தீவிரமாக களம் இறங்கிய டாடா குழுமம்.. ஏர் இந்தியாவை வாங்க ஆர்வம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விடிவு காலமே வராதா? ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே இந்த நிறுவனத்தினை தனியார்மயமாக்க அரசு கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றது.

ஏர் இந்தியாவின் பெருத்த கடன் பிரச்சனை காரணமாக, இந்த நிறுவனத்தின் பகுதி பங்குகளை விற்க அரசு முடிவெடுத்தது. ஆனால் அரசின் இந்த முடிவு கைகொடுக்கவில்லை.

இதன் பின் 100% பங்குகளை விற்பதற்கு அரசு முடிவெடுத்தது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

டாடா சன்ஸ் ஆர்வம்
 

டாடா சன்ஸ் ஆர்வம்

இதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏலத்தில் கலந்து கொள்வதற்கான டெண்டர் படிவத்தினை தாக்கல் செய்வதற்கு ஆகஸ்ட் 31 கடையாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏர் இந்தியாவை டாடா குழுமத்தினை சேர்ந்த டாடா சன்ஸ் நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கான விண்ணப்பங்கள் விரைவில் முறையாக விண்ணப்பிக்கபப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்டுகிறது.

கடன் பிரச்சனை

கடன் பிரச்சனை

மத்திய அரசின் நிறுவனமான இது நீண்டகாலமாக கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், அதனை எப்படியாவது விற்றுத் தீர்த்தால் போதும், கடன் பிரச்சனையை முடித்தால் போதும் என போராடி வருகின்றது. ஏற்கனவே முழுமையாக பங்குகளை வாங்கும் ஏலதாரர்களுக்கு நிர்வாகக் கட்டுப்பாடு மாற்றித் தரப்படும் என்றும் கூறப்பட்டது.

கடைசி தேதி

கடைசி தேதி

இதற்காக மற்ற நிறுவனங்கள் தங்களது வெளிப்பாட்டை EoI சமர்பிக்க ஆகஸ்ட் 31 -ம் தேதியினை காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது. ஏசாட்ஸ் என்பது ஏர் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு இடையிலான ஒரு கூட்டு நிறுவனமாகும். இது தரை கையாளுதல் சேவைகளை வழங்கி வருகிறது. ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ், ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ், ஏர்லைன் அலையட் சர்வீசஸ், ஹோட்டல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா போன்றவைகள் ஏர் இந்தியா துணை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

இதெல்லாம் இல்லை
 

இதெல்லாம் இல்லை

இந்த துணை நிறுவனங்கள் அனைத்தும் ஏர் இந்தியா அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் (ஏஐஏஎச்எல்) என்ற தனி நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்படும். மேலும் தற்போது முன்மொழியப்பட்ட பரிவர்த்தனையின் கீழ், இந்த துணை நிறுவனங்கள் எதுவும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பலத்த கடன்

பலத்த கடன்

ஏர் இந்தியா நிறுவனம், நீண்ட காலமாக இழப்பினை சந்தித்து வரும் நிலையில் கடந்த மார்ச் 2019 நிலவரப் படி ஏர் இந்தியாவின் கடன் 58,351.93 கோடி ரூபாயாகும். பல்வேறு நிறுவனங்கள் ஏர் இந்தியாவை வாங்க ஆர்வம் தெரிவித்து இருந்தாலும், இந்திய நிறுவனமான டாடா குழுமம் வாங்கும் பட்சத்தில் அதன சேவையை இன்னும் விரிவுபடுத்த முடியும்.

ஏற்கனவே ஏர் ஏசியாவில் 51% பங்குகளை வைத்துள்ள டாடா குழுமம், ஏர் இந்தியாவினை வாங்கினால் இந்தியாவில் தனது காலாடியை விமானத் துறையில் காலூன்றலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata sons may take over air india

Govt invites bids to sell 100 percent stakes in air india, and the last date of submitting express of interest to the transaction adviser in august 31. Tata group is likely make a formal bid to take over Air india.
Story first published: Sunday, August 16, 2020, 13:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X