செக்ஸ் தப்பில்லை.. இந்திய பெண் தொழிலதிபர்களிடம் பெரும் மன மாற்றம்.. டேட்டிங் ஆப் பயன்பாடு அதிகரிப்பு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அவர்கள் ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை தயக்கமின்றி ஓட்டுகிறார்கள், அவர்கள் சாகச விளையாட்டுகளின் வேகத்தை விரும்புகிறார்கள், அவர்கள் உறவுகளைப் பற்றி குரல் கொடுக்கிறார்கள், அவர்கள் பாலியல் சமத்துவ தன்மையை நம்புகிறார்கள் யார் அவர்கள்?

 

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், அச்சமின்றி இருக்கும் கலையில் தேர்ச்சி பெற்ற இன்றைய பெண்கள் தொழில்முனைவோர்கள்தான் அவர்கள்.

இன்றைய இந்தியா கண்ட மாபெரும் மாற்றம் பெண் தொழில்முனைவோரின் பங்களிப்புதான். இவர்களின் வாழ்க்கை முறை எப்படி என்பது பற்றி அதிக செய்திகள் வெளியே வந்ததில்லை. ஆனால், சமீபத்தில் வெளியான ஒரு சுவாரசிய ஆய்வு, இந்த இளம் பெண் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்களின் வெளியே தெரியாத மற்றொரு பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

டிரெண்ட் மாறுகிறது

டிரெண்ட் மாறுகிறது

இந்திய சூழலில் பல ஆண்டுகளாக செக்ஸ் ஒரு தடைசெய்யப்பட்ட விஷயமாக உள்ளது, ஆனால் அந்த டிரெண்ட் இப்போது, வேகமாக மாறிவருகிறது. 7 நகரங்களில் 18 முதல் 34 வயதுக்குட்பட்ட 80% க்கும் மேற்பட்ட இந்தியர்களிடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, உறவின் முக்கிய அம்சம் செக்ஸ் என்று நம்புகிறார்கள். பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட 80% பேர் தங்கள் செக்ஸ் உறவை செயல்படுத்தி பார்க்க ஆர்வமாக இருப்பதாக கூறினர்.

உயர்வர்க்க மக்கள்

உயர்வர்க்க மக்கள்

இந்த கணக்கெடுப்பு இந்தியாவின் நகர்ப்புற மற்றும் உயர் நடுத்தர வருமான பிரிவினரிடையே நடத்தப்பட்டது. பெண் தொழில்முனைவோரும் இந்த கணக்கெடுப்பில் அதிகம் பங்கேற்றனர். டேட்டிங் செய்வது அவர்களுக்கு எளிதான ஒரு விஷயமாக இருப்பதாக கூறுகிறார்கள். அவர்களின் தொழில்நுட்ப அறிவு அவர்களுக்கு மற்றவர்களை விட அதிக வாய்ப்புகளை தருகிறது. மேலும் அவர்கள் சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதில்லை.

தொழிலுக்காக டேட்டிங்
 

தொழிலுக்காக டேட்டிங்

நேஹா பாசின் (பெயர் மாற்றப்பட்டது) என்ற இளம் பெண் தொழிலதிபர், இதுபற்றி கூறுகையிில், டிண்டர் டேட்டிங் ஆப் காரணமாக எனது வணிக யோசனைக்கு வடிவம் கொடுக்கக்கூடிய சரியான நபரை கண்டுபிடித்துவிட்டேன். "நான் டிண்டரில் சில சந்தேகங்களுடன் சேர்ந்தேன். ஆனால், என்னைப் போன்ற ஒத்த லட்சியங்களைக் கொண்ட ஒரு நபரை நான் அங்கே சந்தித்தேன். பல மாதங்களாக டேட்டிங் செய்தபின், நாங்கள் இருவரும் ஒரு நிறுவனத்தைத் தொடங்க முடிவு செய்து எங்கள் லட்சியத்தை நோக்கி செயல்பட முடிவு செய்தோம். நாங்கள் இன்று ஒரே டீமில் இருக்கிறோம் " என்று அவர் கூறினார்.

டெல்லி, மும்பை, பெங்களூர் டாப்

டெல்லி, மும்பை, பெங்களூர் டாப்

டிண்டர் இந்தியாவில் 2016 இல் அறிமுகமானது, அதன் பின்னர் ஹாட் டாப்பிக்காக மேல்தட்டு மக்களிடம் இது மாறியது. இந்தியாவில் 2018 இல் தினசரி 7.5 மில்லியன் ஸ்வைப்களை டிண்டர் பெற்றது. டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் குருகிராம் ஆகியவை 2018 ஆம் ஆண்டிற்கான உலகளவில் பயன்பாட்டின் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

டிண்டர் உட்பட பல ஆப்கள்

டிண்டர் உட்பட பல ஆப்கள்

இந்தியாவில் டேட்டிங் அப்ளிகேஷன் சந்தை விரிவடைகிறது. சமீபத்திய ஆண்டுகளில் டிண்டர், கிரைண்டர், பம்பிள், கீல், காபி மீட்ஸ் பேகல், குவாக்க்வாக் மற்றும் ஒகேகியூபிட், அத்துடன் ட்ரூலிமட்லி போன்ற உள்ளூர், வெளிநாட்டு அப்ளிகேஷன்கள் கணிசமானோரால் பயன்படுத்தப்படுகிறது. "இந்தியா சமூக மற்றும் கலாச்சார விஷயங்களில் வேகமாக மாறிவரும் நாடு. சமீபத்திய வரலாற்றில் தற்போதையதைப் போல இந்தியா இதற்கு முன்பு உற்சாகமாக இருந்தது இல்லை. தொழில்துறையில், பெண்களின் எழுச்சி மற்றும் இணையம் / மொபைல் புரட்சி ஆகியவை பெண்கள் மனநிலையை மாற்றியமைத்துள்ளன " என்று ஒகேகியூபிட் சிஎம்ஓ, மெலிசா ஹோப்லி தெரிவிக்கிறார்.

டேட்டிங் மார்க்கெட்

டேட்டிங் மார்க்கெட்

ஆன்லைன் மார்க்கெட் ஆராய்ச்சியில் ஈடுபடும் 'ஸ்டாடிஸ்டா' கருத்துப்படி, இந்திய ஆன்லைன் டேட்டிங் சந்தையில் யூசன் பரவல் 2018 இல் 2.7% ஆக உள்ளது, இது 2023 க்குள் 3.2% ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டேட்டிங் ஆப்ஸ் மூலம், சரியான நபரைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் எரிச்சலூட்டும் வேலைதான். எனவேதான் சில பெண்கள் டேட்டிங் ஆப் வந்துவிட்டு, சில வாரங்களில் அதை கைவிடுகிறார்கள் என்கிறார்.

சமரசம்

சமரசம்

"பெரும்பாலான நல்ல விஷயங்களைப் போலவே, டேட்டிங் ஆப்களில் சில பின்விளைவுகளும் உள்ளதை மறுக்க முடியாது. இருப்பினும், இந்திய இளம் பெண்கள் தங்கள் விருப்பங்களில் சமரசம் செய்யாமல், பாதுகாப்பை கடைபிடிப்பது எப்படி என அறிவார்கள். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லப்படுவதற்குப் பதிலாக, அல்லது மற்றவர்கள் தங்கள் சார்பாகத் எதையாவது தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, இன்றைய இளம் இந்தியர்கள், குறிப்பாக நிதி ரீதியாக சுதந்திரமான பெண்கள், ஒரு நபருடன் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் அடிப்படையில் தங்கள் விருப்பங்களைத் தேர்வு செய்ய விரும்புகிறார்கள்," என்கிறார் ஹோப்லி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The dating app market in India become expand

The dating app market in India become expand in the recent years, says statistics.
Story first published: Thursday, November 21, 2019, 16:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X