இந்தியாவில் வேகமாக வளர்ந்து இந்திய ரீடைல் சந்தையில் அமேசான், பிளிப்கார்ட், ஜியோமார்ட் ஆகிய நிறுவனங்கள் கடுமையாகப் போட்டி போட்டு வரும் நிலையில், டாடாவும் டிஜிட்டல் ஈகாமர்ஸ் வர்த்தகத்திற்கு இறங்குவதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறது.
டாடா-வின் வருகை முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய போட்டியாக இருந்தாலும், டாடாவின் வருகைக்கு முன்பு அனைத்து நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனக் கடுமையாகத் திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் டாடா குழுமம் தனது டிஜிட்டல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்காக இத்துறையின் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் விற்பனையில் சிறந்து விளங்கும் பிக்பேஸ்கட் நிறுவனத்தில் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்யப் பேச்சுவார்த்தை வருகிறது டாடா.
டாடா -வின் இந்த முயற்சி இந்திய ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
{photo-feature}