டாடா விஸ்தாராவின் 48 மணி நேர அதிரடி.. 995 ரூபாய்க்கு Flight Ticket..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் விமான சேவை வியாபாரத்தில் முதலில் குதித்த தனியார் கம்பெனி என்றால் அது டாடா தான். பின்னாளில், டாடா ஏர்லைன்ஸ் தான் ஏர் இந்தியாவாகவும், இந்தியன் ஏர்லைன்ஸ் என பிரிந்தன. அரசுடமையாக்கப்பட்டன.

 

மீண்டும் விமான சேவை வியாபாரத்தில், விஸ்தாரா என்கிற பெயரில் களம் இறங்கி கல்லா கட்டிக் கொண்டு இருக்கிறது டாடா குழுமம். இந்த முறை தனியாக இல்லை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் சேர்ந்து வியாபாரம் செய்து வருகிறது.

விஸ்தாரா தன் வியாபாரத்தைத் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகி இருக்கிறதாம். இதை கொண்டாடும் விதத்தில் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறது டாடா விஸ்தாரா.

அந்த சர்ப்ரைஸ்

அந்த சர்ப்ரைஸ்

வெறும் 995 ரூபாய்க்கு, டாடாவின் விஸ்தாரா விமான டிக்கெட்டுகளை விற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த சலுகை ஜனவரி 10, 2020 நள்ளிரவு வரை மட்டும் தானாம். ஜனவரி 25, 2020 முதல் 30 செப்டம்பர் 2020 வரை எந்த நாளில் வேண்டுமானாலும் விமான டிக்கெட் புக் செய்து கொள்ளலாமாம்.

வகுப்புகள்

வகுப்புகள்

அதற்குள் விமான டிக்கெட்டை புக் செய்பவர்கள் செய்து கொள்ளலாமாம். தள்ளுபடி விலை அனைத்து வகுப்புகளுக்கும் வழங்கி இருக்கிறதாம். எகானமி, பிரீமியம் எகானமி, பிசினஸ் க்ளாஸ் என மூன்று வகுப்புகளை வைத்திருக்கிறது டாடா விஸ்தாரா. புதிய சலுகை விலை இந்த 3 வகுப்புகளுக்கும் அறிவித்து இருக்கிறார்கள்.

உள்நாடு + வெளிநாடு
 

உள்நாடு + வெளிநாடு

டாடா விஸ்தாராவில் உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் பயணிக்கலாமாம். எனவே இந்த இரண்டு நாளில் தள்ளுபடி விலையைப் பயன்படுத்தி விமான டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளச் சொல்கிறார்கள். அதோடு இந்த சலுகை விலை முதலில் முந்திக் கொள்பவர்களுக்கு மட்டும் தானாம். குறிப்பிட்ட இருக்கைகள் தான் இந்த சலுகை விலைக்கு வழங்குவார்களாம்.

உள்நாடு விலை விவரம்

உள்நாடு விலை விவரம்

இந்திய நகரங்களுக்குள்ளேயே பயணிக்க குறைந்தபட்ச விலைகள் கீழ் வருமாறு...

மும்பை - டெல்லி 2,955 ரூபாய்

மும்பை - கோவா 1,995 ரூபாய்

டெல்லி - பெங்களூரு 3,355 ரூபாய்

மும்பை - பெங்களூரு 2,055 ரூபாய்-க்கு விற்றுக் கொண்டு இருக்கிறார்களாம்.

வெளிநாடு விலை விவரம்

வெளிநாடு விலை விவரம்

விஸ்தாரா இண்டர்நேஷனல் வழியாக, வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்களில் குறைந்தபட்ச விமான கட்டணங்கள் கீழ் வருமாறு...

டெல்லி - பேங்காக் - 14,995 ரூபாய்

டெல்லி - சிங்கப்பூர் 20,495 ரூபாய்

மும்பை - கொழும்பு - 14,555 ரூபாய்

மும்பை - துபாய் 18,555 ரூபாய்

மும்பை - சிங்கப்பூர் 21,995 ரூபாய் என விற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

995 ரூபாய்க்கு

995 ரூபாய்க்கு

ஆக 995 ரூபாய்க்கு வழித் தடங்களே இல்லையா எனக் கேட்டால், இருக்கு... அஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கும் திப்ருகரில் (Dibrugarh) இருந்து மேற்கு வங்கத்தில் இருக்கும் பக்டோக்ரா-க்கு (Bagdogra) தான் 995 ரூபாய் முதல் விமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இது தான் டாடா விஸ்தாரா வலைதளத்தில் சொல்லப்பட்டு இருக்கும் மிகக் குறைந்த விலை.

மற்ற விலை விவரங்களை பார்க்க லிங்கை க்ளிக் செய்யவும்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata vistara Rs 995 flight ticket offer

The Tata vistara airline has announced the 5th anniversary price offer for their flights.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X