ஐடி சேவை துறையில் எப்போதும் இல்லாத போட்டி கடந்த 2 வருடமாக உருவாகியுள்ளது, குறிப்பாக லாக்டவுன்-க்கு பின்பு வர்த்தகம் கைப்பற்றுவதில் இருந்து, ஊழியர்களைப் போட்டி நிறுவனங்களில் இருந்து கைப்பற்றுவது வரையில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஒவ்வொரு நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் மதிப்பீடு பெரிய அளவில் மாறியுள்ள நிலையில் உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஐடி நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு.. ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் தான்..!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
பிராண்ட் பைனான்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அதிக மதிப்புடைய ஐடி சேவை நிறுவனங்கள் பட்டியலில் இந்திய நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 2வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. ஆனால் முதல் இடத்தை அடைய பல வருடமாகப் போராடி வரும் டிசிஎஸ் நிறுவனத்திற்கு இது பெரும் தோல்வியாகத் தான் உள்ளது.

அக்சென்சர்
முதல் இடத்தை 36.2 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய மதிப்பீடு உடன் அக்சென்டர் பெற்றுள்ளது. இதன் மூலம் உலகிலேயே அதிக மதிப்புடைய மற்றும் வலிமையான ஐடி சேவை அளிக்கும் நிறுவனமாக அக்சென்சர் திகழ்கிறது. இதுமட்டும் அல்லாமல் இந்தியாவின் முன்னணி 4 ஐடி நிறுவனங்களின் மொத்த வருவாயை அக்சென்சர் நிறுவனம் சிங்கிளாகப் பெறுகிறது.

இந்திய ஐடி நிறுவனங்கள்
அக்சென்சர் முதல் இடத்தையும் டிசிஎஸ் 2வது இடத்தையும் பெற்ற நிலையில், 3வது இடத்தை இன்போசிஸ், 7வது இடத்தை விப்ரோ, 8வது இடத்தில் ஹெச்சிஎல், 15வது இடத்தில் டெக் மஹிந்திரா, 22வது இடத்தில் LTI நிறுவனங்கள் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் பிராண்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் 25 இடத்திற்குள் நுழைந்துள்ளது.

அமெரிக்கா - இந்தியா
மேலும் டாப் 10 வேகமாக வளர்ச்சி அடையும் ஐடி சேவை நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் 6 முன்னணி நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க ஐடி நிறுவனங்களின் சராசரி வளர்ச்சி விகிதம் வெறும் 7 சதவீதமாக இருக்கும் நிலையில் இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் 2020-22 காலகட்டத்தில் 51 சதவீதமாக உள்ளது.