மக்களுக்கு இது உடனே தேவை.. தமிழக பட்ஜெட்-ல் இது கிடைக்குமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இன்று நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ள நிலையில், மக்கள் மத்தியில் சில முக்கியமான எதிர்பார்ப்புகள் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அப்படி என்ன மக்கள் எதிர்பார்க்கிறார்கள்..? கண்டிப்பாக நியாயமான கோரிக்கையாகத் தான் உள்ளது.

ஸ்டாலின் தலைமையிலான அரசு

ஸ்டாலின் தலைமையிலான அரசு

ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் முழுமையாக முடியாத நிலையில் பல அறிவிப்புகள் சாமானிய மக்களை மகிழ்வித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் மாநிலத்தின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்குத் திரும்ப வேண்டும் பொருளாதார ஆய்வுக் குழுவை அமைத்துள்ளது தொழிலாளர் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பரவல்

கொரோனா தொற்று பரவல்

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் மீண்டும் பல இடங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், வர்த்தகச் சந்தை பாதித்துள்ளது. இந்த வேளையில் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

வெள்ளை அறிக்கை வெளியீடு
 

வெள்ளை அறிக்கை வெளியீடு

பட்ஜெட் அறிவிக்கும் முன்பே தமிழ்நாட்டின் நிதிநிலையை விவரிக்கும் வெள்ளை அறிக்கை வெளியிட்டதன் மூலம் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கியுள்ளார். இந்தப் பட்ஜெட் அறிக்கையில் அரசின் வருமானத்தை அதிகரிக்கப் பொதுச் சேவைகளின் கட்டணங்களில் ஏதேனும் ஒன்று அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

இந்நிலையில் மக்கள் தற்போது அதிகம் எதிர்பார்ப்பது பெட்ரோல், டீசல் மீதான விலை குறைப்புதான். இந்தியாவில் பெட்ரோல், டீசல் வரலாற்று உச்ச விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர்

சமையல் எரிவாயு சிலிண்டர்

மேலும் நடுத்தரக் குடும்பங்களை அதிகளவில் பாதிக்கும் சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும் எனவும் இதற்கான அறிவிப்பு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் வெளியாகும் என எதிர்பார்க்கின்றனர். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ 100 மானியம் கிடைக்குமா..?

இல்லத்தரசிகளுக்கு 1,000 ரூபாய்

இல்லத்தரசிகளுக்கு 1,000 ரூபாய்

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை இந்தப் பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தாலும். தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலையில் இது சாத்தியமில்லை எனக் கணிக்கப்படுகிறது.

மின்சார கட்டணம்

மின்சார கட்டணம்

மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படுமா என இந்த பட்ஜெட்டில் மக்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். இரு மாதங்களுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்துவதை காட்டிலும் மாதம் ஒரு முறை கட்டணம் செலுத்தும் முறை இருந்தால் மின் கட்டணம் கணிசமாக குறையும் என்பதால் இந்த எதிர்பார்ப்பு.

விவசாயத் துறை பட்ஜெட்

விவசாயத் துறை பட்ஜெட்

இதேபோல் இந்தியாவிலேயே முதல் முறையாக விவசாயத் துறைக்குத் தனியாகப் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைச் சந்தைப்படுத்த புதிய கட்டமைப்பும், உழவர் சந்தை விரிவாக்கம் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

MSME நிறுவனங்கள்

MSME நிறுவனங்கள்

MSME நிறுவனங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நிலையில் இப்பிரிவு நிறுவனங்கள் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மானிய வட்டியில் கடன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கடன் திட்டம் அல்லது மத்திய அரசு அறிவித்துள்ள கடன் திட்டத்தில் மாநில அரசின் சார்பாகக் கூடுதல் மானியத்துடன் கடன். இதில் ஏதேனும் ஒன்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருத்தப்பட்ட பட்ஜெட்

திருத்தப்பட்ட பட்ஜெட்

இவை அனைத்திற்கும் மேலாகத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு கூட்டத்திலும், அதற்கு முன்பும் தெரிவித்த வகையில் இது வெறும் 6 மாதத்திற்கான பட்ஜெட் மட்டுமே என்பதால் முந்தைய அரசு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையைத் தற்போது நிதிநிலையை வைத்து எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை விவரிக்கும் ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட் ஆக மட்டுமே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamilnadu people need Immediate relief on this: Expectations in TN Budget

Tamilnadu people need Immediate relief on this: Expectations in TN Budget
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X