ஜாக் மா-வை ஓரம்கட்டிய டெஸ்லா ராக்ஸ்டார் 'எலான் மஸ்க்'..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா, சீனா, அமெரிக்கா உட்படப் பல நாடுகளில் டெக் நிறுவனங்களின் மதிப்பு பெரிய அளவில் உயர்ந்துள்ளதன் எதிரொலியாகத் தற்போது உலக நாடுகளில் டெக் நிறுவன தலைவர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் புதிய பணக்காரர்களின் எண்ணிக்கையும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாகச் சீனாவில் வரலாறு காணாத அளவிற்குப் புதிய பணக்கார்ரகளின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்துள்ளது.

 

இப்படியிருக்கும் சூழ்நிலையில் சீனாவின் மாபெரும் பணக்காரராக விளங்கும் ஜாக் மா-வை அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனம் டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

முதல் இடம்

முதல் இடம்

சீனாவின் ஹூரன் செய்தி வெளியிட்டுள்ள 2020ஆம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இந்த முறையும் வழக்கம் மோல் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பீசோஸ் தான் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ஆனால் கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் இவரது சொத்து மதிப்பு 5 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ஜெப் பீசோஸ்-ன் விவாகரத்தின் காரணமாக ஏற்பட்ட சொத்துப் பிரிப்பு தான்.

2வது இடம்

2வது இடம்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆடம்பர லைப்ஸ்டைல் பொருட்கள் நிறுவனமான LVMH நிறுவனம் இந்த வருடம் 2க்கும் மேற்பட்ட ஆடம்பர பிராண்டுகளை வாங்கிய காரணத்தால் இந்நிறுவனத்தின் உரிமையாளர் பெர்னார்டு அர்னால்டு ஆகியோரின் சொத்து மதிப்பு 24 சதவீதம் வரையில் அதிகரித்து 107 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

பில் மற்றும் வாரன்
 

பில் மற்றும் வாரன்

பெர்னார்டு அர்னால்டு 2வது இடத்திற்கு முன்னேறியதால் இந்த முறை மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ் (106 பில்லியன் டாலர்) மற்றும் Berkshire Hathaway நிறுவன தலைவர் வாரன் பபெட் (102 பில்லியன் டாலர்) ஆகியோர் 3வது மற்றும் 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகளவில் பேட்டரி கார்கள் அதிகளவிலான வரவேற்பு கிடைக்கும் காரணத்தால் தற்போது சீனாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக விளங்கும் ஜாக் மா அவர்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளார் டெஸ்லா கார் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்.

2020ஆம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 45 பில்லியன் டாலர் மதிப்புடன் ஜாக் மா 21வது இடத்தைப் பிடித்துள்ளார். 20வது இடத்தை 46 பில்லியன் டாலர் மதிப்புடன் எலான் மஸ்க் படித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tesla's Elon Musk richer than Alibaba's Jack Ma at $46 bn: Hurun Rich List

Tesla CEO Elon Musk rose up 10 places among the world's billionaires as Tesla share price doubled and is now the world's 20th richest person with $46 billion wealth, Hurun Global Rich List 2020 released on Wednesday said. Musk is richer than Alibaba's Jack Ma, whose wealth stands at $45 billion. However, Jack Ma remains to be China's richest person.
Story first published: Saturday, February 29, 2020, 7:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X