இது வரலாற்று தருணம்.. உலகத்தரம் வாய்ந்த விமான சேவையை வழங்குவோம்.. நெகிழ்ச்சியில் சந்திரசேகரன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏர் இந்தியா நிறுவனத்தினை ஏர் இந்தியா குழுமம் கைபற்றியுள்ள நிலையில், இது உண்மையிலேயே இது வரலாற்று தருணமாகத் தான் பார்க்கப்படுகிறது.

 

பெருத்த கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வந்த ஏர் இந்தியாவின் பங்குகளை விற்கும் முன்னர், பல சவால்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டது எனலாம்.

ஆரம்பத்தியில் பகுதி பங்குகளை வைத்துக் கொண்டு விற்பனை செய்ய முன்வந்தபோது, ஏர் இந்தியாவை வாங்க யாரும் முன் வரவில்லை. எனினும் முழு பங்கினையும் விற்பனை செய்யும் முடிவுக்கு வந்த பின்னர் தான் தற்போது டாடா குழுமம் வாங்கியுள்ளது.

நெகிழ்ச்சியில் ரத்தன் டாடா.. வெல்கம் பேக் ஏர் இந்தியா.. பழைய புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சி..!

தொடர் பிரச்சனைகளில் ஏர் இந்தியா

தொடர் பிரச்சனைகளில் ஏர் இந்தியா

ஆரம்பத்தில் கடன் பிரச்சனை, நிதி நெருக்கடி, சம்பள பிரச்சனை, ஊழியர்கள் போராட்டம், ஏர் இந்தியா கெய்ர்ன் எனர்ஜி பிரச்சனை இப்படி பலவற்றிற்கும் மத்தியில் தான் தற்போது தனியார்மயமாக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஏர் இந்தியாவை தனியார்மயமாக்க விட்டால் இந்த நிறுவனத்தை மூட வேண்டியிருக்கும். இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டது.

டாடா வசம் சென்ற ஏர் இந்தியா

டாடா வசம் சென்ற ஏர் இந்தியா

இதன் பின்னர் தான் தனியார்மயமாக்கும் முடிவுக்கு ஒரு வழியாக தீர்வு கிடைத்தது எனலாம். எப்படியோ பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் டாடா குழுமம் தற்போது மீண்டும் ஏர் இந்தியவினை கைபற்றியுள்ளது. அதுவும் 68 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டாடாவின் வசமே சென்றுள்ளது வரலாற்று தருணமாகவே பார்க்கப்படுகிறது.

இது வரலாற்று தருணம்
 

இது வரலாற்று தருணம்

இந்த நிலையில் தான் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன், இது ஒரு வரலாற்று தருணம். நாட்டின் கொடியை தாங்கும் விமான நிறுவனத்தை வழி நடத்துவது, எங்களது அரிய பாக்கியம் என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார். இதே போல டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடா 68 ஆண்டுகளுக்கு பிறகு தாயகம் திரும்பும் ஏர் இந்தியாவை வெல்கம் பேக் ஏர் இந்தியா என நெகிழ்ச்சி பொங்க தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உலகத்தரம் வாய்ந்த சேவை

உலகத்தரம் வாய்ந்த சேவை

மேலும் இது குறித்து தனது கருத்தினை கூறியுள்ள சந்திரசேகரன், டாடா குழுமம் உலகத்தரம் வாய்ந்த விமான சேவையை உருவாக்க முயற்சி செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ஏர் இந்தியா நிறுவனத்தினை ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த ஒரு விமான நிறுவனமாக மாற்றுவதே எங்களின் முயற்சியாக இருக்கும்.

ரொக்கம், கடன் எவ்வளவு?

ரொக்கம், கடன் எவ்வளவு?

உப்பு முதல் சாப்ட்வேர் வரையில் வெற்றிகரமாக கோலேச்சி வரும் ஜாம்பவான் ஆன, டாடா இன்று வெற்றிகரமாக ஏர் இந்தியாவை வென்றுள்ள ஏலதாரராக மாறியுள்ளது. இது 18,000 கோடி ரூபாய்க்கு ஏலமெடுத்துள்ள நிலையில், 15,300 கோடி ரூபாய் கடனினை ஏற்றுக் கொண்டுள்ளதோடு, மீத தொகையை ரொக்கமாக செலுத்தவும் ஏற்றுக் கொண்டுள்ளது.

DIPAM-மின் கருத்து

DIPAM-மின் கருத்து

இது குறித்து DIPAM செயலாளர், இரு ஏலதாரர்களும் இருப்பு விலைக்கு மேலே தான் மேற்கோள் காட்டினர். எனினும் டாடா இந்த ஏலத்தில் வென்றுள்ளது. இந்த பரிவர்த்தனையானது டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அஜய் சிங்கின் ஏல விலை

அஜய் சிங்கின் ஏல விலை

ஏர் இந்தியாவினை வாங்க மற்ற சில நிறுவனங்களும் ஆர்வம் தெரிவித்திருந்த நிலையில், இந்த நிறுவனத்தினை வாங்க குறைந்தபட்ச விலையாக 12,906 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனை ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அஜய் சிங் 15,000 கோடி ரூபாய்க்கு கேட்டிருந்த நிலையில், டாடா நிறுவனம் 18,000 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் கேட்டிருந்தது. இந்த நிலையில் தான் ஏர் இந்தியா டாடாவின் வசம் செல்கின்றது.

விமான துறையில் அனுபவம்

விமான துறையில் அனுபவம்

டாடா நிறுவனம் ஏற்கனவே இரு விமான நிறுவனங்களிலும் பங்குகளை வைத்துள்ளது. இது குறிப்பாக ஏர் ஏசியா நிறுவனத்தில் 84% பங்கினையும், விஸ்தாரா நிறுவனத்தின் 51% பங்கினையும் வைத்துள்ளது. இந்த நிலையில் டாடா சன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவினையும் வாங்கியுள்ளது. இது ஏர் இந்தியாவினை உலகத் தரம் வாய்ந்த ஒரு நிறுவனமாக உருவெடுக்க உதவும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata group wins Air India A historic moment: Chairman N chandrasekaran promotes World class airline

Tata group wins Air India A historic moment: Chairman N chandrasekaran promotes World class airline
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X