வீணாகும் காய்கறிகளை உரமாக்கும் திட்டம்.. வேளாண் பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக பற்பல அறிவிப்புகள் இன்று வெளியாகின.

 

அதில் இன்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் ஒன்று உழவர் சந்தைகளில் வீணாகும் காய்கறிகளை உரமாக்கும் திட்டம்.

உண்மையில் இது வரவேற்கதக்க திட்டம் எனலாம். ஒரு நாளைக்கு பல ஆயிரம் கிலோ காய்கறிகள் வீணாகின்றன. ஆக அதனை பயன்படுத்தி உரம் தயாரிப்பு என்பது மிக நல்ல விஷயமே.

பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு மகிழ்ச்சி.. ராகுல் காந்தி பெயரில் கேஎஸ் அழகிரி பாராட்டி ட்வீட்..!

எவ்வளவு ஒதுக்கீடு

எவ்வளவு ஒதுக்கீடு

இது குறித்து இன்று பட்ஜெட் தாக்கலின் போது வெளியான அறிவிப்பில், 25 உழவர் சந்தைகளில் 2.75 கோடி ரூபாயில் உரங்கள் தயாரிக்கும் விதமாக கட்டமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வீணாகும் காய்கறிகளை வீணாக குப்பைகளில் வீசி எறியாமல் சரியான முறையில் பயன்படுத்தினால் உரங்களாக மாறும்.

புதிய உழவர் சந்தைகள் தொடக்கம்

புதிய உழவர் சந்தைகள் தொடக்கம்

இதனால் சுற்று சூழலும் மேம்படும். உரமும் தயாரிக்க முடியும். மொத்தத்தில் இது வரவேற்க தக்க நல்ல விஷயம் என சந்தை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இன்றைய பட்ஜெட்டில் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, தஞ்சை, புதுக்கோட்டை, நெல்லை, வேலூர், திருச்சி, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல இடங்களில் புதிய உழவர் சந்தைகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பலகைகளில் விலை நிலவரம்
 

டிஜிட்டல் பலகைகளில் விலை நிலவரம்

உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விலை விவரங்கள் டிஜிட்டல் பலகைகளில் அறிவிக்க வழிவகை செய்யப்படும். முதல் கட்டமாக வரத்து அதிகளமுள்ள, 50 உழவர் சந்தைகள், 50 விற்பனை கூடங்களில் இந்த செயல்முறையானது செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்

உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்

தமிழகத்தில் உழவர் சந்தைகள் மூலம் தினசரி சுமார் 2000 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் சுமார் 8000 விவசாயிகள் மூலம் 4 லட்சம் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக உழவர் சந்தைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை இன்னும் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய துறைக்கு நல்ல திட்டம்

விவசாய துறைக்கு நல்ல திட்டம்

தமிழக அரசின் இந்த திட்டத்தின் மூலம் வீணாகும் காய்கறிகள் உரமாக்கப்பட்டு மீண்டும், உரமாக விவசாயித்திற்கு பயன்படுத்தப்படும். இது விவசாய பொருட்கள் உற்பத்தியினை ஊக்குவிக்கும். தரமான உரமாகவும் அமையும். மொத்தத்தில் இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கலாம். மொத்தத்தில் இது விவசாய துறையினருக்கு மிக நல்ல திட்டமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamil Nadu Agriculture Budget 2021: Tamilnadu govt plans to compost vegetable waste

The Government of Tamil Nadu planned to compost the wasted vegetables in the uzhavar santhai
Story first published: Saturday, August 14, 2021, 14:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X