இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவத் துவங்கியுள்ள நிலையில் நாளை பிரதமர் மோடி முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.
இக்கூட்டத்தில் மீண்டும் லாக்டவுன் தேவையா, பூஸ்டர் வேக்சின் போடுவது குறித்து, லாக்டவுன் கட்டுப்பாடுகள் எப்படி அதிகரிப்பது, புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் மக்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கு.. அமெரிக்கா ஆய்வறிக்கை சொல்வதென்ன?

ஒமிக்ரான் தொற்று
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று அதிகரிக்கும் வேளையில் கோவிட் தொற்றை வேகமாகக் கண்டுபிடிக்கும் டெஸ்டிங் முறையை டாடா மெடிக்கல் & டைக்னாஸ்டிக்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளதாக அறிவித்துள்ளது.

டாடா எம்டி செக் எக்ஸ்பிரஸ்
டாடா நிறுவனம் தற்போது தயாரித்துள்ள டாடா எம்டி செக் எக்ஸ்பிரஸ் RT-PCR சோதனையை விரைவாகவும், அதிகளவிலும், சரியான தரவுகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்ற கட்டுப்பாகள் நிறைந்த இடத்தில் பயன்படுத்த முடியும், உதாரணமாக விமான நிலையம், விழா அல்லது நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பயன்படுத்த முடியும் என டாடா மெடிக்கல் & டைக்னாஸ்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2022 பிப்ரவரி
தற்போது நடத்தப்பட்டு உள்ள ஆய்வில் இந்தியாவில் 2022 பிப்ரவரி மாதம் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகளவில் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியா முழுவதும் RT-PCR கோவிட் டெஸ்ட் செய்ய வேண்டிய கட்டாயம் அதிகமாகும் எனவும் டாடா மெடிக்கல் & டைக்னாஸ்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெஸ்டிங் கிட்
டாடா மெடிக்கல் நிறுவனத்தின் 'Tata MD CHECK XF' கிட் மூலம் 30 சாம்பிள்களை ஓரே நேரத்தில் பரிசோதனை செய்ய முடியும், அதேபோல் 1 மணிநேரத்தில் ரிசல்ட் கிடைத்து விடும் என டாடா மெடிக்கல் தெரிவித்துள்ளது. மேலும் ICMR அமைப்பு டாடா நிறுவனத்தின் புதிய சொல்யூஷன் 95 சதவீதம் உணர்திறன் மற்றும் 100 சதவீதம் விவரக்குறிப்புக் கொண்டதாக அறிவித்துள்ளது.

ICMR அமைப்பு
இதேபோல் மற்றொரு கிட்-ஐயும் டாடா உருவாக்கியுள்ளது, இதில் 90 சேம்பிள்-ஐ 90 நிமிடத்தில் பரிசோதனை செய்யும் திறன் கொண்டது இதன் பெயர் Tata MD CHECK RT-PCR Fast 3Gene. இதை ICMR அமைப்பு 100 சதவீதம் உணர்திறன் மற்றும் 100 சதவீதம் விவரக்குறிப்பு கொண்டதாக அறிவித்துள்ளது.