ஈகாமர்ஸ் விற்பனையாளர்களுக்கு ஜாக்பாட்.. வெறும் 0.25% டிடிஎஸ் மட்டுமே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பட்ஜெட் தாக்கல் செய்யும் நாள் நெருங்கி வரும் நிலையில் எப்போதும் இல்லாத வரையில் மக்கள் மத்தியில் இந்த வருட பட்ஜெட் அறிக்கைக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

இதற்கு முக்கியக் காரணம் 2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் இருந்து மிகவும் குறைந்த காலகட்டத்தில் மீண்டு வர மத்திய அரசு அதிகளவிலான வர்த்தக வாய்ப்புகளையும், தளர்வுகளையும் அளிக்கும் என அனைத்து தரப்பினரும் நம்புகின்றனர்.

இந்நிலையில் ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் இருக்கும் சிறு விற்பனையாளர்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் TDS குறைக்கப் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

2020ல் கொரோனா தொற்று அதிகரித்த காரணத்தால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்க வேண்டிய மோசமான நிலை ஏற்பட்டது. இதன் எதிரொலியாக மக்கள் அதிகளவில் ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தத் துவங்கினர்.

கொரோனா இந்தியா மக்களைப் புரட்டிப்போட்ட இதே நிலையில் ஈகாமர்ஸ் துறையைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

ஈகாமர்ஸ் துறை வளர்ச்சி

ஈகாமர்ஸ் துறை வளர்ச்சி

இதனால் 2020ல் டிஜிட்டல் வர்த்தகச் சந்தை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்த நிலையில் இத்துறையில் புதிய விற்பனையாளர்களை ஈர்க்கவும், அதிகளவிலான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவும் இண்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பு சிறிய விற்பனையாளர்களுக்கான TDS அளவீட்டை 1 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதமாகக் குறைக்கக் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈகாமர்ஸ் சிறு விற்பனையாளர்கள்
 

ஈகாமர்ஸ் சிறு விற்பனையாளர்கள்

ஈகாமர்ஸ் துறையில் வர்த்தகம் செய்யும் விற்பனையாளர்கள் அனைவருக்கும் ஓரே வரி விதிப்பு இருக்கும் நிலையில், இந்த வரிவிதிப்பால் சிறு விற்பனையாளர்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிறு விற்பனையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், இப்பிரிவு விற்பனையாளர்களுக்கு மட்டும் 1 சதவீத TDS-ஐ 0.25 சதவீதமாகக் குறைக்க வலியுறுத்தியுள்ளது IAMAI அமைப்பு.

மத்திய நிதியமைச்சகம்

மத்திய நிதியமைச்சகம்

தனிநபர் வருமான வரிப் பிரிவில் 80சி கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரிச் சலுகை அளிக்கப்படும் நிலையில், இதன் அளவீட்டை 3,00,000 ரூபாய் வரையில், அதாவது இரட்டிப்புச் செய்ய வேண்டும் என Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI) அமைப்பு மத்திய நிதியமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதைப் போல் இண்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பு ஆன்லைன் விற்பனையாளர்களின் டிடிஎஸ் வரியை குறைக்கப் பரிந்துரை செய்துள்ளது.

TDS குறைப்பு

TDS குறைப்பு

இந்தியாவில் ஈகாமர்ஸ் வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்த இண்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பின் TDS குறைப்பு பரிந்துரையை ஏற்றுக் குறைத்தால் சிறு விற்பனையாளர்களுக்குப் பெறும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TDS may reduce from 1% to 0.25% for small e-commerce sellers in union budget 2021

TDS may reduce from 1% to 0.25% for small e-commerce sellers in union budget 2021
Story first published: Thursday, January 28, 2021, 21:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X