மேட் இன் இந்தியா என்பது போல மேட் இன் தமிழ்நாடு.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு...!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து, பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை கொடுத்து வருகின்றார்.
குறிப்பாக பொருளாதாரத்தை மேம்படுத்த நிதி குழு, நிதி நெருக்கடி, பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்தும் விதமான நடவடிக்கைகள், வேளாண் பட்ஜெட் என பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

 

வரலாற்று சரிவில் வீட்டு கடன் வட்டி விகிதம்.. ஹெச்டிஎப்சி செம அறிவிப்பு..!

இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற "ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு" என்ற தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் மேட் இன் இந்தியா என்பது போல மேட் இன் தமிழ்நாடு என்ற அடிப்படையில் நாம் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவு

ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவு

மேலும் ஏற்றுமதியாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் தேவையான அனைத்து ஆதரவுகளையும் தமிழக அரசு வழங்கும் என்று கூறியுள்ளார். தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் இந்தியா முழுவதும் பரந்துள்ளது. இது உலகம் நோக்கி செல்லவேண்டும் உலகம் நம்மை நோக்கி வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொழில்துறை வளர்ச்சி

தொழில்துறை வளர்ச்சி

தொழில் வளர்ச்சி என்பது உங்கள் துறை வளர்ச்சி மட்டுமல்ல. அது அனைத்து துறைகளின் வளர்ச்சி என்பதை உணர்ந்தவன் நான். அதுதான் இந்த மாநிலத்தின் வளர்ச்சி. இது நாட்டின் வளர்ச்சிக்கும் துணை புரிகிறது. தொழிற்துறை வளர்கிறது என்றால், அனைத்து துறைகளும் வளர்கிறது என்று பொருள். எனவே நான் இதுபோன்ற மாநாடுகள் கண்காட்சிகள் தமிழகத்தில் அதிகம் நடைபெறவேண்டும் சென்னையில் மட்டுமல்ல அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நடைபெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் கூறியுள்ளார்.

24 ஒப்பந்தங்கள்
 

24 ஒப்பந்தங்கள்

இன்றைய தினம் 2,120.54 கோடி ரூபாய் மதிப்பிலான 24 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலமாக 41,695 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இந்த முதலீடுகள் சென்னை திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி என்று தமிழ்நாட்டில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் வளர்ச்சிக்கு ஏதுவாக பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

ஏற்றுமதியை அதிகரிக்க ஆதரவு

ஏற்றுமதியை அதிகரிக்க ஆதரவு

தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், ஏற்றுமதியை பெருக்குவதற்கும், எந்த நிலையிலும் ஏற்றுமதியாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இந்த அரசு நிச்சயமாக உறுதுணையாக நிற்கும். அனைத்து ஆதரவுகளையும் தொடர்ந்து அளிக்கும் என்று நான் உறுதி அளிக்கிறேன் என கூறியுள்ளார்.

உலகம் முழுக்க ஏற்றுமதி செய்ய வேண்டும்

உலகம் முழுக்க ஏற்றுமதி செய்ய வேண்டும்

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது எப்போதும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே இருந்தது இல்லை. அது இந்தியா முழுமைக்கும் பரந்த வளர்ச்சியாக தான் இருந்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய வளர்ச்சியாகவும் இருந்துள்ளது. நம்முடைய தயாரிப்புகள் அனைத்தும் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்.

இலக்கு எது?

இலக்கு எது?

உலகின் முன்னணி தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் நிறுவனத்தை தொடங்க வேண்டும். அதாவது உலகம் முழுக்க நாம் செல்லவேண்டும். உலகம் தமிழகத்தை நோக்கி வந்தாகவேண்டும். மொத்தத்தில் தமிழகத்தின் தொழில் துறையின் உள்ளங்கையில், உலகம் இருக்க வேண்டும். அதுவே உங்களது இலக்காக அமைந்திட வேண்டும்.

தமிழகத்தின் பங்கு

தமிழகத்தின் பங்கு

இந்திய அளவில் தொழில் துறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. 1.93 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியுடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு மூன்றாவது பெரிய ஏற்றுமதி செய்யும் மாநிலமாக விளங்கி வருகின்றது. இந்த நிலையில் 2020 - 21 ஆம் ஆண்டிற்கான அகில இந்திய அளவிலான ஏற்றுமதியில், தமிழ்நாட்டின் பங்கு 8.97% ஆகும்.

தமிழகத்தின் பங்களிப்பு

தமிழகத்தின் பங்களிப்பு

இதுதவிர மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. ஆடை மற்றும் அணிகலன்கள் ஏற்றுமதியில் 58% பங்களிப்பை அளித்து வருகிறது. காலனி ஏற்றுமதியில் 45% பங்களிப்பு உள்ளது. இதே மின்னணு இயந்திரங்கள் மற்றும் மின்னணு சாதனங்களில் 25% சதவிகிதம் பங்களிப்பும் உள்ளது.

தமிழனின் வெற்றி

தமிழனின் வெற்றி

இந்த வெற்றி ஒவ்வொரு தமிழனின் உழைப்பை உள்ளடக்கிய வெற்றியாகும். இந்த வெற்றியோடு நாம் திருப்தி அடைந்துவிடக்கூடாது. இந்த எண்ணிக்கையை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்க வேண்டும். வேலூர் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து தோல் பொருட்கள், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் திருப்பூரில் இருந்து ஜவுளி, சென்னையில் இருந்த மோட்டார் வாகன பொருட்கள் என்று பரவலான வகையில் சீராக ஏற்றுமதி மேற்கொள்ளப்படுகின்றன.

மாவட்ட ஏற்றுமதி மையங்கள்

மாவட்ட ஏற்றுமதி மையங்கள்

உலக வர்த்தக தரத்திற்கு ஏற்ற வகையில் மதிப்புக்கூட்டு பொருட்களை ஏற்றுமதி மதிப்பு கூட்டு பொருட்களை உற்பத்தி செய்திட வேண்டும் அதன் மூலமாக ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். மேலும் ஏற்றுமதியாளர்கள் மதிப்புக்கூட்டல் பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு பல சலுகைகளை வழங்கும் திட்டம் வடிவமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்துவம் வாய்ந்த பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை உலக அளவில் சந்தைப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஏற்றுமதி மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

தமிழ்நாடு அரசு தொழில்துறைக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழ்நாட்டில் 406.6 கோடி ரூபாய் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மேம்பாட்டு திட்டத்திற்காக, 15% மானியம் என்ற அளவில் 60.91 கோடி ரூபாய் மானியம் வழங்கிட தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

எங்கு பஞ்சுக் கிடங்குகள்

எங்கு பஞ்சுக் கிடங்குகள்

பருத்தி பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு மீது விதிக்கப்படும் 1% சந்தை நுழைவு வரியை நீக்க வேண்டும் என நெசவாளர்கள், தொழில் முனைவோர், நூற்பாலைகள், பஞ்சு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது இந்த வரி நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய பருத்தி கார்ப்ரேஷன் தற்போது சேலம், மதுரை, கோயம்புத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் பஞ்சுக் கிடங்குகள் அமைத்திட முன்வந்துள்ளது.

டிஜிட்டல் வளர்ச்சிக்காக

டிஜிட்டல் வளர்ச்சிக்காக

டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் சேவைகளின் மூலமாக உலக வர்த்தகம் முன்னெப்போதையும் விட, பன்மடங்கு பெருகி வருகின்றது. இது நம் ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் M- TIPB நிறுவனம், பிளிப்கார்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

தேனி, மணப்பாறையில் உணவுப் பூங்காக்கள்

தேனி, மணப்பாறையில் உணவுப் பூங்காக்கள்

காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண்மையை ஊக்குவிக்க திருச்சி-நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடையே என பகுதி, வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெரும் வழித்தடமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி, மணப்பாறை மற்றும் திண்டிவனம் ஆகிய 3 இடங்களில் உணவுப் பூங்காக்கள் ஏற்படுத்த உள்ளன ஏற்படுத்தப்பட உள்ளன.

பன்மடங்கு வளர்ச்சி காணும்

பன்மடங்கு வளர்ச்சி காணும்

வேளாண் ஏற்றுமதி சேவை மையமும் உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தையும் செயல்படுத்தும்போது தமிழ்நாடு அடையும் வளர்ச்சி என்பது, இந்தியாவிலேயே சிறந்ததாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்நாடு கொண்டிருக்கும் பன்முகத் திறன்கள் மற்றும் வளங்களை கணக்கிட்டு பார்த்தால் நமது திறமைக்கேற்ற ஏற்றுமதியில் இன்னும் பல மடங்கு வளர்ச்சி பெற இயலும்.

குறிப்பிட்ட நாடுகளுக்கே ஏற்றுமதி

குறிப்பிட்ட நாடுகளுக்கே ஏற்றுமதி

பெரும்பாலான பொருட்கள் சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனை உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் மேட் இன் இந்தியா போல மேட் இன் தமிழ்நாடு என்ற குரல் ஒலிக்க வேண்டும் என்பது, எங்கள் ஆசை மட்டுமல்ல, லட்சியமும் கூட. அந்த லட்சியத்தை நோக்கியே எங்கள் பயணம் அமைந்திடும். 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு அடைந்திட வேண்டும் என்ற இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம்.

ஏற்றுமதி இலக்கு?

ஏற்றுமதி இலக்கு?

இந்த இலக்கினை அடைய வேண்டுமெனில் தற்போது 26 பில்லியன் டாலராக இருக்கும் ஏற்றுமதியை, 2030ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்திட வேண்டும். வர்த்தக வரைபடத்தில் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி பெறுவதை ஒரு சவாலாக நாங்கள் எடுத்துக் கொண்டுள்ளோம். இந்த லட்சியத்தை அடைவதற்கு பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள நிறுவனங்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். என்பதை நான் உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்க கடமைப்பட்டுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamilnadu export conclave: like made in India, made in Tamilnadu should come: says CM MK Stalin

Tamilnadu export conclave: like made in India, made in Tamilnadu should come: says CM MK Stalin
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X