நாட்டின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம், GE நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்தான ஆளூகை மாற்றங்களையும், அரசு அனுமதி, தேவையான செயல்பாடுகளை முடிந்ததும், டிசிஎஸ் GE நிறுவனத்தின் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும் என கூறியுள்ளது.
அதோடு டிசிஎஸ் GE-ன் பங்குகளை டிசிஎஸ்க்கு மாற்றுவதற்கான இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

டிசிஎஸ் – GE கூட்டணி
கடந்த 2013ம் ஆண்டில் ஜிஇ உடன் இணைந்து டிசிஎஸ் ரியாத்தில் ஆல் கைண்டு ஆஃப் பிசினஸ் புராசஸ் சர்வீசஸ் செண்டரை உருவாக்கியது. இது குறித்து டிசிஎஸ் கூறுகையில் கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த மையம் 20 பேரேருடன் ஆரம்பித்தத்து, இன்று கிட்டதட்ட 2000 பெண் ஊழியர்களாக விரிவடைந்துள்ளது.

பல விருதுகள்
இந்த கூட்டணி பல விருதுகளையும் வாங்கியுள்ளது. குறிப்பாக கடந்த 2019ல் the King Khalid Awards, 2018ல் ‘Responsible Competitiveness உள்பட பல விருதுகளை வென்றுள்ளது. இதற்கிடையில் டிசிஎஸ்ஸின் பங்கு விலையானது இன்று 3,172 ரூபாயாக ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது.

நிகரலாபம்
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலாண்டு முடிவுகள் வெளியானது. அதன் படி, டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 7.18% அதிகரித்து, 8,701 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 8,118 கோடி ரூபாயாக நிகரலாபம் கண்டிருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் 42,015 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 5.42 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது 4.68 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டில் இதே காலாண்டில் டிசிஎஸ்ஸின் வருவாய் 39,854 கோடி ரூபாயாக இருந்தது. இதே கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 40,135 கோடி ரூபாயாக இருந்தது.

டிவிடெண்டும் உண்டு
இதற்கிடையில் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, டிசிஎஸ் நிறுவனம் இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்கிற்கு 6 ரூபாய் அறிவித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஒன்பது ஆண்டுகள் மிக வலுவான காலாண்டு வருவாயினை இந்த டிசம்பர் காலாண்டில் கண்டுள்ளது. இது பல புதிய ஒப்பந்தங்கள் மற்றும் நிலையான நாணய வருவாய் என பல காரணங்களினால் கண்டுள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டில் இலக்கு
எப்படி இருப்பினும் 2021ம் நிதியாண்டு எதிர்ப்பார்பினை போலவே நல்ல வளர்ச்சியினைக் காணலாம். அடுத்த 2022ம் நிதியாண்டிலும் டிசிஎஸ் நிறுவனம் இரட்டை இலக்க வளர்ச்சியினை காணலாம் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என கோபிநாதன் கூறியுள்ளார். ஆக அடுத்த ஆண்டிலும் நிச்சயம் நாங்கள் இரு இலக்க வளர்ச்சியினை காண்போம் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.