வேலைவாய்ப்புகள் உருவாக்க புதிய திட்டங்கள்.. இளைஞர்களுக்கு ஜாக்பாட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டில் கடந்த 10 வருடம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் அதிகளவில் உருவாக்கப்படவில்லை எனக் கருத்து நிலவி வந்த வேளையில், முக.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைச் சேர்த்து உருவாக்கும் சில முக்கியமான திட்டங்களை அறிவித்துள்ளது.

 

இந்த அறிவிப்புகள் உடனடியாகப் பலன் அளிக்காவிட்டாலும் நீண்ட கால அடிப்படையில் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு, உற்பத்தி ஆகியவற்றை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி கவலை வேண்டாம்.. வருமான வரி தொடர்பாக இந்த 3 மெயில் ஐடிக்களில் புகார் தெரிவிக்கலாம்..!

மருத்துவச் சாதனங்கள் பூங்கா

மருத்துவச் சாதனங்கள் பூங்கா

உலகளவில் மருத்துவ பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அதிலும் கொரோனா பாதிப்பு நிறைந்த இக்காலகட்டத்தில் மருத்துவப் பொருட்கள் தயாரிப்பு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அடிப்படைத் தேவையாக மாறியுள்ள இந்த வேளையில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அறிக்கையில் ஒரகடத்தில் மருத்துவச் சாதனங்கள் பூங்கா அமைக்க அறிவிக்கப்பட்டு உள்ளது

மருத்துவச் சாதனங்கள் உற்பத்தி

மருத்துவச் சாதனங்கள் உற்பத்தி

இந்த மருத்துவச் சாதனங்கள் உற்பத்தி பூங்காவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் உற்பத்தி தளத்தை அமைத்து அதன் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை உள்நாட்டில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்ய முடியும்.

எலக்ட்ரிக் வாகனங்கள்
 

எலக்ட்ரிக் வாகனங்கள்

இதேபோல் இந்தியா மற்றும் உலக நாடுகளில் எலக்ட்ரிக் வாகனத்திற்கான டிமாண்ட் அதிகரித்துள்ள இந்த நிலையில், சென்னையில் உருவாகியுள்ள ஆட்டோமொபைல் உற்பத்தி சந்தைக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் திருவள்ளுரில் எலக்ட்ரிக் வாகன பூங்கா உருவாக்க உள்ளதாகப் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம்

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தொழிற்சாலையை அமைத்து உற்பத்தியைத் துவங்கி, டெலிவரி பணிகளை விரைவில் துவக்க உள்ளது. இந்தச் சூழ்நிலையில் திருவள்ளூரில் அமைக்கப்படும் புதிய எலக்ட்ரிக் வாகன பூங்கா எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

மருத்துவச் சாதனங்கள் உற்பத்தி போலவே தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டும் எலர்ட்ரிக் வாகனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

சிப்காட் தொழிற்பூங்கா

சிப்காட் தொழிற்பூங்கா

இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை, தர்மபுரி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் எனப் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

தொழிற்சாலைகள் எண்ணிக்கை

தொழிற்சாலைகள் எண்ணிக்கை

2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் சிறிய நகரங்களிலும் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பும், வர்த்தகமும் உருவாக்க முடியும்.

புவியியல் புதை வடிவ பூங்கா

புவியியல் புதை வடிவ பூங்கா

இதே தொடர்ந்து அரியலூர் -பெரம்பலூர் மாவட்டங்களில் புவியியல் புதை வடிவ பூங்கா ரூ 10 கோடியில் அமைக்கப்படும் எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

புதிய டைடல் பார்க்

புதிய டைடல் பார்க்

இவை அனைத்திற்கும் மேலாக இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னையில் இருக்கும் டைடல் பார்க் போலவே தமிழ்நாட்டில் விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஐடி நிறுவன வேலைவாய்ப்புகள்

ஐடி நிறுவன வேலைவாய்ப்புகள்

விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் ஐடி பார்க் அமைக்கப்படுவதன் மூலம் புதிதாகப் பல ஐடி நிறுவனங்கள் வருவது மட்டும் அல்லாமல் இப்பகுதியில் இருக்கும் பட்டதாரிகளுக்கு ஐடி வேலை பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.

உற்பத்தி துறை- சேவை துறை

உற்பத்தி துறை- சேவை துறை

இந்த அறிவிப்புகளைப் பார்க்கும் போது ஸ்டாலின் தலைமையிலான அரசு உற்பத்தி துறையை மட்டும் நம்பியிருக்கக் கூடாது சேவைத் துறையிலும் அதிகளவிலான வர்த்தகத்தை உருவாக்க வேண்டும் என்பது உறுதியாக இருப்பது தெளிவாகியுள்ளது.

சேவை துறையில் அதிக வளர்ச்சி

சேவை துறையில் அதிக வளர்ச்சி

பொதுவாகவே உற்பத்தி துறையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், இதேவேளையில் சேவை துறையில் வேலைவாய்ப்புகள் சற்று குறைவாக இருந்தாலும் வருமானம், பொருளாதார வளர்ச்சி ஆகியவை அதிகமாக இருக்கும்.

தொழிற்பூங்கா மற்றும் டைடல் பார்க்

தொழிற்பூங்கா மற்றும் டைடல் பார்க்

இந்தத் தொழிற்பூங்கா மற்றும் டைடல் பார்க் திட்டங்கள் மூலம் கடந்த 10 வருடத்தில் தமிழகத்தில் உருவாக இருந்த வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவை அடுத்த 5 முதல் 10 வருடத்தில் ஈடு செய்ய ஸ்டாலின் தலைமையிலான அரசு திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது.

வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்புகள்

இந்தத் திட்டங்கள் வேகமாகச் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு இருந்தாலும், உடனடியாக இதன் மூலம் பலன் கிடைக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அடுத்த 2 முதல் 6 வருடத்தில் இத்திட்டங்கள் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

கல்லூரி மாணவர்கள்

கல்லூரி மாணவர்கள்

இத்திட்ட பலன்களைத் தற்போது தற்போது கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்குப் பெரிய அளவில் உதவும். இதேவேளையில் சந்தையில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் நிலையில் தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இது ஜாக்பாட் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamilnadu Govt aims to create more jobs: New manufacturing corridor, Spicot, IT parks

Tamilnadu Govt aims to create more jobs: New manufacturing corridor, Spicot, IT parks
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X