பட்ஜெட்டுக்கு முன் தமிழ்நாடு அரசு வெளியிட்ட தரவுக் கொள்கை.. எதற்காக..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2022-23-ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிக்கை மார்ச்18-ம் தேதி காலை 10 மணிக்குத் துவங்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார்.

 

இந்நிலையில் இன்று தமிழக அரசு மிகவும் முக்கியமான பாலிசியைக் கொண்டு வந்துள்ளது.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பேவரைட் பங்கு.. வாங்கி போடுங்க.. நல்ல லாபம் கொடுக்கலாம்..!

தமிழ்நாடு தரவுக் கொள்கை

தமிழ்நாடு தரவுக் கொள்கை

தமிழக அரசு மக்களுக்கு நல்ல நிர்வாகத்தை வழங்கவும், மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் அணுகல் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்காகப் புதன்கிழமை புதிய தமிழ்நாடு தரவு கொள்கையை வெளியிட்டு உள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு இத்தகைய முக்கியமான கொள்கையை வெளியிட அவசியம் என்ன..? இக்கொள்கையின் மூலம் என்ன நன்மை..?

தரவுகள் அடிப்படையில் முடிவுகள்

தரவுகள் அடிப்படையில் முடிவுகள்

தமிழக அரசின் கொள்கை உருவாக்கம், நிர்வாகம், திட்டங்களை மறுஆய்வு செய்தல் மற்றும் கொள்கைகளை மறுவடிவமைப்பு செய்தல் போன்ற அனைத்து முக்கியமான பணிகளையும், முடிவுகளையும் தரவுகள் அடிப்படையில் எடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த Tamil Nadu Data Policy.

இ-கவர்னன்ஸ் ஏஜென்சி
 

இ-கவர்னன்ஸ் ஏஜென்சி

இப்புதிய தரவு கொள்கையின் படி தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் ஏஜென்சி (TNeGA) அமைப்பு தான் அனைத்துத் துறை சார்ந்த தரவுகளுக்கும் களஞ்சியமாகச் செயல்படும், இது தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் கொள்கைகளை வரைவதற்கும் மாநில அரசு துறைகளுக்கு உதவும்.

துறை வாரியான தரவு

துறை வாரியான தரவு

இப்புதிய கொள்கையானது அரசாங்கத் திட்டங்கள் வகுக்கும் போது ஏற்படும் தவறுகளைக் களைவது மட்டும் அல்லாமல் சிறப்பான முறையில் மக்களுக்கு அரசின் திட்டத்தைக் கொண்டு சேர்க்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் அனைத்து துறைகளின் தரவு பகுப்பாய்வு திறன்களை மேம்படுத்தவும் உக்குவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தரவு அதிகாரி (Data Officer)

தரவு அதிகாரி (Data Officer)

இதேபோல், ஒவ்வொரு துறையிலும் உள்ள தரவு அதிகாரி தான் தத்தம் துறையில் இருக்கும் தரவுகளைச் சேகரிக்க வேண்டும். மேலும் தரவுகள் சார்ந்த அனைத்து உதவுகளையும், பணிகளையும் தரவு அதிகாரி (Data Officer) தான் செய்ய வேண்டிய பொறுப்பும் அளிக்கப்பட்டு உள்ளது.

என்ன பயன்..?

என்ன பயன்..?

இப்படி ஒவ்வொரு துறையிலும் அதிகப்படியான தரவுகளைச் சேகரிக்கும் போது துறை சார்ந்த திட்டத்தையும், முடிவுகளையும் மிகவும் திறம்பட எடுக்க முடியும். ஆனால் இந்தப் பணிகளைச் செய்வதில் பல சவால்கள் உள்ளதை மறுக்க முடியாது, ஆனால் அடுத்தச் சில வருடத்தில் இந்தத் தரவு சேகரிப்பை ஸ்ட்ரீம்லைன் செய்வது மூலம் கார்ப்ரேட் நிறுவனத்தில் இருக்கும் சிறப்பான நிர்வாகத்தைத் தமிழ்நாட்டில் கொண்டு வர முடியும்.

தவறுகளை கண்டறிதல்.

தவறுகளை கண்டறிதல்.

இதேபோல் தரவு சேகரிப்பு மூலம் எந்த இடத்தில் தவறு நடக்கிறது, எந்த இடத்தில் அரசின் திட்ட பலன்கள் மக்களுக்குக் கிடைப்பது இல்லை என்பதை எளிதாகக் கண்டறிய முடியும். இத்தகையை டேட்டா பாலிசிகள் பல முன்னணி வல்லரசு நாடுகளில் துறைவாரியாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

முக ஸ்டாலின் தலைமையிலான திமுகக் கட்சி கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சியைப் பிடித்த நிலையில் பல ஆய்வு பணிகளுக்குப் பின்பு, போதுமான நிதியியல் சார்ந்த தரவுகளைத் திரட்டிய பின்பு ஆகஸ்ட் 13-ம் தேதி, முக ஸ்டாலின் தலைமையிலான அரசின் திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

தமிழகப் பட்ஜெட் 2022

தமிழகப் பட்ஜெட் 2022

இந்நிலையில் 10 மாதத்திற்குப் பின்பு முழுப் பட்ஜெட் அறிக்கையை வெளியிட உள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். நாளை வெளியிடப்படும் பல முக்கியமான வளர்ச்சி மற்றும் வருமானம் ஈட்டும் திட்டங்களுக்கு இந்தத் தரவுக் கொள்கை பெரிய அளவில் உதவும். மேலும் தரவு கொள்கை குறித்து அறிவிப்புகள் கட்டாயம் பட்ஜெட் 2022 அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamilnadu Govt unveils Data Policy: What are benefits and challenges

Tamilnadu Govt unveils Data Policy: What are benefits and challenges பட்ஜெட்டுக்கு முன் தமிழ்நாடு அரசு வெளியிட்ட தரவுக் கொள்கை.. எதற்காக..?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X