நடப்பு ஆண்டில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக கிரிப்டோகரன்சி குறித்தான பல்வேறு சாதக, பாதகமான நிகழ்வுகள் நிகழ்ந்தன.
கொரோனாவிற்கு மத்தியில் டிஜிட்டல் துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கிடையில் வளர்ந்து வரும் தொழில் நுட்பமாக இருக்கும் பிளாக்செயின் அடிப்படையில் உள்ள கிரிப்டோகரன்சிகள் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது.
Zomato, swiggy, Ola, Uber: ஜனவரி 1 முதல் 5% ஜிஎஸ்டி வரி விதிப்பு.. மக்களுக்குப் பாதிப்பா..!!
இவை எதிர்காலத்தில் மிகப்பெரிய டிஜிட்டல் அசெட்களாக மாறக்கூடும் என சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.

பைனான்ஸ் காயின்
இதற்கிடையில் நடப்பு ஆண்டில் பிட்காயின், எதர் தவிர 1,000% ஏற்றத்தில் காணப்படும் கரன்சிகளை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். இதில் பைனான்ஸ் காயின் கிட்டதட்ட 1,300% ஏற்றத்தில் காணப்படுகின்றது. பிஎன்பி எனப்படும் பைனான்ஸ் காயின், கிரிப்டோ சந்தையில் மிகப்பெரிய வால்யூமினை கொண்ட ஒரு காயினாக உள்ளது.

பிட்காயின் & எதர்
பிளாக்செயின் அடிப்படையில் இயக்கும் காயினான இது, பைனான்ஸ் ஸ்மார்ட் செயினின் சொந்த நாணயமாகும்.
இதற்கிடையில் நடப்பு ஆண்டில் பிட்காயின் 62% அதிகரித்துள்ளது. இது நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து, 21,000 டாலர்களுக்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே மற்றொரு பெரிய கிரிப்டோகரன்சியான எதர் 400% மேலாக அதிகரித்துள்ளது.

சோலானா & பேண்டம் ஏற்றம்
மற்றொரு கவனிக்க வேண்டிய நாணயம் ஆல்ட்காயின். இதுவும் நடப்பு ஆண்டில் கணிசமான லாபத்தினை கண்டுள்ளது. சில பெரிய கரன்சிகளை தவிர, பிற நாணயங்கள் அதீத வளர்ச்சியினை கண்டுள்ளன. டோஜ்காயின், ஷிபா இனு, கார்டனோ உள்ளிட்ட காயின்கள் சந்தையில் பெரியளவிலான ஏற்ற இறக்கத்தினை கண்டது. இந்த நிலையில் சோலானா மற்றும் பேண்டம் உள்ளிட்ட காயினை சிறப்பான செயல்பட்டன.

சாதக பாதகமான காரணிகள்
தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு பின் சரிவினைக் கண்டு, பிற்பாதியில் மீண்டும் ஏற்றத்தினை கண்டது. நடப்பு ஆண்டில் எல் சால்வடார் இந்த ஆண்டு பிட்காயினை சட்டபூர்வ நாணயமாக ஏற்றுக் கொண்டது. இப்படி பல்வேறு சாதகமான விஷயங்கள் வந்தாலும், இந்தியாவில் தடை செய்யப்படலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.