டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் காரணமாக பெரும்பாலான துறைகள் பெருத்த அடி வாங்கின. அந்த வகையில் ஆபரணத் துறையும் பெருத்த அடி வாங்கியது. இதன் காரணமாக டாடா குழுமத்தின் ஆபரணத் துறையை சேர்ந்த டைட்டன் நிறுவனமும் பெரும் பின்னடைவை சந்தித்தது.
ஏனெனில் கொரோனா காலகட்டத்தில் மக்கள் கையில் பணப்புழக்கம் குறைந்தது. இதன் காரணமாக அத்தியாவசியம் தவிர, மற்றவற்றிற்கு செலவு செய்வதை மக்கள் குறைத்தனர்.
மாறாக சமீப வாரங்களாகவே தேவைகள் மீண்டு வந்து கொண்டுள்ளன. நுகர்வுகள் அதிகரித்து வருகின்றன.

மீண்டு வரும் ஆபரண வர்த்தகம்
இதற்கிடையில் வரவிருக்கும் விழாக்காலங்களில் தேவை அதிகரிக்கும். இதனால் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவினால் முடங்கி போயிருந்த ஆபரண வர்த்தகம், இந்த காலகட்டத்தில் முழுவதும் மீண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது நெருக்கடியான காலகட்டத்தில் இருந்து, வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது. இது மூன்றாவது காலாண்டில் முழு மீட்புக்கு அருகில் வளர்ச்சியினையும் கண்டுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் நஷ்டம்
இது அடுத்து வரும் காலாண்டில் இன்னும் வளர்ச்சி துளிர்விடலாம் என்றும் எதிர்பார்ப்பதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 297 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டது. இதே செப்டம்பர் காலாண்டில் 37.81% சரிந்து 199 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டது. இதே கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 320 கோடி ரூபாய் லாபத்தில் இந்த நிறுவனம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நிறுவனம் எதிர்பார்ப்பு
அதோடு வரவிருக்கும் விழாக்காலத்தில் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. ஏனெனில் பலத்த சரிவுக்கு பிறகு தற்போது தான் ஏற்றத்தினை கண்டு வருவதாகவும் கூறியுள்ளது. ஆக மூன்றாவது காலாண்டு
அவ்வளவாக மோசமாக இருக்காது. ஜூவல்லரி வர்த்தக மீட்பு பிரிவில் இருந்து, வளர்ச்சி பிரிவுக்கு திரும்பியுள்ளது. இதனால் இறுதி காலாண்டில் எதிர்பார்ப்பினை விட நன்றாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் வணிகத்தில் கவனம்
நாட்டில் வளர்ந்து வரும் டிஜிட்டல் துறையில் தற்போது டைட்டன் நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளார்கள் தங்கள் விருப்பத்தின் மூலம் நேரிடையாகவும், ஆன்லைனிலும்
வாங்கலாம். தனிஷ்க் மற்றும் டைட்டன் நிறுவனங்கள் அதன் பொருட்களை ஆன்லைனில் பட்டியிலிட தொடங்கியுள்ளது.

தேவை அதிகரிக்கும்
கடந்த ஆண்டில் பெரும்பாலான திருமணங்கள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதன் காரணமாக நுகர்வோர் நகை வாங்குவதனையும் ஒத்தி வைத்தனர். இதனால் வரவிருக்கும் முகூர்த்த நாட்களில் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக விற்பனை களைகட்டலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் டாடாவுக்கு இது நல்ல காலமே.