டிக்டாக்-இன் அடுத்த அதிரடி Resso.. இசை உலகம் கொண்டாட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனமாகத் திகழும் சீனாவின் பைட்டான்ஸ் டிக்டாக், ஹலோ வரிசையில் தற்போது ரெஸ்ஸோ (Resso) என்னும் புதிய இசை செயலியை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. கலக்கலான UI & UX டிசைன், இதுவரை பார்க்காத வகையிலான சேவைகள் என அசத்துகிறது Resso.

 

ஏற்கனவே இந்தியாவில் பட்டிதொட்டி எல்லாம் டிக்டாக் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது Resso அறிமுகம் செய்து இந்தியாவின் இசை சந்தையும் ஆட்டிப்படைக்க முடிவு செய்துள்ளது.

மாபெரும் போட்டி

மாபெரும் போட்டி

இந்தியாவில் music streaming சேவை பிரிவில் ஏற்கனவே உள்நாட்டு நிறுவனங்களான காணா, ஜியோசாவன், ஏர்டெல் நிறுவனத்தின் Wynk, பன்னாட்டு நிறுவனங்களான ஸ்பாடிபை, ஆப்பிள் மியூசிக், யூடியூப் மியூசிக் எனப் பல நிறுவனங்கள் இருக்கும் நிலையில் தற்போது ByteDance நிறுவனம் இதே துறையில் அடுத்தத் தலைமுறைக்கான music streaming சேவை அளிக்கும் Resso செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இதன் அறிமுகத்தால் இந்தியாவில் மிகப்பெரிய போட்டி உருவாகும் எனத் தெரிகிறது.

இந்தியா

இந்தியா

சீன நிறுவனமாக இருந்தாலும் முதலில் Resso செயலி இந்தியாவில் தான் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து resso இந்தியாவின், மியூசிக் கன்டென்ட் மற்றும் கூட்டணி பிரிவின் தலைவர் ஹரி நாயர் கூறுகையில், ரெஸோ முற்றிலும் இசைக்காகவும், இசை பிரியர்களுக்காவும் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்தச் செயலி சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களை விடத் தனிச்சிறப்பாகத் தெரிய வேண்டும் எனத் தீவிரமாகத் திட்டமிட்டு டிக்டாக்-இல் இருந்து சில முக்கியமான வடிவத்தின் மேல் இது தயாரிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார். நிச்சயம் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வெற்றியை இந்தச் செயலி அடையும் என ஹரி நாயர் தெரிவித்துள்ளார்.

ப்ளேலிஸ்ட்
 

ப்ளேலிஸ்ட்

இந்தச் செயலியில் ஒருவர் உருவாக்கிய ப்ளேலிஸ்ட் மற்றவர்களுக்குச் சென்றடையும் வரையில் வடிவம் உருவாக்கப்பட்டு உள்ளது, இதுமட்டும் அல்லாமல் இந்தச் செயலியில் Vibe என்னும் பியூச்சர் உள்ளது இதன் மூலம் சுயமாக GIF, புகைப்படம், வீடியோ ஆகியவற்றை இந்தச் செயலியில் தயாரிக்கலாம். இது மற்றவர்களுக்குச் செல்லும்.

கிட்டதட்ட அனைத்தும் டிக்டாக் போன்று தான் ஆனால் அனைத்தும் பாடல்கள் அடிப்படையில் தான் இருக்கும்.

உலகிலேயே முதன் முறையாக

உலகிலேயே முதன் முறையாக

இசை உலகில் இதுவரை streaming platform ஆக மட்டுமே இருந்த நிலையில் முதல் முறையாக resso உலகின் முதல் முறையாக social streaming platform அதாவது சமுகவலைதளத்தை இசை உலகிற்குள் இணைத்துள்ளது.

இசை உலகில் மக்கள் கருத்து பரிமாறும் தளத்தை இதற்கு முன் பான்டோரா, ஆர்டியோ ஆகியவை முயற்சி செய்தது, ஆனால் இதில் இரு நிறுவனங்களும் பெரிய அளவிலான தோல்வியைச் சந்தித்து.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TikTok owner Bytedance launches ‘India first’ music streaming platform, Resso

Bytedance, owner of popular short-video platform TikTok, today launched its music streaming service called Resso. The app will take on homegrown competitors like Gaana and JioSaavn, alongside global giants in the space like Spotify and Apple Music.
Story first published: Thursday, March 5, 2020, 6:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X