இந்தியாவுக்கு கிரேட் சான்ஸ்.. ரஷ்யாவின் அணுகலுக்கு பலன் கிடைக்குமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஷ்யா - உக்ரைனுக்கு மத்தியில் , ரஷ்யா மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க தொடங்கியுள்ளது.

 

குறிப்பாக ரஷ்யாவின் ரூபிள் மதிப்பானது மிக மோசமாக வலுவிழந்து காணப்படுகின்றது. மேலும் பொருளாதார தடை அறிவிப்புகளினால் அன்னிய செலாவணி கரன்சியான ரூபிள் மதிப்பிலேயே ரஷ்யா செலுத்தி வருகின்றது.

இதனால் கடன்களை தொடர்ந்து திருப்பி செலுத்த முடியாமல் போகலாம். இது வாராக்கடனாக மாறிவிடும் என மூடீஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது. அதுமட்டும் அல்ல மே 4ம் தேதிக்குள் அமெரிக்க டாலர்களில் கடனை செலுத்தாவிட்டால், திவால் நிலை என கருத வேண்டியிருக்கும் என மூடிஸ் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

மூடீஸ் எச்சரிக்கை

மூடீஸ் எச்சரிக்கை

ரஷ்யா வெளிநாடுகளில் வாங்கிய கடன் பத்திரங்களுக்கான முதிர்வு காலம் மே 4ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், அதற்குள் டாலருக்குள் கடன் தொகையை செலுத்த வேண்டியிருக்கும். அப்படி ரஷ்யா டாலரில் கடனை திரும்ப செலுத்தாவிடில் திவாலானதாக இருக்கும் என மூடீஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே இதேபோன்று ஸ்டாண்டர்ஸ் அன்ட் பூர்ஸ் ரேட்டிங் நிறுவனம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பற்றாக்குறை

பற்றாக்குறை

பொருளாதார தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவில், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் மளிகை பொருட்கள் தீர்ந்துவிட்டதால், இந்திய சில்லறை விற்பனையாளர்களையும், வேளாண் ஏற்றுமதியாளர்களையும் அணுகுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சப்ளை நிறுத்தம்
 

சப்ளை நிறுத்தம்

ரஷ்யாவின் முக்கிய சப்ளையராக இருந்து வரும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டாவது மாதமாக சப்ளையை நிறுத்தியுள்ளது.

இதற்கிடையில் ரஷ்யாவில் ஆரஞ்சு மார்மலேட், மாம்பழ ஜாம், பாஸ்தா, ஓட்ஸ் ஃப்ளேக்ஸ், பான் கேக் கலவை, ஸ்பாகெட்டி, பாசுமதி அரிசி, காபி, டீ, கார்ன்ஃப்ளேக்ஸ், ரம், கெட்ச் அப் மற்றும் இறால் ஆகியவையும் அடங்கும்.

ரூபாய் - ரூபிளில் பரிமாற்றம்

ரூபாய் - ரூபிளில் பரிமாற்றம்

அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் ஸ்விப்ட் சேவையை ரஷ்யாவில் தடை செய்த நிலையில், ரஷ்யாவின் பரிமாற்றத்தினை பெரிதும் முடக்கியுள்ளது. இதற்கிடையில் இந்தியாவும் ரஷ்யாவும் ரூபாய் - ரூபிளில் மாற்று கட்டண முறையை உருவாக்கி வருகின்றன.

ரஷ்யாவின் கோரிக்கை

ரஷ்யாவின் கோரிக்கை

மளிகை பொருட்கள், மசாலா பொருட்கள் மற்றும் பிற உணவு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக, தெற்கு ரஷ்யாவின் அஸ்ட்ராகானிலில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலான லோடோஸ் என்ற இடத்தில், இந்தியா - ரஷ்யா கூட்டு விவசாய தொழில் பூங்காவை அமைக்குமாறு, இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர் சங்களை ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

பிரச்சனை இருக்காது?

பிரச்சனை இருக்காது?

மேலும் இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் ரஷ்யா நிறுவனங்களை இணைக்கும் வகையில், செவ்வாய்க்கிழமையன்று சந்திப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அதோடு இந்தியா ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்புடன் தேவை என்னவோ அதன் பட்டியலையும் பகிர்ந்துள்ளது. இதற்கிடையில் உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கு எந்த தடையும் இருக்காது என்பதால், இதில் பெரிய பிரச்சனை இருக்காது என்றும் கூறப்படுகிறது.

காலியான டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள்

காலியான டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள்

ரஷ்யாவின் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் சர்க்கரை, பாஸ்தா மற்றும் அரிசி உள்ளிட்ட பல அடிப்படை பொருட்கள் தீர்ந்து விட்டதாக கூறப்படுகின்றது. இதற்கிடையில் தான் பல்வேறு ரஷ்ய நிறுவனங்கள் இந்தியாவினை அணுகி வருவதாகவும் கூறப்படுகின்றது. மேலும் தொடர்ந்து இந்திய சப்ளையர்களை தேடி வருவதாகவும் கூறப்படுகின்றது.

மாற்று ஏற்பாடு

மாற்று ஏற்பாடு

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவற்றால் வழங்கப்பட்டு வந்த உணவு பொருட்களுக்கும், இந்தியாவினை அணுகுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையில் CAITயின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், இந்தியா முழுவதும் உள்ள வர்த்தகர்களுக்கு நாங்கள் தேவையான பட்டியலை ஏற்கனவே அனுப்பியுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

இந்தியர்கள் வரவேற்பு

இந்தியர்கள் வரவேற்பு

ரஷ்யாவின் இந்த அணுகலுக்கு இந்திய விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பு உள்ளது. அவர்கள் ரஷ்யாவுடன் வணிகத்தில் ஈடுபட ஆர்வமாகவும் உள்ளனர். ஏனெனில் இரு நாடுகளின் அரசாங்கங்களும் ரூபாய் - ரூபிளில் பணம் செலுத்தும் முறையில் ஆர்வமாக உள்ளனர். இது ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இங்கிலாந்து சந்தையை இந்தியாவுக்கு மாற்ற வழிவகுக்கும். இந்த பேச்சு வார்த்தைகளுக்கு மத்தியில் ஜூன் மாதத்தில் இருந்து இந்தியாவில் இருந்து ஏற்றுமதிகள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான பார்வை இல்லை

தெளிவான பார்வை இல்லை

எனினும் இந்த பரிவர்த்தனைகளுக்கு எப்படி பணம் செலுத்த போகிறார்கள், எப்படி ஏற்றுமதி செய்யப்படும் என்ற தெளிவான பாதை இல்லை. எப்படியிருப்பினும் இந்திய விற்பனையாளர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் இது மிகச்சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான சிறந்த வாய்ப்பினை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா தயாராக உள்ளது. ஆக நிச்சயம் இந்தியா இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

There is a shortage of food and many other items in Russia. Will India supply?

There is a shortage of food and many other items in Russia. Will India supply?/இந்தியாவுக்கு கிரேட் சான்ஸ்.. ரஷ்யாவின் அணுகலுக்கு பலன் கிடைக்குமா?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X