இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஸ்விக்கி இந்த லாக்டவுன் காலத்தில் பல புதிய சேவைகளைத் தனது தளத்தில் அறிமுகம் செய்து புதிதாகப் பல லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றது.
இந்நிலையில் லாக்டவுன் கட்டுப்படுகளுக்க அதிகளவில் தளர்வு அளிக்கப்பட்டு வர்த்தகச் சந்தை தனது இயல்பான சூழ்நிலைக்குத் திரும்பிக்கொண்டு இருக்கும் இந்தச் சூழ்நிலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
18 நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்.ரூ.19,955 கோடி முதலீட்டில் 26,509 பேருக்கு வேலைவாய்ப்பு.!

சாலையோர உணவகங்கள்
இந்தியாவில் சாலையோர உணவகங்களுக்கென மிகப்பெரிய வர்த்தகச் சந்தையும், வாடிக்கையாளர்கள் கூட்டமும் இருக்கும் நிலையில், ஸ்விக்கி சாலையோர உணவகங்களுக்கு உதவும் வகையிலும், அவர்களுக்குப் புதிய வாடிக்கையாளர்களைத் தனது ஸ்விக்கி தளத்தின் வாயிலாகக் கொண்டு வரவும், இதன் மூலம் வர்த்தகம் மற்றும் வருவாய் பெற மிகப்பெரிய திட்டத்தை வகுத்துள்ளது ஸ்விக்கி.

பிரதமர் திட்டம்
ஸ்விக்கி ஏற்கனவே தனது தளத்தில் பிரபலமாக இருக்கும் பல சாலையோர கடைகளைத் தனது ஸ்விக்கி தளத்தில் இணைத்து வர்த்தகம் செய்து வருகிறது. இந்நிலையில் Prime Minister Street Vendor's AtmaNirbhar Nidhi (PM SVANidhi) திட்டத்தின் கீழ் தனது சாலையோர உணவக கடைகள் இணைப்புத் திட்டத்தில் சுமார் 125 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்கிறது ஸ்விக்கி.

மத்திய அரசு
மோடி தலைமையில் அரசு உருவாக்கப்பட்டு உள்ள இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசும் ஸ்விக்கி நிறுவனமும் இணைந்து இந்தியாவின் சுமார் 125 நகரங்களில் இருக்கும் சாலையோர உணவக கடைகளை ஆன்லைன் தளத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது.
இத்திட்டம் உலகிலேயே மிகப்பெரிய சாலையோர உணவகங்கள் கடைகள் திட்டமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

36,000 விற்பனையாளர்
மத்திய அரசு மற்றும் ஸ்விக்கி இணைந்து செயல்படும் இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டின் 125 நகரங்களில் இருந்து சுமார் 36,000 சாலையோர உணவகங்கள் மற்றும் சாட் கடைகள் ஆன்லைன் தளத்திற்கு வருகிறது. இதனால் பெருமளவிலான வர்த்தகம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய உணவு சந்தை
இந்தியாவின் உணவு சந்தை சுமார் 4,236 பில்லியன் ரூபாய் மதிப்பிலான சந்தை வர்த்தகத்தைக் கொண்டுள்ளது. இதில் பெரும் ஹோட்டல்களில் இருக்கும் ரெஸ்டாரன்ட் வர்த்தகம் 116 பில்லியன் ரூபாய், செயின் மார்கெட் சந்தை 398 பில்லியன் ரூபாய், லைசென்ஸ் பெற்று உணவகங்களை நடத்தும் நிறுவனங்களின் சந்தை 1,203 பில்லியன் ரூபாய்.
ஆனால் வகைப்படுத்தாத சந்தை அதாவது சாலையோர உணவகங்கள், தின்பண்ட கடைகள், சாட் கடைகள் மட்டும் மொத்த உணவு சந்தையில் சுமார் 50 சதவீத சந்தையான 2,519 பில்லியன் ரூபாய் சந்தையைக் கொண்டுள்ளது.
இந்த மாபெரும் சந்தையைத் தான் தற்போது ஸ்விக்கி தனது தளத்திற்குள் கொண்டு வரத் திட்டமிட்டு வருகிறது.