எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை பாருங்க.. சர்பிரைஸ் கொடுத்த நிறுவனம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் வருகைக்கு பிறகு நிறுவனங்கள் ஊழியர்கள் பணிபுரிவதில் பல மாற்றங்களை செய்து வருகின்றன. பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை நிரந்தரமாக வீட்டில் இருந்து பணிபுரிய கூறி வருகின்றன.

 

குறிப்பாக பல ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை, எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம் என கூறி வருகின்றன.

செப்டம்பரில் வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. வரும் வாரங்களில் எப்படியிருக்கும்..!

அந்த வகையில் அக்கவுண்டிங் மற்றும் கன்சல்டிங் நிறுவனமான PwC, அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் 40,000 ஊழியர்களை எங்கிருந்து வேண்டுமானலும் பணிபுரிய அனுமதித்துள்ளது.

பெண்களுக்கு நல்ல வாய்ப்பு

பெண்களுக்கு நல்ல வாய்ப்பு

அதுவும் இது கொரோனா காலத்தில் மட்டும் அல்ல, நிரந்தரமாக ஊழியர்களை எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம் என்று கூறியுள்ளது. இது உண்மையில் ஊழியர்களுக்கு கிடைத்த மிக நல்ல வாய்ப்பு எனலாம். குறிப்பாக பெண் ஊழியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு எனலாம். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் என்னதான் திறமை வாய்ந்த ஊழியர்களாக இருந்தாலும், பெண்கள் திருமணத்திற்கு பிறகு, குழந்தை பிறந்த பிறகு வேலைக்கு செல்ல முடிவதில்லை.

பெண் ஊழியர்களுக்கு வாய்ப்பு

பெண் ஊழியர்களுக்கு வாய்ப்பு

இன்னும் சிலர் நல்ல திறமை மிக்க ஊழியர்களாக இருந்தாலும், அவர்கள் குறைந்த சம்பளத்தில் தங்களது சொந்த ஊர்களிலேயே பணிபுரிவர். ஆக அந்த வகையில் எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம் என்ற கலாச்சாரம் பெண் ஊழியர்களுக்கு இன்னும் நல்ல வாய்ப்பினை கொடுக்கும்.

ஊழியர்களை ஊக்குவிக்கும்
 

ஊழியர்களை ஊக்குவிக்கும்

குறிப்பாக இரவு பணி செய்யும் ஊழியர்களை ஊக்குவிப்பதாக அமையும். டெலாய்ட் மற்றும் கேபிஎம்ஜி போன்ற நிறுவனங்கள் கூட தற்போது, கொரோனா காலத்தில் தொலை தூரத்தில் பணியாற்ற கூறி வருகின்றன. இதற்கிடையில் PwC யின் துணை மக்கள் தலைவர், Yolanda Seals-Coffield, முழு நேர மெய் நிகர் வேலையை கிடைக்கச் செய்த முதல் நிறுவனம் ஆகும்.

மூன்று நாட்கள் வந்தால் போதும்

மூன்று நாட்கள் வந்தால் போதும்

PwC நிறுவனம் ஊழியர்களுக்கு சப்போர்ட் அளிக்கும் விதமாக, எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம் என தெரிவித்துள்ளது. மேலும் மாதத்திற்கு அதிகபட்சம் மூன்று நாட்கள் முக்கியமான சந்திப்புகள் மற்றும் வாடிக்கையாளர்கள் வருகை, பயிற்சிகளுக்கு வர வேண்டியிருக்கும். தொற்று நோயின் மூலம் நாங்கள் ஒன்றை கற்றுக் கொண்டோம். அது எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம் நெகிழ்வு தன்மை தான் என்று Yolanda கூறியுள்ளார்.

சம்பளம் குறைவாக இருக்கலாம்

சம்பளம் குறைவாக இருக்கலாம்

எனினும் இவ்வாறு தாங்கள் விரும்பும் இடத்தில் இருந்து பணிபுரியும் ஊழியர்கள் சம்பள குறைப்பினை காணலாம் என கூறியுள்ளார். ஆல்ஃபாபெட் இன்க் நிறுவனத்தின் ஊழியர்கள் சம்பள விகிதமானது அவர்கள் பணிபுரியும் இடத்தை பொறுத்தது. அவர்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணிபுரிவார்கள் எனில், அவர்களது சம்பளம் என்பது குறைவாகவே இருக்கும்.

எங்களால் நிர்வகிக்க முடியும்

எங்களால் நிர்வகிக்க முடியும்

PwC -யின் பங்குதாரர்கள், குழு உறுப்பினர்கள் அலுவகத்தில் இருப்பதை தேர்வு செய்கின்றனர். ஆனால் நாங்கள் ஒரு பிளெக்ஸிபிள் வேலை மாதிரியை வெற்றிகரமாக பயன்படுத்த முடியும் என நம்புகிறோம். அதனை நிர்வகிக்க முடியும். ஆக தகுதியான 30 - 35% ஊழியர்கள் இந்த சலுகையை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணியமர்த்தல் குறித்தான திட்டம்

பணியமர்த்தல் குறித்தான திட்டம்

PwC நிறுவனத்தில் 55,000 அமெரிக்க ஊழியர்கள் மொத்தம் உள்ளனர். இதே சர்வதேச அளவில் மொத்தம் 2,84,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையில் PwC நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 லட்சம் பேரை பணியமர்த்தும் என்று கூறியுள்ளது. இது உண்மையில் வருங்கால சந்திதியினருக்கு மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

பலதரப்பினரையும் ஊக்குவிக்கும்

பலதரப்பினரையும் ஊக்குவிக்கும்

அதோடு எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம் என்ற கலாச்சாரம் ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறைகளில் அதிகம் இருந்த நிலையில், தற்போது அது மற்ற துறைகளுக்கும் பரவி வருவது நல்ல விஷயமாக பார்க்கப்படுகின்றது. மொத்தத்தில் பிளெக்ஸி கலாச்சாரமானது மேற்கொண்டு பலதரப்பினரையும் ஊக்குவிக்கலாம் எனலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: job வேலை
English summary

This company allow 40,000 employees to work from anywhere

Job latest updates.. This company allow 40,000 employees to work from anywhere
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X