ஐடி நிறுவனங்களின் அதிரடி முடிவு.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்.. ஏன் தெரியுமா.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் சூழலில் ஐடி நிறுவனங்கள், இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாகத் தான் அலுவலகத்திற்கு திரும்ப கூறி வந்தன.

 

ஆனால் தற்போது ஓமிக்ரான் அச்சம் எழுந்துள்ளது. சொல்லப்போனால் நாளுக்கு நாள் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஊழியர்களுக்கு அலுவலகம் திரும்புவது இன்னும் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள், ஓமிக்ரான் தாக்கம் முன்பு வரையில் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்துக் கொண்டிருந்தன. ஆனால் தற்போது பற்பல சவால்கள் நிலவி வருகின்றன.

ஹெச்1பி விசா கட்டுப்பாடு நீக்கம்.. இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!

ஓமிக்ரான் அச்சம்

ஓமிக்ரான் அச்சம்

இந்தியாவில் தற்போது 213 ஓமிக்ரான் வழக்குகள் பதிவாகியுள்ளன. இது மேற்கோண்டு வரவிருக்கும் நாட்களில் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. மத்திய அரசும் தேவைப்பட்டால் இரவு நேர கடுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. இதற்கிடையில் நாளை இது குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாளை விவாதிக்கப்படலாம் என்ற நிலை இருந்து வருகின்றது.

டிசிஎஸ்

டிசிஎஸ்

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், தற்போது அதன் மொத்த ஊழியர்களில் 10 சதவீதம் அலுவலகத்தில் வந்து பணியாற்றுகின்றனர். முன்னதாக படிப்படியாக ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைக்கப்படுவார்கள் என கூறப்பட்ட நிலையில், தற்போது ஓமிக்ரான் காரணமாக அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ்
 

இன்ஃபோசிஸ்

இதே மற்றொரு முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் பெங்களுரிவினை அடிப்படையாக கொண்டது. இதுவும் ஓமிக்ரான் அச்சத்தின் மத்தியில், எச்சரிக்கையான அணுகுமுறையை கையாண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஹெச் சி எல் டெக்னாலஜிஸ்

ஹெச் சி எல் டெக்னாலஜிஸ்

இதே ஹெச் சி எல் டெக்னாலஜிஸ் நிறுவனம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது. ஆக முக்கிய முடிவுகள் நிலையை கண்கானித்து எடுக்கும் என்றும், தற்போதைய நிலையில் 10% ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் வந்து பணிபுரிவதாகவும் தெரிவித்துள்ளது. ஆக தற்போதைக்கு ஹைபிரிட் மாடல் பணியினை தொடர எண்ணுவதாகவும் தெரிவித்துள்ளது.

நாஸ்காம் அறிவிப்பு

நாஸ்காம் அறிவிப்பு

இரண்டாவது காலாண்டின் முடிவுகளின் போது ஐடி நிறுவனங்கள் பலவும் டிசம்பர் மாத இறுதிக்குள் அல்லது ஜனவரி 2022க்குள் ஊழியர்கள் படிப்படியாக அலுவலகத்திற்கு திரும்புவார்கள் என தெரிவித்தது. ஆனால் தற்போது எல்லாம் மாறிவிட்டது. பல சவால்கள் தற்போது சந்தையில் எழுந்துள்ளன. இந்த நிலையில் தான் ஊழியர்கள் ஹைபிரிட் மாதிரியில் பணிபுரிவார்கள் என தெரிகின்றது.

வீட்டில் இருந்து தொடரலாம்

வீட்டில் இருந்து தொடரலாம்

கடந்த நவம்பர் மாதத்தில் நாஸ்காம் புதிய ஆண்டில் இருந்து வாரத்திற்கு மூன்று நாட்கள் 4.5 மில்லியன் பேர் அலுவகத்திற்கு வரலாம் என மதிப்பிட்டிருந்தது. ஆனால் தற்போது ஒமிக்ரான் காரணமாக இதில் மாற்றம் இருக்கலாம். ஆனால் தற்போது அலுவலகத்திற்கு வரும்படி ஊழியர்களை கட்டாயப்படுத்த முடியாது. ஆக இதனால் இன்னும் சில மாதங்களுக்கு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவது தொடரலாம். அப்படி இல்லாவிடில் ஊழியர்கள் ஹைபிரிட் முறையில் பணிபுரியலாம்.

ஊழியர்களின் விருப்பம் என்ன?

ஊழியர்களின் விருப்பம் என்ன?

இது ஐடி ஊழியர்களுக்கு இன்னும் நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், பலரும் அலுவலகம் சென்று பணிபுரிவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. இது எல்லாவற்றிற்கும் ஓமிக்ரான் என்ன பதில் சொல்ல காத்திருக்கின்றதோ? கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS, HCL, Infosys and other IT companies are expected to continue WFH for a few more months due to Omigron

TCS, HCL, Infosys and other IT companies are expected to continue WFH for a few more months due to Omigron/ஐடி நிறுவனங்களின் அதிரடி முடிவு.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்.. ஏன் தெரியுமா.. !
Story first published: Wednesday, December 22, 2021, 19:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X