவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தி, கடந்த சில ஸ்விக்கி உணவு வினியோகப் பணியாளர்கள் கடந்த மூன்று தினங்களாகவே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பெருகிவரும் ஆன்லைன் கலாச்சாரம்

பெருகிவரும் ஆன்லைன் கலாச்சாரம்

சென்னை உள்ளிட்ட பல நகரங்கள், மாநகரங்களில் மனிதர்களின் வாழ்க்கை முறையிலும், பணி முறையிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, வீடுகளில் சமைப்பதற்கு பதிலாக உணவகங்களில் ஆன்லைன் முறையில் உணவுகளை வாங்கி உண்ணும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆன்லைன் உணவு டெலிவரி என்ற கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.

சம்பளம் குறைப்பு
 

சம்பளம் குறைப்பு

ஆக இப்படியாக ஆன்லைன் முறையில் ஆர்டர் செய்யும் உணவுகளை உணவகங்களில் இருந்து, வீடுகளுக்கு கொண்டுச் சென்று கொடுக்கும் பணியில் ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆக இப்படி டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் 60% குறைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

எவ்வளவு குறைப்பு?

எவ்வளவு குறைப்பு?

சென்னையில் அதனை சுற்றியுள்ள 4 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களுக்கு உணவு கொண்டு சென்று வழங்குவதற்காக வழங்கப்பட்டு வந்த ஊதியம் 35 ரூபாயிலிருந்து, இப்போது 15 ரூபாயாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. இது முன்னர் 40 ரூபாயிலிருந்து, 35 ரூபாயாக குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு ஊக்கத்தொகை குறைப்பு

பல்வேறு ஊக்கத்தொகை குறைப்பு

இது தவிர நீண்ட தொலைவுக்கு சென்று உணவு வழங்குவதற்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட, 20 வகையான ஊக்கத்தொகைகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. இது உணவு வினியோகப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதித்திருப்பதால், அவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இது குறித்து பணியாளர் தரப்பில், ஏற்கனவே டெலிவரி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொலைதூர பயணங்களுக்கான செலவு, அதோடு மழைக்காலங்களுக்கான ஊக்கத்தொகை மற்றும் பல ஊக்கத் தொகைகள் குறைக்கப்பட்டுள்ளது.

செலவினங்கள் அதிகரிப்பு

செலவினங்கள் அதிகரிப்பு

மேலும் வழக்கமாக ஒரு பணியாளர் ஒரு நாளைக்கு 20 முதல் 25 இடங்களுக்குச் சென்று உணவு வழங்க முடியும். ஒரு முறை உணவு வழங்க 40 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டால், அவர் அதிகபட்சமாக தினமும் 1,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். ஆனால் அவரின் மற்ற போக்குவரத்து செலவினங்கள் போக, நாளைக்கு 700 - 750 ரூபாய் வரை கிடைக்கும்.

குறைவான வருமானம்

குறைவான வருமானம்

அதோடு அவர்களுக்கு கூடுதலாக கிடைக்கும் ஊக்கத்தொகையும் போதுமானதாக இருந்தது. ஆனால், இப்போது ஒருமுறை உணவு வழங்க 15 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. அதோடு தினசரி 20 டெலிவரி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் ஊழியர்களுக்கு வெறும் 300 ரூபாய் மட்டுமே வருமானமாக கிடைக்கிறது.

ஊழியர்கள் போராட்டம்

ஊழியர்கள் போராட்டம்

அதிலும் உணவு மற்றும் எரிபொருள் செலவு 200 ரூபாய் போக, 100 ரூபாய் கூட நிகர வருமானமே கிடைப்பதில்லை. இதனால் ஊரெங்கிலும் உணவை டெலிவரி செய்யும் ஸ்விக்கி ஊழியர்களுக்கு, பணியாளர்களின் குடும்பத்தினருக்கே உணவு கிடைப்பதில்லை. இதன் காரணமாக ஊழியர்கள் சம்பள குறைப்பைக் கண்டித்து கடந்த மூன்று தினங்களாகவே போராட்டம் நடத்தியுள்ளனர்.

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆனால் இது தரப்பாக ஸ்விக்கி தரப்பிலோ நிறுவனமோ அல்லது தொழிலாளர் நலத்துறையோ எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை.

இது ஸ்விக்கி ஊழியர்கள் மட்டும் அல்ல நாட்டில் பல ஆயிரம் ஊழியர்கள் இந்த நெருக்கடியான நிலையில் வேலையிழந்து தவித்து வருகின்றனர். ஆக அரசு இதில் தலையிட்டு, இதற்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்பதே, இங்கு அனைவரின் வேண்டுகோளாக உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Swiggy employee’s incentive issue

Swiggy delivery employees in Chennai have been on strike last 3 days.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X