டிக் டாக்கின் அதிரடி முடிவு.. நோ பணி நீக்கம்.. நோ சம்பள குறைப்பு.. கவலை வேண்டாம் ஊழியர்களே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவுக்கும் இந்தியாவும் இடையில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், சீனாவுக்கு எதிரான பல கோஷங்கள் எழுந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சீனாவின் 59 ஆப்களை மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் தடை செய்தது.

TIK TOKன் அதிரடி முடிவு.. பணி நீக்கம், சம்பள குறைப்பு இல்லை
 

இதனால் எத்தனை பேரின் பணிகள் பறிபோகுமோ என்ற பயமும் நிலவி வந்தது. ஆனால் அவர்களுக்கு சற்றே நிம்மதியினைக் கொடுக்கும் விதமாக டிக் டாக் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

முன்னதாக ஒரு அறிக்கையில், 2018ம் ஆண்டு முதல் இந்தியாவில் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் டிக் டாக்கினை பயன்படுத்தி வந்தனர். இதன் மூலம் அவர்களின் திறமையினையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்தி வந்தனர்.

ஊழியர்கள் எங்கள் வலிமை

ஊழியர்கள் எங்கள் வலிமை

மேலும் எங்கள் ஊழியர்கள் தான் எங்களது மிகப்பரிய வலிமை, அவர்களுக்கு நாங்கள் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம். ஆக அவர்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிப்போம். நாங்கள் 2,000-க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ளதால், அவர்களின் நேர்மறையான அனுபவங்களையும் வாய்ப்புகளையும் மீண்டெடுக்க எங்களால் முடிந்த அனைத்தினையும் செய்வோம்.

தீவிர பேச்சு வார்த்தை

தீவிர பேச்சு வார்த்தை

டிஜிட்டல் இந்தியாவின் முக்கியமான ஆப்களில் நாங்கள் தொடர்ந்து பங்கு வகிக்க நினைக்கிறோம். ஆக நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து நெருக்கமான பணியாற்றி வருகிறோம். மேலும் தற்போது நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கத்துடன் இது குறித்து தீவிரமாக பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

டிக் டாக் விரைவில் மீண்டு வரும்
 

டிக் டாக் விரைவில் மீண்டு வரும்

ஆக இந்த நிலைமை மீண்டு வர சில வாரங்கள் ஆகும். டிக் டாக் கடைபிடிக்க வேண்டிய அனைத்து விதிமுறைகளையும், விதிகளையும் சரியாக கடைப்பிடிப்பதாக கூறியவர், இந்தியாவின் நாங்கள் எந்தவொரு சட்டத்தினையும் மீறவில்லை என்றும் கூறியுள்ளார். ஆக இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டவுடன் விரைவில் டிக் டாக் மீண்டு வரும் என்றும் மேயர் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊழியர்கள் முக்கியமானவர்கள்

இந்திய ஊழியர்கள் முக்கியமானவர்கள்

இந்தியா டிக் டாக்கிற்கு மிக முக்கியமான சந்தையாகும். ஆக இந்திய அரசின் நடவடிக்கையினால் இந்திய பணியாளர்களுக்கு பணி நீக்கமோ அல்லது சம்பள குறைப்போ இருக்காது என்றும் நிறுவனம் உறுதியளிக்கிறது. பைட் டான்ஸின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக இருக்கும் கெவின் மேயர், டிக் டாக்கிற்கு எப்படி இந்தியா முக்கியமான சந்தையோ, அதே போல இந்திய ஊழியர்களும் டிக் டாக்கிற்கு முக்கியமானவர்கள் என்றும் கூறியுள்ளது.

இந்த நேரத்தினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

இந்த நேரத்தினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

ஊழியர்களை தங்களின் திறனை மேம்படுத்துவதற்கும், தங்களைத் தாங்களே மேம்படுத்துவதற்கும் இந்த நேரத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மேயர் கூறியுள்ளார்.

உண்மையில் டிக் டாக்கினால் பல ஆயிரம் பேர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு தளமாக இருக்கும் நிலையில், அவற்றை தடை செய்துள்ளது அவர்களின் திறமையோடு, அவர்களின் வாழ்வாதாரமும் முடங்கியுள்ளது. ஆக மீண்டும் பலத்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மீண்டு வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TIk tok CEO said no layoff and salary cut in india

TIk tok CEO Kevin mayer asked employees to make use this time to study and upskill of yourself.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X