ஆன்லைன் ஷாப்பிங்-ல் புதுப் பிரச்சனை.. காரணம் மக்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் பிற எந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் ஈகாமர்ஸ் அதாவது ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகம் மற்றும் அதன் வளர்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது. இன்றைய நிலையில் இந்திய ரீடைல் வர்த்தகத்தின் மொத்த சந்தை மதிப்பு 600 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் இந்த 600 பில்லியன் டாலர் ரீடைல் வர்த்தகத்தில் வெறும் 5 சதவீதம் தான் ஈகாமர்ஸ் துறையைச் சார்ந்து உள்ளது. வல்லரசு நாடு எனக் கூறப்படும் அமெரிக்காவில் ஈகாமர்ஸ் 15 சதவீத வர்த்தகத்தை மட்டுமே ஆட்சி செய்கிறது.

 

இப்படி இருக்கையில் இந்தியாவில் ஈகாமர்ஸ் துறைக்கு எனப் பிரச்சனை..? மிகப்பெரிய பிரச்சனை இருக்கு, வாங்கப் பார்ப்போம்.

டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜியோ

டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜியோ

பொதுவாக ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்கள் அனைவருமே இண்டர்நெட் பயன்படுத்துவோர் தான். இப்படியிருக்கையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட டிஜிட்டல் இந்தியா மற்றும் ஐியோ ஆகியவை உலகின் வல்லரசு நாடுகளை விடவும் மிகவும் குறைவான கட்டணத்தில் இண்டர்நெட் சேவை கிடைக்கிறது. இதனால் நாளுக்கு நாள் இண்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் ஆன்லைன் ஷாப்பிங் செய்வோரின் எண்ணிக்கை என்னவோ பெரிதாக உயரவில்லை. இவர்களை எப்படி ஈகாமர்ஸ் தளத்திற்குள் கொண்டுவருவது என்பதே தற்போது ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக விளங்குகிறது.

டேட்டா கட்டணம் விபரம்

டேட்டா கட்டணம் விபரம்

அமெரிக்காவில் ஒரு ஜிபி இண்டர்நெட் டேட்டா 12.37 டாலர், பிரிட்டனில் 6.66 டாலர். இந்தியாவில் நீங்கள் யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்குக் குறைவான விலையில் சேவை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் ஒரு ஜிபி இண்டர்நெட் டேட்டா வெறும் 0.26 டாலர் மட்டுமே.

முக்கியத் தரவுகள்
 

முக்கியத் தரவுகள்

இதேபோல் இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2019இல் 66.5 கோடி பேர், இந்த எண்ணிக்கை 2021இல் 82.9 கோடியாக உயரும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் இண்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெரிய அளவில் வளர்ச்சி இருக்கப்போவது உறுதியாகியுள்ளது.

ஈகாமர்ஸ்

ஈகாமர்ஸ்

இந்திய ஈகாமர்ஸ் துறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை என்னவோ வெறும் 5 கோடி, ஆனால் அதில் 2 கோடி மக்கள் மட்டுமே ஆக்டிவாக ஷாப்பிங் செய்கிறார்கள் என்பது தான் இத்துறையின் சோகமாக விஷயம்.

இண்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வோரின் எண்ணிக்கை என்னவோ ரொம்பவும் குறைவாக இருக்கிறது.

மக்கள்

மக்கள்

இந்த எண்ணிக்கை வித்தியாசத்தைப் பார்க்கும் போது மக்களுக்குப் போதிய சேவை கிடைக்காமல் ஈகாமர்ஸ் தளத்திற்குள் வர தடையாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இப்படியிருக்கையில் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனம், மத்திய அரசு எப்படி UPI பணப் பரிமாற்றத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தோ அதேபோல் ஈகாரமஸ் துறையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க ஏதுவான வங்கி பரிமாற்றம் மற்றும் எளிய கடன் ஆகியவற்றை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

வளர்ச்சி

வளர்ச்சி

இந்தியாவில் ஈகாமர்ஸ் துறை வந்த பின்பு நாட்டில் சரக்கு விநியோக முறை மற்றும் அதன் தரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இது ஈகாமர்ஸ் துறையில் மட்டுமல்ல பல துறைகளில் இதன் வளர்ச்சி நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. குறிப்பாகச் சிறு சிறு கிராமங்களுக்குக் கூடத் தற்போது கூரியர் சேவை வழங்கப்படுகிறது.

இப்படி இருக்கையில் ஈகாமர்ஸ் துறையை வைத்து நாட்டின் பிற துறையை வளர்ச்சி அடைய மத்திய அரசு சில சாதகமான முடிவுகளை எடுத்தாலும் சரி எனச் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் சொல்வது போல் எளிய கடன் வசதி கொடுத்தால் நாட்டு மக்கள் அனைவரும் கடனாளியாக மாறிவிடுவோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The biggest challenge facing e-commerce sector in India

India’s total internet user base is set to grow from 665 million in 2019 to 829 million by 2021. So, the inherent potential of the market is undeniable. And, yet, ecommerce remains highly underpenetrated with only 50 million online shoppers, of whom only 20 million are active monthly purchasers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X