அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகில் பல நாடுகளில் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையைச் செய்து வரும் டெஸ்லா, இந்தியாவிலும் தனது வர்த்தகத்தை செய்வதற்காக, புதிதாக ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்து பெங்களூரில் அலுவலகத்தைத் துவங்கி 3 பேரைத் தலைவராகவும் நியமித்துள்ளது.
டெஸ்லா இந்தியாவில் அலுவலகத்தைத் துவங்கியது கார் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வரிச் சலுகைக்காக எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா செய்துள்ள வேலை அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஸ்டெலான்டிஸ்.. ஆட்டோமொபைல் துறையை கலக்க வரும் புதிய நிறுவனம்.. 52 பில்லியன் டாலர் டீல்..!

டெஸ்லா அமெரிக்கா
அமெரிக்க நிறுவனமான டெஸ்லா வரிச் சலுகை நிறைந்த நெதர்லாந்து நாட்டின் வாயிலாக இந்தியச் சந்தைக்குத் தேவையான முதலீட்டைச் செய்ய முடிவு செய்து. டெஸ்லா மோட்டார்ஸ் ஆம்ஸ்டர்டாம் நிறுவனத்தின் கீழ் டெல்லா மோட்டார்ஸ் மற்றும் எனர்ஜி என்ற இந்திய நிறுவனத்தைப் பதிவு செய்துள்ளது.

டெஸ்லா இந்தியா
இதன் மூலம் இந்திய நிறுவனமான டெல்ஸா மோட்டார்ஸ் மற்றும் எனர்ஜி நிறுவனத்தின் தாய் நிறுவனம் அமெரிக்க டெஸ்லா நிறுவனம் இல்லை, ஆம்ஸ்டர்டாம் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் தான். இந்தத் திட்ட வடிவம் மூலம்
டெஸ்லா கேப்பிடல் கெயின்ஸ் மற்றும் டிவிடென்ட் பேமெண்ட்ஸ் ஆகியவற்றுக்கு வரிச் சலுகை பெற முடியும்.

கியா மற்றும் எம்ஜி மோட்டார்ஸ்
சமீபத்தில் இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்கிய இரு முக்கியக் கார் நிறுவனங்கள் தனது தாய் நிறுவனத்தின் கீழ் தான் இந்திய நிறுவனத்தைப் பதிவு செய்துள்ளது. 2017ல் இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்கி எம்ஜி மோட்டார்ஸ்
தனது தாய் நிறுவனமான சீன SAIC மோட்டார்ஸ் கீழ் தான் பதிவு செய்துள்ளது. இதேபோல் கியா மோட்டார்ஸ் தனது இந்திய நிறுவனத்தைத் தென் கொரிய தாய் நிறுவனமான கியா கார்ப் கீழ் தான் பதிவு செய்துள்ளது.

ஏன் நெதர்லாந்து??
டெஸ்லா கலிபோர்னியாவில் பதிவு செய்யப்பட்ட தாய் நிறுவனம், இதன் கிளை நிறுவனமான டெஸ்லா மோட்டார்ஸ் நெதர்லாந்து-ல் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் வரி சலுகைக்காகவும், வலிமையான intellectual property பாதுகாப்பு இருக்கும் காரணமாக அதிகளவில் தேர்வு செய்யும் இடம் நெதர்லாந்து-ஆக உள்ளது.

மொரிஷியஸ், சிங்கப்பூர்
இந்தியா மொரிஷியஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உடன் அன்னிய முதலீட்டுக்கான வரி ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், கேப்பிடல் கெயின்ஸ்-க்கு வரிச் சலுகை பெற வாய்ப்பு இல்லை. இதனாவ் டெஸ்லா நெதர்லாந்து வழியைப் பயன்படுத்தி கேப்பிடல் கெயின்ஸ்-க்கு பயன்படுத்தியுள்ளது.