எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு.. தமிழக பட்ஜெட்டில் சிறப்பு அம்சங்கள் என்ன.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிமுக அரசின் கடைசி பட்ஜெட்டின் நிச்சயம் மிக முக்கிய திட்டங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் அடுத்து வரும் சட்டச்சபை தேர்தலில் கவனம் செலுத்தும் வகையில் முக்கியமான பல அறிவிப்புகள் வெளியானது.

 

அந்த வகையில் எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு, என்னென்ன சிறப்பம்சங்கள்? வாருங்கள் பார்க்கலாம்.

சுகாதாரத்துக்கு முக்கியத்துவம்

சுகாதாரத்துக்கு முக்கியத்துவம்

பொதுவாக ஒரு நாட்டின் சுகாதாரம் நன்றாக இருந்தால் தான், அந்த நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருக்கும். அந்த நாட்டின் பொருளாதாரம் நன்று வளர்ச்சி பெறும், என்பதை எடுத்துக் காட்டும் விதமாக உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்தாலும் சீனாவில் கொரோனா தாக்கம் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய முடிகிறது. ஆக அதன் எதிரொலியாக தமிழக பட்ஜெட்டில் சுகாதார துறைக்கு 15,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது நல்ல விஷயம் தான்.

கல்விக்கு எவ்வளவு நிதி?

கல்விக்கு எவ்வளவு நிதி?

இதுவே நாட்டில் மின்சாரதுறையை மேம்படுத்த மின்சார துறைக்கு 20,115 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் நாட்டின் அடுத்த அடிப்படை தேவையான கல்வித்துறைக்கு 34,841 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், இதே உணவு மானியத்திற்கு 6,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மருத்துவ கல்லூரிகள் அமைக்க திட்டம்
 

மருத்துவ கல்லூரிகள் அமைக்க திட்டம்

இதே கல்வித்துறையை ஊக்குவிக்க 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழுக்காக 74.08 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், கீழடி அருட்காட்சியகத்திற்காக 12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

தொழில் முனைவோருக்கு மேம்பாட்டு திட்டம்

தொழில் முனைவோருக்கு மேம்பாட்டு திட்டம்

இதே போக்குவரத்து துறைக்கு 2,716.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், பொன்னேரியில் 21,996 ஏக்கரில் தொழில் முனைய மேம்பாட்டு திட்டம் அமைக்கப்படும். சென்னை - கன்னியாகுமரி இடையிலான பெருவழிச்சாலை திட்டம், நெடுஞ்சாலைத் துறைக்கு 15,850 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும், சமூக பாதுக்காப்பு ஒய்வூதிய திட்டங்களுக்கு 4,315 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும், பேரிடர் மேலாண்மைக்கு 1,360 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

மேலும் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3,700 கோடி ரூபாய் நிதியும், தமிழக காவல் துறைக்கு 8,876 கோடி ரூபாயும், இதே தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறைக்கு 405 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும், சிறைச்சாலைகளுக்கு 392 கோடி ரூபாயும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 18,540 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கி மூலம் ரூ.11,000 கோடி பயிர்க்கடன்

கூட்டுறவு வங்கி மூலம் ரூ.11,000 கோடி பயிர்க்கடன்

இதே நீதி நிர்வாகத்துறைக்கு 1,403 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடும், நாட்டின் முதுகெலும்பான வேளாண்துறைக்கு 11,894 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும், திறன்மிகு நகரங்கள் திட்டத்தினை செயல்படுத்த 1,650 கோடி ரூபாயும், அம்ருத் திட்டத்தை அமல்படுத்த 1,450 கோடி ரூபாய் நிதியும், வரும் நிதியாண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு 11,000 கோடி ரூபாய் பயிர்கடனும் வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு

நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு

இதுவே நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306.95 கோடி ரூபாய் நிதியும், இதுவே ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754. 30 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதுவே கால் நடை துறைக்கு 199 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamilnadu budget 2020: Tamilnadu budget highlights - part 3

Tamilnadu Budget allocations for agriculture by Rs.11,894 crore, and education secor allocation Rs. 34,841 crore etc.
Story first published: Friday, February 14, 2020, 14:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X