அமித் ஷா வந்தது தமிழ்நாட்டுக்கு ஜாக்பாட் தான் போங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீகார் தேர்தல் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று சென்னை வந்தார்.

 

இவரது சென்னை பயணம் குறித்துச் சமுக வலைத்தளத்தில் பல தரப்பட்ட கருத்துக்கள் நிலவினாலும், அமித் ஷா-வின் சென்னை பயணத்தில் தமிழ்நாட்டுக்கு சில நல்ல விஷயங்கள் நடந்துள்ளதை நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.

அமித் ஷா-வின் இந்த 2 நாள் பயணத்தில் தமிழ்நாட்டில் சுமார் 67,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.

சென்னை குடிநீர்

சென்னை குடிநீர்

எப்போதும் இல்லாத வகையில் கடந்த 10 வருடத்தில் சென்னைக்கு வரும் மக்கள் எண்ணிக்கை அதிகமாகி வரும் காரணத்தால் சென்னை நகரம் பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்து வளர்ச்சி அடைந்த வருகிறது.

இதனால் சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 5வது நீர்த்தேக்கத்தை உருவாக்க சுமார் 380 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல நாட்டப்பட்டு உள்ளது.

சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ

சென்னை போக்குவரத்துப் பெரிய அளவில் மாறும் என அதிகளவிலானோர் நம்பும் சென்னை மெட்ரோவின் 2ஆம் கட்ட திட்டத்தைத் துவக்கி வைத்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா.

நீண்ட நாட்களாகக் கிடப்பில் இருக்கும் சென்னை மெட்ரோவின் 2ஆம் கட்ட திட்டம் தற்போது துவங்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர் நெடுஞ்சாலை
 

கோயம்புத்தூர் நெடுஞ்சாலை

கொங்கு மண்டலத்தின் தலைநகரான கோயம்புத்தூர்-ஐ இணைக்கும் நெடுஞ்சாலை திட்டத்திற்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

இதனால் கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களுக்கு மத்தியிலான போக்குவரத்து அதிகரிப்பது மட்டும் அல்லாமல் மாநிலத்தின் பெரு நகரங்களுக்கும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் போக்குவரத்து நேரம் குறைந்து வர்த்தகம் மேம்படும்.

காவேரி ஆறு

காவேரி ஆறு

மேலும் கரூர் மாவட்டத்தில் நீர் நிலையை மேம்படுத்தக் காவேரி ஆற்றுக்குக் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டமும் மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷாவின் 2 நாள் பயணத்தில் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஐஓசிஎல்

ஐஓசிஎல்

இதேபோல் தமிழ்நாட்டில் பெட்ரோலிய துறையின் முன்னணி நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப் லிமிடெட் நிறுவனத்தின் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளார் அமித் ஷா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamilnadu laid foundation stone for Rs67,000 crore schemes on Amit shah 2 day chennai trip

Tamilnadu laid foundation stone for Rs67,000 crore schemes on Amit shah 2 day chennai trip
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X