தூத்துகுடி அருகில் ரூ.49,000 கோடியில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை.. மாஸ்காட்டும் தமிழக பட்ஜெட்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
TN Budget 2020 | TN Budget focuses on agriculture

சென்னை: தமிழக பட்ஜெட்டின் சிறப்பம்சங்களில் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை 49,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 

இதே போல காவிரி குண்டாறு திட்டத்திற்கு நிலம் எடுக்க 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் மாமல்லபுரத்தில் சுற்றுலா மேம்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதற்கான சிறப்பு தொகுப்புத் திட்டம் 563 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியோர் நலனுக்காக திட்டம்

முதியோர் நலனுக்காக திட்டம்

முதியோர் நலனுக்காக பல முன் முயற்சிகளை தமிழக அரசு தொடங்கும். இதன் முன்னோட்ட திட்டமாக 37 மாவட்டங்களிலும் தலா 2 வட்டாரங்களில் 37 லட்சம் ரூபாய் செலவில் முதியோர் ஆதரவு மையங்கள் உருவாக்கப்படும். உண்மையில் இந்த திட்டத்தின் மூலம் ஆதரவற்ற முதியோர்கள் பாதுக்காக்கபட வழிவகுக்கும். நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டால் இத்திட்டம் நல்லதொரு திட்டமாகவே இருக்கும்.

குழந்தைகளுக்கு என்ன திட்டம்?

குழந்தைகளுக்கு என்ன திட்டம்?

இதே ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்தி தர வழிவகை செய்யப்படும். மேலும் அந்த குழந்தைகளுக்கு நல்லதொரு வாழ்க்கையை ஏற்படுத்தி தர தமிழக அரசு முயற்சி செய்யப்படும். மேலும் தற்போது புதியதாக வகுக்கப்பட்டு வரும் குழந்தைகள் நலன் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

மகளிருக்கு என்ன சிறப்பம்சம்?
 

மகளிருக்கு என்ன சிறப்பம்சம்?

பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழகத்தில் 13 இடங்களில், தமிழ் நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும். மேலும் நெடுஞ்சாலை பிரிவில் சாலைப்பாதுகாப்பிற்காக தனியானதொரு பிரிவு உருவாக்கப்படும். சென்னை, மதுரை, கோவை மாநகராட்சியில் சாலை பாதுகாப்பு பிரிவு ஏற்படுத்தப்படும்.

மத்திய அரசால் பாதிப்பு

மத்திய அரசால் பாதிப்பு

மத்திய அரசிடம் இருந்து தமிழ் நாட்டின் பங்காகக் பெறப்படும் மத்திய வரிகளின் நிதிப்பகிர்வு, கடந்த 2019 - 20ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் வரலாறு காணாத அளவு வீழ்ச்சியை கண்டுள்ளதனால், இது தமிழகத்திலும் வீழ்ச்சி கண்டுள்ளது. எப்படி எனினும் 2017 - 18ம் ஆண்டில் தமிழகத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை 4,073 கோடி ரூபாயை நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் வழங்கப்படும்.

ஒரே நாடு ஒரே அட்டை

ஒரே நாடு ஒரே அட்டை

சிறப்பு வினியோக திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கார்டு உள்ளவர்கள் விரைவில் தமிழகம் முழுவதும், உள்ள எல்லா ரேஷன் கடைகளிலும் பொருள்களை பெறும் திட்டம் தொடங்கப்படும். திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் 77.94 கோடி ரூபாய் மதிப்பிலான உணவுப்பூங்கா அமைக்க அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தரம் உயர்த்த நடவடிக்கை

தரம் உயர்த்த நடவடிக்கை

இதே போல் தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரையில் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு 10 ரூபாய் மானியம், 75 ஆண்டை நிறைவு செய்வதால் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamilnadu budget 2020: Tamilnadu budget highlights - part 2

Key highlights of tamilnadu budget 2020- 21
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X