இந்திய ஐடி நிறுவனங்களில் ஊழியர்களுக்கான தட்டுப்பாடு அதிகமாக இருப்பது அனைவருக்கும் தெரியும், இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க ஐடி நிறுவனங்கள் வழக்கத்தை விடவும் அதிகமாகப்படியான பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் அடுத்த சில வருடத்தில் அதிகச் சம்பளம் வாங்கும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு ஈடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் முன்னணி ஐடி நிறுவனங்கள் மற்றொரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
ஏற்ற இறக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய மெட்டல், ஐடி பங்குகள்..!

ஐடி நிறுவனங்கள்
இந்திய ஐடி நிறுவனங்கள் ஊழியர்களின் வெளியேற்ற விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும், நீண்ட காலம் வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்புகள் தற்போது சந்தையில் உருவாகியிருக்கும் காரணத்தால் அதிகளவிலான பெண் ஐடி ஊழியர்களைப் பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது.

பெண் ஐடி ஊழியர்கள்
பொதுவாகவே ஆண்களை விடவும் பெண்கள் ஒரு நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றும் வழக்கம் கொண்டு உள்ளதால் ஐடி நிறுவனங்கள் பெண்களை அதிகளவில் தனது நிறுவனத்தின் அனைத்து மட்ட பணிகளிலும் நியமிக்க முடிவு செய்துள்ளது.

லாக்டவுன்
கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போதே டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற முன்னணி ஐடி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களாகுக்காகப் பணியை விட்டு வீட்டில் இருக்கும் பணி அனுபவம் கொண்ட பெண் ஊழியர்களை அதிகளவில் தேடித்தேடி பணியில் அமர்த்தியது.
இது நிறுவனங்களுக்கும் சரி, பெண் ஊழியர்களுக்கும் சரி பெரிய அளவில் உதவியது.

டிசிஎஸ்
இதன் வாயிலாகத் தற்போது நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பெண் ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. இது டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையான 5,56,986 பேரில் 36 சதவீதமாகும்.

உயர் பதவிகளில் பெண்கள்
அதிலும் குறிப்பாக உயர் பதவிகளின் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை 2016-21 ஆம் ஆண்டுகளில் சுமார் 68 சதவீதம் அதிகரித்துள்ளதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது. மேலும் டிசிஎஸ் நிறுவனத்தில் பெண் ஊழியர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்போசிஸ், டிசிஎஸ்
இதேபோல் டிசிஎஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் 2,92,067 மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் பெண் ஊழியர்கள் மட்டும் 39.6 சதவீதம் பேர். இதேபோல் விப்ரோ நிறுவனத்தின் 2,31,671 ஊழியர்களில் 36.3 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.