டிக்டாக்-ன் புதிய சேவை.. இதை எப்படித் தடை செய்ய முடியும்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனா, ஹாங்காங் நாடுகளைத் தாண்டி இந்தியா, அமெரிக்கா, மெக்சிகோ, வியட்நாம், சிங்கப்பூர் என உலகில் சிறியது பெரியது என வித்தியாசம் இல்லாமல் அனைத்து நாடுகளிலும் மிகவும் குறைந்த காலகட்டத்தில் அதிகளவில் பிரபலம் அடைந்த டிக்டாக் நிறுவனம் புதிதாக ஒரு செயலியை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

 

ஷாட் வீடியோ, மியூசிக் என இல்லாமல் இந்த முறை அனைத்து மக்களுக்கு உண்மையிலேயே பயன்படும் வகையில் வேலைவாய்ப்புகள் தேடலுக்குக்கான தளத்தை டிக்டாக் உருவாக்கி உள்ளது, விரைவில் உலக நாடுகள் முழுவதும் இந்தச் செயலி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

ஆன்லைன் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

சீனாவில் ஆன்லைன் கல்வி சேவைகளும், வேலைவாய்ப்பு தேடல் தளங்களும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து உலக நாடுகளுக்கு முன்னோடியாக இருக்கிறது. இதை இந்தியாவிற்கும் கொண்டு வரும் முயற்சியில் தான் தற்போது டிக்டாக் இறங்கியுள்ளது.

ஆன்லைன் கல்வி துறை

ஆன்லைன் கல்வி துறை

ஏற்கனவே ஆன்லைன் கல்வி துறையில் பல முன்னணி சீன நிறுவனங்கள் இந்தியாவிற்கு வர திட்டமிட்ட வேளையில், மொழி வித்தியாசம், வர்த்தகம் வாய்ப்புகள் அளவீடு, ஏற்கனவே இந்தியாவில் ஆதிக்கம் நிறைந்த சில ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் இருக்கும் காரணத்தால் இந்த முயற்சியைக் கைவிட்டது.

உலகம் முழுவதும் டிமாண்ட்
 

உலகம் முழுவதும் டிமாண்ட்

ஆனால் வேலைவாய்ப்பு தேடலுக்கு இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் டிமாண்ட் இருக்கும் காரணத்தால் டிக்டாக் இதில் இறங்கியுள்ளது. இப்பிரிவிலும் பல முன்னணி நிறுவனங்கள் இருந்தாலும் இன்றைய டிஜிட்டல் சேவைத்தளத்திற்கு ஏற்ற வகையில் சேவைகளை அளிக்க முடியும் என டிக்டாக் நம்புகிறது.

முக்கியமான தலைமுறை

முக்கியமான தலைமுறை

மேலும் டிக்டாக்-ன் இந்த வேலைவாய்ப்பு செயலியின் மிக முக்கியமான இலக்கு GenZs எனப்படும் Generation Z பிரிவு மக்கள் தான். அது என்னடா GenZs என்றால் 1997 முதல் 2012 வரையில் பிறந்தவர்கள் தான் GenZs.

முக்கியமான நிறுவனங்கள்

முக்கியமான நிறுவனங்கள்

டிக்டாக் தற்போது இந்த வேலைவாய்ப்பு செயலியை முழுமையாக உருவாக்கிவிட்ட விலையில் பீட்டா குரூப் நிறுவனங்களுடன் மட்டும் இணைந்து சேவைகளை அளித்து வருகிறது. முதற்கட்டமாகவே பெரிய அளவிலான வரவேற்பைப் பெற வேண்டும் பெரிய பிராண்ட் நிறுவனங்கள் உடன் கூட்டணி வைத்துள்ளது.

புதிய செயலி

புதிய செயலி

இப்புதிய செயலியில் நிறுவனங்களில் பதிவிடப்படும் வேலைவாய்ப்புகளை நேரடியாக விண்ணப்பிக்கும் சேவையை வழங்குகிறது. இதுமட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு ரெஸ்யூம் உருவாக்குவதில் அதிகளவிலான சேவைளை அளிக்கிறது. மேலும் டிக்டாக் வீடியோ வாயிலாக ஒருவர் வேலைக்கு விண்ணப்பிக்கும் முறையையும் இந்தச் செயலியில் அறிமுகம் செய்ய உள்ளது டிக்டாக்.

இந்தியாவில் அனுமதி கிடைக்குமா..?!

இந்தியாவில் விரைவில் இச்செயலி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் ஏற்கனே டிக்டாக்-ன் செயலி தடை செய்யப்பட்ட நிலையில் இப்புதிய செயலிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்குமா..?!

தலைமுறை பிரித்தல்

தலைமுறை பிரித்தல்

இப்படித் தான் தலைமுறையைப் பிரிக்கின்றனர்

Lost Generation : 1883 -1900

Greatest Generation : 1901 - 1927

Silent Generation : 1928-1945

Baby boomers : 1946 - 1964

Generation X : 1965 - 1980

Millennials : 1981 - 1996

Generation Z : 1997 - 2012

Generation Alpha: 2010 - 2020

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TikTok to launch job recruitment App for Gen Zs particularly

TikTok latest update.. TikTok to launch job recruitment App for Gen Zs particularly
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X